கார்போரண்டம் யுனிவர்சல்
கார்போரண்டம் யுனிவர்சல் லிமிடெட் (CUMI), இந்தியாவின் பெரிய மற்றும் பழமையான பெருநிறுவனங்களுள் ஒன்றான முருகப்பா குழும நிறுவனத்தின் ஒரு பகுதியாகும். இந்நிறுவனம் உராய்வுப் பொருட்கள், பீங்கான் பொருட்கள், மட்பாண்டங்கள், தீச்செங்கல் பொருள்கள், அலுமினிய ஆக்சைடு குருணை, இயந்திரக் கருவிகள், பலபடிகள், ஒட்டும் பசைகள் மற்றும் கனிமங்கள் ஆகியவற்றின் முன்னணி உற்பத்தியாளர் மற்றும் உருவாக்குநராக உள்ளது.
இந்நிறுவனம் இந்தியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, தாய்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
வரலாறு
தொகுஇந்நிறுவனம் வங்கி வணிகத்திலிருந்து ஒரு மாற்றத்திற்காக உராய்வுப் பொருட்களைத் தயாரிக்கும் நோக்கத்துடன் மிதிவண்டி உற்பத்தி மூலம் உள்நுழைந்து நிறுவப்பட்டது. கார்போரண்டம் யுனிவர்சல் நிறவனத்தின் தாய் நிறுவனமான முருகப்பா குழுமம், கார்போரண்டம், இங்கிலாந்து, அமெரிக்காவின் கார்போரண்டம் மற்றும் ஆகியவ்றுடனும், 1950 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் யுனிவர்சல் கிரைண்டிங் நிறுவனம் ஆகியவற்றுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டது. இதன் விளைவாக கார்போரண்டம் யுனிவர்சல் ஆப் மெட்ராஸ் என்ற நிறுவனம் உருவானது. பின்னர் இது 1954 ஆம் ஆண்டில் கார்போரண்டம் யுனிவர்சல் லிமிடெட் (CUMI) எனபெயர் மாற்றம் செய்து இணைக்கப்பட்டது.[1]
நிறுவனங்கள்
தொகுஆரம்பத்தில் இந்நிறுவனம் இணைந்து பணியாற்றும் நிறுவனங்களுக்கான முக்கிய விளைபொருட்களைத் தயாரிக்க நிறுவப்பட்டது. பின்னர் நிறுவனம் தனது முதலாவது பிணைக்கப்பட்ட உராய்வுப் பொருள்கள் ஆலையை அஜாக்ஸ் தயாரிப்புகளிடமிருந்து வாங்கிய வசதிகளுடன் சென்னையில் நிறுவி உராய்வுப் பொருள்கள் உற்பத்தியை தொடங்கியது. உயர் வெப்பநிலை காப்பு தயாரிப்புகளுக்கான தொழில்நுட்பப் பொருள்களில் பயன்படும் பீங்கான் பொருள்களைத் தயாரிக்கும் நோக்கத்துடன் சியுஎம்ஐ நிறுவனம் மோர்கன் க்ரூசிபிள் பி.எல்.சி இங்கிலாந்து உடன் கூட்டு முயற்சியை மேற்கொண்டது. இதன் விளைவாக, 1982 ஆம் ஆண்டில் முருகப்ப மோர்கன் தெர்மல் செராமிக்ஸ் லிமிடெட் நிறுவப்பட்டது.[2]
கூட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பின் மூலம் பொறியியல் சாதனங்களுக்குத் தேவையான பீங்கான் பொருள்கள் தயாரிப்பில் இந்நிறுவனம் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. 1991 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் வென்ட் ஜிஎம்பிஹெச் மற்றும் தி ஹவுஸ் ஆஃப் கட்டாஸின் கூட்டு நிறுவனமான வென்ட் (இந்தியா) லிமிடெட் ஆகியவை சியுஎம்ஐ உடன் இணைக்கப்பட்டது.[3]
1991 ஆம் ஆண்டில் சியுஎம்ஐ நிறுவனத்தின் தொழிலகத் தேவைகளுக்கான பீங்கான் பொருள்கள் உற்பத்திக்கான முதல் பிரிவு அமெரிக்காவின் கூர்ஸ் செராமிக்சின் கூட்டாண்மையுடன் தமிழ்நாட்டின் ஓசூரில் தொடங்கப்பட்டது.[4] பின்னர் இந்நிறுவனம் உலோகமுலாம் பூசப்பட்ட கொள்கலன்களைத் தயாரிக்கும் அலகுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்நிறுவனம் தமது இருப்பினை விரிவாக்கம் செய்வதன் ஒரு பகுதியாக, 2005 ஆம் ஆண்டில் மத்திய கிழக்குப் பகுதியில் சியுஎம்ஐ எப்இசட்இ ஐ ரஃஸ் அல்-கைமா என்ற நகரில் தொடங்கியது. உலகளாவிய அளவில் தனது இருப்பை வலுப்படுத்திக் கொள்வதற்காக சியுஎம்ஐ 2006 ஆம் ஆண்டில் அப்ராசிவ் என்டர்பிரைசஸ் நிறுவனத்தை $2.24 மில்லியனுக்கு வாங்கியது.[5] இதன் பிறகு ஓராண்டு காலம் சென்று சியுஎம்ஐ சைப்பிரசு நாட்டில் நிறுவியது.
கைப்பற்றல்கள்
தொகுஒரு பத்தாண்டுக் காலத்திற்குள், தனது பங்குதாரர் நிறுவனங்களில் விலக்கத்திற்குப் பிறகு, சியுஎம்ஐ நிறுவனம் அஜாக்ஸ் பிராடக்ட்ஸ் தனியார் நிறுவனத்தை கையகப்படுத்தியது. 1978 ஆம் ஆண்டில், கொல்கத்தாவில் உள்ள ஈஸ்டர்ன் அப்ராசிவ்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் உராய்வுப் பொருள்கள் தயாரிப்பில் முன்னேறியது. 1997 ஆம் ஆண்டில், கட்பாஸ்ட் டூல்ஸ் நிறுவனம், ஈஸ்டர்ன் அப்ரேசிவ் நிறுவனம், கட்பாஸ்ட் பாலிமெர்ஸ் நிறுவனம் மற்றும் கார்போரண்டம் இன்வெஸ்ட்மென்ட் ஆகியவை கார்போரண்டம் யுனிவர்சல் நிறுவனத்தோடு இணைந்தன.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kazmi, Azhar (2008). Strategic management and business policy. New Delhi: Tata McGraw Hill Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780070263628.Pg. No: 214
- ↑ "Murugappa Morgan".
- ↑ "Murugappa group-3M battle over Wendt India enters new phase". The Economic Times-Bennett, Coleman & Co. Ltd. 9 March 2012.
- ↑ Rao, B. V. S. (1995). Ceramic powders for high-tech applications. Hyderabad London: Universities Press distributor Sangam. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0863115608.
- ↑ "Abrasive Enterprises sold". CBC/Radio-Canada. 2 March 2006.
- ↑ "Cutfast Abrasives merges with CUMI". The Indian Express. 17 December 1997. Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)