கார்லோ அன்செலாட்டி
கார்லோ அன்செலாட்டி (Carlo Ancelotti, பிறப்பு சூன் 10, 1959) இத்தாலி நாட்டைச் சேர்ந்த கால்பந்து மேலாளர் மற்றும் முன்னாள் வீரராவார். தனது ஆட்டக்காலத்தில் நடுக்கள வீரராக ஆடினார். தற்போது செருமனியின் பேயர்ன் மியூனிக் அணியின் மேலாளராக இருக்கிறார். தற்போதைய மேலாளர்களுள் இவர் மட்டுமே சாம்பியன்ஸ் லீக் கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே மேலாளர் ஆவார் (ஏ.சி. மிலான் அணியுடன் மூன்று இறுதிப் போட்டிக்குச் சென்று இரண்டு முறை வென்றார்; ரியல் மாட்ரிட் அணியுடன் மேலும் ஒரு முறை கோப்பையை வென்றிருக்கிறார்.). கால்பந்து மேலாளர்களுள் அதிசிறந்த மேலாளர்களுள் ஒருவராகவும் வரலாற்றில் அதிக கோப்பைகள் வென்ற மேலாளர்களுள் ஒருவராகவும் விளங்குகிறார்.[1][2][3][4]
2013-ஆம் ஆண்டில் அன்செலாட்டி | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
பிறந்த நாள் | 10 சூன் 1959 | ||
பிறந்த இடம் | Reggiolo, இத்தாலி | ||
உயரம் | 1.79 m (5 அடி 10+1⁄2 அங்) | ||
ஆடும் நிலை(கள்) | நடுக்களவீரர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | பேயர்ன் மியூனிக் (மேலாளர்) | ||
இளநிலை வாழ்வழி | |||
1973–1975 | Reggiolo | ||
1975–1976 | பர்மா கால்சியோ 1913 கால்பந்துக் கழகம் | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
1976–1979 | பர்மா கால்சியோ 1913 கால்பந்துக் கழகம் | 55 | (13) |
1979–1987 | ரோமா | 171 | (12) |
1987–1992 | ஏ.சி. மிலான் | 112 | (10) |
மொத்தம் | 338 | (35) | |
பன்னாட்டு வாழ்வழி | |||
1981–1991 | இத்தாலி | 26 | (1) |
மேலாளர் வாழ்வழி | |||
1995–1996 | ரெஜ்ஜியானா 1919 கால்பந்துக் கழகம் | ||
1996–1998 | பர்மா கால்சியோ 1913 கால்பந்துக் கழகம் | ||
1999–2001 | யுவென்டசு | ||
2001–2009 | ஏ.சி. மிலான் | ||
2009–2011 | செல்சீ | ||
2011–2013 | பாரீஸ் செயின்ட் ஜெர்மன் | ||
2013–2015 | ரியல் மாட்ரிட் | ||
2016– | பேயர்ன் மியூனிக் | ||
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. |
உசாத்துணைகள்
தொகு- ↑ Hayward, Paul (25 May 2015). "Champions League final 2014: Carlo Ancelotti proves he is greatest manager in Europe after Real Madrid's victory". telegraph.co.uk. The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 20 December 2015.
- ↑ "Del Piero: "Ancelotti is the best manager of all time"". marca.com. Marca. 29 July 2014. பார்க்கப்பட்ட நாள் 26 March 2015.
- ↑ Todd, Oliver (21 March 2015). "David Beckham urges Real Madrid to keep faith in Carlo Ancelotti, labelling the Italian as one of the best managers in the world". dailymail.co.uk. Daily Mail. பார்க்கப்பட்ட நாள் 20 December 2015.
- ↑ Kidd, Dave (26 May 2014). "Carlo Ancelotti's third European Cup means he joins Bob Paisley in the unsung hero hall of fame". mirror.co.uk. Mirror. பார்க்கப்பட்ட நாள் 20 December 2015.