கார்பமிக் அமிலம்
கார்பமிக் அமிலம் (Carbamic acid) என்பது H2NCOOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கரிமச் சேர்மம் ஆகும். அமிலத் தொகுதியானது ஒரு நைட்ரஜன் அல்லது அமீனுடன் (கார்பனுக்குப் பதிலாக) இணைக்கப்பட்டிருப்பது கார்பாக்சிலிக் அமிலம் மற்றும் ஒரு அமைடு ஆகியவற்றிலிருந்து இச்சேர்மத்தை வேறுபடுத்துகிறது. கார்பமிக் அமிலத்தின் பல வழிப்பொருட்கள் மற்றும் ஒத்த சேர்மங்கள் அறியப்படுகின்றன. அவை பொதுவாக நிலையற்றவையாக, அதாவது, அச்சேர்மம் எந்த அமீனிலிருந்து பெறப்பட்டதோ அந்த அமீனாகவும் மற்றும் கார்பன் டை ஆக்சைடாகவும் மாறுகின்றன. [1] இந்த வேதி வினைக்குழுவின் புரோட்டான் நீக்கம் செய்யப்பட்ட எதிரயனி (அல்லது இணைக்காரம்) ஒரு கார்பமேட் ஆகும் . கார்பமிக் அமிலம் ஒரு தள அமைவு மூலக்கூறு ஆகும். [2]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
கார்பமிக் அமிலம்
| |||
வேறு பெயர்கள்
அமினோமெதனோயிக் அமிலம்
| |||
இனங்காட்டிகள் | |||
463-77-4 | |||
ChEBI | CHEBI:28616 | ||
ChEMBL | ChEMBL125278 | ||
ChemSpider | 271 | ||
DrugBank | DB04261 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C01563 | ||
ம.பா.த | Carbamic+acid | ||
பப்கெம் | 277 | ||
| |||
பண்புகள் | |||
CH3NO2 | |||
வாய்ப்பாட்டு எடை | 61.04 g·mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
கிடைக்கும் விதம்
தொகுகார்பமிக் அமிலம் யூரியா உற்பத்தியின் போது கிடைக்கும் ஒரு இடைநிலை வினைப்பொருள் ஆகும். யூரியாவின் தயாரிப்பு வினையானது கார்பன் டை ஆக்சைடு மற்றும் அம்மோனியாவின் வினையை உள்ளடக்கியதாகும்
- CO 2 + NH 3 → H 2 NCOOH
- H 2 NCOOH + NH 3 CO (NH 2 ) 2 + H 2 O.
கார்பமாயில்ட்ரான்ஸ்ஃபெரேஸ்கள் EC எண் 2.1.3 இன் கீழ் வகைப்படுத்தப்பட்ட டிரான்ஸ்ஃபெரேஸ் நொதியம் ஆகும் .
கார்பமிக் அமிலத்தின் வழிப்பொருட்கள்
தொகு-
கார்பமிக் அமிலத் தொகுதி
-
கார்பமேட் தொகுதி
-
கார்பமாயில் ( சிபிஎம் ) தொகுதி
-
கார்பமாயில் குளோரைடு தொகுதி
கார்பமிக் அமிலங்கள் கார்பமேட்டைக் பாதுகாக்கும் குழுக்களின் சிதைவில் இடைநிலைப் பொருள்கள் ஆகும்; ஒரு எசுத்தர் பிணைப்பின் நீராற்பகுப்பு கார்பமிக் அமிலத்தை உருவாக்குகிறது. கார்பன் டை ஆக்சைடின் வெளியேற்றமானது பாதுகாப்பு நீக்க வினைகளை முன்னோக்கி நகர்த்தி பாதுபாப்பு செய்யப்படாத அமீனைத் தருவதை அதிகரிக்கிறது.
கார்பமேட்டுகள் பொதுவாக கார்பமிக் அமிலத்தின் எசுத்தர்களைக் குறிக்கின்றன. மெத்தில் கார்பமேட் என்பது கார்பமிக் அமிலத்தின் எளிமையான எசுத்தர் ஆகும். கார்பமிக் அமிலங்களைப் போலன்றி, எசுத்தர்கள் நிலைத்தன்மை உடையவை ஆகும். ஆல்ககால்களுடன் கார்பமாயில் குளோரைடுகளின் வினை, ஐசோசயனேட்டுகளுடன் ஆல்ககாலின் சேர்க்கை வினை மற்றும் அம்மோனியாவுடன் கார்பனேட் எசுத்தர்களின் வினை ஆகியவற்றால் இவை தயாரிக்கப்படுகின்றன. [3]
சில எசுத்தர்கள் தசை தளர்த்திகளாகப் பயன்படுகின்றன, அவை ஜிஏபிஏஏ ஏற்பியின் பார்பிட்யூரேட் தளத்துடன் பிணைக்கப்படுகின்றன. [4] மற்றவைகள் பூச்சிக்கொல்லிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன, எடுத்துக்காட்டாக ஆல்டிகார்ப் போன்றவற்றைக் கூறலாம். [5]
குறிப்புகள்
தொகு- ↑ Lemke, Thomas L. (2003). Review of Organic Functional Groups: Introduction to Medicinal Organic Chemistry. Philadelphia, PA: Lippincott, Williams & Wilkins. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7817-4381-5.
- ↑ Khanna, R. K. (1999). Carbamic acid: Molecular structure and IR spectra.
- ↑ Jäger, Peter; Rentzea, Costin N.; Kieczka, Heinz (2000). "Carbamates and Carbamoyl Chlorides". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a05_051. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730.
- ↑ Block, John H.; Beale, John M., eds. (2004). "Central Nervous System Depressant". Wilson and Gisvold's Textbook of Organic Medicinal and Pharmaceutical Chemistry. Philadelphia, PA: Lippincott, Williams & Wilkins. p. 495. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7817-3481-3.
- ↑ The Toxicologic Effects of the Carbamate Insecticide Aldicarb in Mammals: A Review. 1987.