குளூட்டாமிக் காடி

(குளுடாமிக் அமிலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குளூட்டாமிக் காடி அல்லது குளூட்டாமிக் அமிலம் (Glutamic acid, சுருக்கமாக Glu அல்லது E) என்பது மாந்தர்களின் உடலியக்கத்திற்கு அடிப்படையாக உள்ள ஏறத்தாழ 20 அமினோ காடிகளில் ஒன்று, ஆனால் மிகத்தேவையான அமினோகாடிகளில் ஒன்றல்ல. குளூட்டாமிக் காடியின் உப்பும், எதிர்மின்மம் கொண்ட கார்பாக்சைலேட்டும் (carboxylate anion) குளூட்டாமேட் என்று அழைக்கப்படுகின்றது.

குளூட்டாமிக் காடி
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(2S)-2-aminopentanedioic acid
இனங்காட்டிகள்
56-86-0
ChemSpider 591
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 611
  • N[C@@H](CCC(O)=O)C(O)=O
பண்புகள்
C5H9NO4
வாய்ப்பாட்டு எடை 147.13 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

வேதியியல்

தொகு

பக்கக் கிளை இணைப்பு கொண்ட கார்பாக்சைலிக் காடியின் (carboxylic acid) வினைப்படும் பகுதி (functional group) காடி பிரிவுறும் எண் (acid dissociation constant) pKa = 4.1 கொண்டுள்ளது. உடலியக்க pH அளவில் இது எதிர்மின்மம் கொண்ட (நேர்மினமம் களையப்பட்ட) கார்பாக்சைலேட்டு (carboxylate) வடிவில் உள்ளது. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இதன் குறிமுறையன்கள்: GAA மற்றும் GAG. கார்பாக்சிலேட் எதிர் மின்மங்களும், குளுடாமிக் அமில உப்புகளும் "குளுடமேட்" என்றழைக்கப்படுகின்றன. தனி வடிவமாக உள்ளபோது நரம்பு பரப்பியாகவும் (neurotransmitter), கிரப் சுழற்சியில் வளர்சிதைமாற்ற இடைநிலையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

வரலாறு

தொகு

இந்த குளூட்டாமிக் காடியை 1908 இல் நிப்பானைச் சேர்ந்த பேராசிரியர் கிக்குனே இக்கேடா (Kikunae Ikeda), டோக்கியோ அரசக பல்கலைக்கழகத்துல் கண்டுபிடித்தார். இவர் கடல்பாசி போன்ற கடல் களைச்செடி எனக் கருதப்படும் கொம்பு (Kombu) என்னும் செடியில் இருந்து குளூட்டாமிக் காடியை பிரித்தெடுத்தார். இதில் இருந்து பெறும் குளூட்டாமேட் என்னும் பொருள், சுவை மிக்கதாக நாவில் உணரும் உமாமி என்னும் சுவையைத் தருவதாகக் கண்டுபிடித்தார். அறிவியலில் இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு (கரிப்பு) ஆகிய நான்கு சுவைகளைப் போல நாவில் உணரும் புதிய ஐந்தாவது சுவையாக இந்த உமாமி இருப்பதாகக் கணக்கிடுகிறார்கள்[1]

. இதனால் இந்த குளூட்டாமேட் என்னும் பொருள் பல உணவுப்பொருள்களில் சுவைகூட்டியாக (சுவையூட்டியாக) சேர்க்கப்படுகின்றது. இந்த சுவையூட்டி பெரும்பாலும் மோனோ சோடியம் குளூட்டாமேட்டாக இருக்கின்றது.

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. 2008 இல் வெளியான நியூ யார்க் டைம்சு கட்டுரை

மேலும் படிக்க

தொகு
  • Nelson DL and Cox MM. Lehninger Principles of Biochemistry, 4th edition.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளூட்டாமிக்_காடி&oldid=2744791" இலிருந்து மீள்விக்கப்பட்டது