கார்பனைல் செலீனைடு

வேதிச் சேர்மம்

கார்பனைல் செலீனைடு (Carbonyl selenide) OCSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. நிறமற்ற நேரியல்பு மூலக்கூறாக உள்ள இவ்வேதிச் சேர்மம் ஆராய்வு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

கார்பனைல் செலீனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
செலானைலிடின்மெத்தனோன்
இனங்காட்டிகள்
1603-84-5
ChemSpider 120807
InChI
  • InChI=1S/COSe/c2-1-3
    Key: RQZJHKMUYSXABM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 137100
  • C(=O)=[Se]
பண்புகள்
COSe
வாய்ப்பாட்டு எடை 106.98 g·mol−1
கொதிநிலை −22 °C (−8 °F; 251 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
கார்பனைல் செலினைடு

பண்புகள்

தொகு

கார்பனைல் செலீனைடு விரும்பத்தகாத நெடியைக் கொண்ட ஒரு நிறமற்ற வாயுவாகும். [1] இச்சேர்மம் நிலைப்புத்தன்மை கொண்டதாக இருந்தாலும் இதன் கரைசல்கள் படிப்படியாக தனிமநிலை செலீனியமாகவும் கார்பனோராக்சைடாகவும் மீள்கின்றன. [2]

தயாரிப்பும் பயன்களும்

தொகு

அமீன்கள் முன்னிலையில் செலீனியத்துடன் கார்பனோராக்சைடைச் சேர்த்து சூடாக்குவதன் மூலம் இதை தயாரிக்கலாம். [3]

செலீனோகார்பமேட்டுகள் போன்ற கரிமசெலீனியம் சேர்மங்களின் தயாரிப்பில் செலீனியத்தை உள்ளிணைக்க கார்பனைல் செலீனைடு பயன்படுகிறது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. Pearson, T. G.; Robinson, P. L. (1932), "Carbonyl selenide. Part I. Preparation and physical properties.", Journal of the Chemical Society (Resumed): 652–660, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/jr9320000652
  2. Sonoda, Noboru (1993). "Selenium assisted carbonylation with carbon monoxide". Pure and Applied Chemistry (Great Britain) 65 (4): 699–706. doi:10.1351/pac199365040699. https://www.iupac.org/publications/pac/pdf/1993/pdf/6504x0699.pdf. 
  3. 3.0 3.1 Banert, Klaus (2014). Science of Synthesis Knowledge Updates 2014. Vol. 3. Georg Thieme Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783131763112.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பனைல்_செலீனைடு&oldid=3818173" இலிருந்து மீள்விக்கப்பட்டது