கார்பமோயில் பாஸ்பேட்டு

(கார்பமோயில் பாஸ்பேட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கார்பமோயில் பாஸ்பேட்டு (Carbamoyl phosphate) உயிரிவேதி வினைகளில் முக்கியத்துவம் பெற்ற எதிர்மின் அயனியாகும். நிலவாழ் விலங்குகள் நைட்ரசனை நீக்க பயன்படுத்தும் யூரியா சுழற்சியிலும், பிரிமிடின் தொகுப்பிலும் வளர்சிதை மாற்ற இடைநிலைப் பொருளாக கார்பமோயில் பாஸ்பேட்டு பங்குபெறுகிறது. இது, பைகார்பனேட், அமோனியா, குளுட்டமேட்டு மற்றும் பாஸ்பேட்டிலிருந்து உருவாகிறது. இத்தொகுப்பில், கார்பமோயில் பாஸ்பேட்டு இணைவாக்கி நொதி வினையூக்கியாகச் செயல்படுகிறது.

கார்பமோயில் பாஸ்பேட்டு
Structural formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(கார்பமோயில்ஆக்சி) பாஸ்போனிக் அமிலம்
இனங்காட்டிகள்
590-55-6
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த Carbamoyl+phosphate
பப்கெம் 278
பண்புகள்
CH2NO5P2-
வாய்ப்பாட்டு எடை 141.020 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

வேதி வினைகள்:

  • HCO3 + ATP → ADP + HO–C(O)–OPO32− (கார்பாக்சில் பாஸ்பேட்டு)
  • HO–C(O)–OPO32− + NH3 + OH → HPO42− + O–C(O)NH2 (கார்பமேட்டு) + H2O
  • O–C(O)NH2 + ATP → ADP + H2NC(O)OPO32− (கார்பமோயில் பாஸ்பேட்டு)