கார்பனைல் புரோமைடு

கார்பனைல் புரோமைடு (Carbonyl bromide) COBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். புரோமோ பாசுசீன் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. தீயை அணைக்கும் கருவிகளில் பயன்படுத்தப்படும் ஆலோன் சேர்மங்களின் சிதைவில் ஒரு விளைபொருளாக கார்பனைல் புரோமைடு தோன்றுகிறது.

கார்பனைல் புரோமைடு
Carbonyl bromide[1]
கார்பனைல் புரோமைடின் கட்டமைப்பு
கார்பனைல் புரோமைடின் கட்டமைப்பு
Ball-and-stick model of carbonyl bromide
Ball-and-stick model of carbonyl bromide
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
கார்பனைல் புரோமைடு
வேறு பெயர்கள்
புரோமோபாசுசீன், கார்பானிக் இருபுரோமைடு
இனங்காட்டிகள்
593-95-3 Y
ChemSpider 71389 Y
InChI
  • InChI=1S/CBr2O/c2-1(3)4 Y
    Key: MOIPGXQKZSZOQX-UHFFFAOYSA-N Y
  • InChI=1/CBr2O/c2-1(3)4
    Key: MOIPGXQKZSZOQX-UHFFFAOYAM
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 79057
  • BrC(Br)=O
UNII MNU12QTS1I Y
பண்புகள்
COBr2
வாய்ப்பாட்டு எடை 187.818 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 15 °செல்சியசில் 2.52 கி/மிலி
கொதிநிலை 64.5 °C (148.1 °F; 337.6 K) சிதையும்
வினைபுரியும்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-127.2 அல்லது -145.2 கிலோயூல்/மோல்−1 (நீர்மம்)
-96.2 அல்லது -114 கிலோயூல்/மோல்−1 (வாயு)
நியம மோலார்
எந்திரோப்பி So298
309.1 யூல்·மோல்−1·கெல்வின்−1 (வாயு)
வெப்பக் கொண்மை, C 61.8 யூல்·மோல்−1·கெல்வின்−1 (வாயு)
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

கார்பன் டெட்ராபுரோமைடை உருக்கி அதனுடன் அடர் கந்தக அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் கார்பனைல் புரோமைடு உருவாகிறது.

பாசுசீனுக்கு மாறாக, கார்பன் மோனாக்சைடு மற்றும் புரோமினில் இருந்து கார்பனைல் புரோமைடை திறமையாக உற்பத்தி செய்ய முடியாது. வெப்ப இயக்கவியல் காரணங்களால் முழுமையான மாற்றமும் சாத்தியமில்லை. கூடுதலாக,

CO + Br2 ⇌ COBr2

அறை வெப்பநிலையில் இவ்வினை மெதுவாக நிகழ்கிறது. வினை வேகத்தை அதிகரிக்க வெப்பநிலையையும் உயர்த்த வேண்டும். இதனால் ΔRH < 0 மற்றும் ΔRS < 0) என்பதால் வேதிச் சமநிலை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது.[2]

மறுபுறம், கார்பனைல் புரோமைடு குறைந்த வெப்பநிலையில் கூட கார்பன் மோனாக்சைடு மற்றும் தனிமநிலை புரோமினாக மெதுவாக சிதைகிறது.[3] நீராற்பகுப்புக்கும் இது உணர்திறன் கொண்டது என்பதால் ஐதரசன் புரோமைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடாக உடைகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. இலைடு, டேவிட்டு ஆர். (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–96, 4–50, 5–26, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. T.A. Ryan; E.A. Seddon; K.R. Seddon; C. Ryan (24 May 1996). Phosgene: And Related Carbonyl Halides. pp. 669–671. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780080538808. பார்க்கப்பட்ட நாள் April 11, 2015.
  3. Katrizsky, Alan R.; Meth-Cohn, Otto; Wees, Charles W. (1995), Organic Functional Group Transformations, vol. 6, Elsevier, pp. 417–8, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-042704-1, பார்க்கப்பட்ட நாள் 2009-11-23
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பனைல்_புரோமைடு&oldid=3388395" இலிருந்து மீள்விக்கப்பட்டது