கார்ல் இசுமிட் நினைவுச்சின்னம்

கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம் என்பது, 1930 ஆம் ஆண்டு, ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முயன்ற ஓர் ஐரோப்பிய மாலுமியின் நினைவாக எழுப்பப்பட்ட ஒரு கட்டிடக்கலை அடையாளமாகும் (ஆங்கிலம்: architectural landmark). இது இந்தியாவின் தமிழ்நாடு, சென்னையில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நினைவுச்சின்னம் சிதைந்த நிலையில் இருந்தது,[1] ஆனால் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது..

ஆங்கிலம்: Karl Schmidt Memorial
கார்ல் இசுமிட் நினைவகம்
எலியட் கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட கார்ல் இசுமிட் நினைவகம்
இடம்பெசன்ட் நகர், சென்னை, இந்தியா
வகைநினைவகம்
கட்டுமானப் பொருள்கான்கிரீட்
அர்ப்பணிப்புகார்ல் இசுமிட்

வரலாறு தொகு

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, கடற்கரைக்குச் சென்ற கார்ல் இசுமிட், ஒரு ஆங்கிலப் பெண் தண்ணீரில் இறங்குவதைக் கண்டார். அவர் விரைவில் அலைக்கு எதிராக போராடத் தொடங்கியது கண்டு, அவளது உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் தன் உயிரை இழந்தார். இசுமிட் கடலில் இருந்து காப்பாற்றிய ஆங்கில பெண், மறுநாள் மாலை ஒரு விருந்தில் ஒன்றும் நடக்காதது போல் கலந்து கொண்டார். அப்போதைய கவர்னர், வெளிப்படையாக அவர் மீது கோபமாக இருந்தார். இசுமிட்டின் துணிச்சலான செயலைக் குறிக்கும் வகையில் இந்த நினைவிடத்தை கட்டினார்.

நினைவுச்சின்னம் தொகு

 
கார்ல் இசுமிட் நினைவிடத்தில் உள்ள பெயர் பலகை

நிபுணர்களின் கூற்றுப்படி, செங்கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட இக்கட்டமைப்பில் கல்லால் ஆன அடித்தளம் இல்லை. சீரற்ற அடித்தளம் என்பதால் பல ஆண்டுகளாக ஏற்பட்ட கடல் நீர் அரிப்பின் மூலம் இந்த நினைவுச்சின்னம் சேதம் அடைந்துள்ளது.[2]

நினைவுச்சின்னம் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள ஒரே பாரம்பரிய கட்டிடம் ஆகும். நினைவுச்சின்னத்தில் உள்ள நினைவுக் பலகை, "மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற உதவியபோது டிசம்பர் 30, 1930 அன்று இந்த இடத்திற்கு அருகில் மூழ்கி இறந்த கார்ல் இசுமிட்டின் வீரத்தை நினைவுகூருவதாக" எழுதப்பட்டுள்ளது.[3]

87 வயது மூதாட்டி ஒருவரின் முயற்சியால், மார்ச் 2013 ஆம் ஆண்டில், சென்னை மாநகராட்சி நினைவிடத்தை செவ்வனே மீட்டெடுப்பதாக அறிவித்தது.[2] நினைவுச்சின்னத்தின் திட்டமிடப்பட்ட மறுசீரமைப்பு தொடர்பாக, கட்டமைப்பை வலுப்படுத்த நாரியல் பொருளால் உரையிடும் (Fibre wrapping) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி 4 பிப்ரவரி 2014 ஆம் தேதி அன்று அறிவித்தது.[4] ஐஐடி மெட்ராஸ் (ஆங்கிலம்: IIT Madras) மற்றும் ரீச் அறக்கட்டளை (ஆங்கிலம்: REACH Foundation) மூலம் கட்டுமானம் வலுப்படுத்தப்பட்டு (reinforcing the structure) புதிப்பிக்கப்பட்டது.[5]

2030 வரை, இந்த நினைவுச்சின்னம் மரபார்ந்த அடையாளத்தைப் பெறுவதற்கு நிலைத்து வேண்டும். 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, நினைவிடத்தைச் சுற்றி ஒரு வேலியடைப்பு (ஆங்கிலம்: enclosure) இருந்தது. மேலும் இக்கட்டமைப்பில் இருந்த விரிசல்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. இருப்பினும், வெள்ளை மேற்பரப்பில் இன்னும் நிறைய கிறுக்கல்கள் காணப்படுகின்றன. மேலும் கைபேசியில் தானே ஒளிப்படம் எடுத்துக்கொள்ள மக்கள் வழக்கமாக கட்டமைப்பின் மீது ஏறுகிறார்கள். இத்தகைய செயல்களை தடுக்க இங்கு பாதுகாப்புக் காவலர்கள் இல்லை.

ராம்தாஸ் (மோகன்லால்) மற்றும் விஜயன் (ஸ்ரீனிவாசன்) ஆகிய இரு இளைஞர்களைப் பற்றிய மலையாளத் திரைப்படம் நாடோடிகட்டு ஆகும். கேரளாவில் வேலை எதுவும் கிடைக்காமல், துபாயில் குடியேறத் திட்டமிட்டு, கஃபூர்க்காவால் ஏமாற்றப்பட்டதாக இத்திரைப்படம் முடிகிறது. இப்படம் இந்த இடத்தில் படமாக்கப்பட்டதால் இது இடம் கேரள மக்களின் அடையாளமாக மாறியுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Achuthan, Kannal (8 May 2008). "A sailor's memorial on beach sinks into oblivion". தி இந்து (Chennai) இம் மூலத்தில் இருந்து 14 May 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080514155205/http://www.hindu.com/2008/05/08/stories/2008050855241000.htm. பார்த்த நாள்: 17 Mar 2013. 
  2. 2.0 2.1 Hemalatha, Karthikeyan (12 March 2013). "Glory to Schmidt memorial: Civic body plans restoration". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Chennai) இம் மூலத்தில் இருந்து 29 June 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130629123946/http://articles.timesofindia.indiatimes.com/2013-03-12/chennai/37650540_1_english-girl-restoration-sea-water. பார்த்த நாள்: 12 May 2013. Hemalatha, Karthikeyan (12 March 2013). . The Times of India. Chennai. Archived from the original பரணிடப்பட்டது 2013-06-29 at Archive.today on 29 June 2013. Retrieved 12 May 2013.
  3. Hemalatha, Karthikeyan (29 December 2012). "Schmidt Memorial a tippler's haunt". The Times of India (Chennai). http://timesofindia.indiatimes.com/city/chennai/Schmidt-Memorial-a-tipplers-haunt/articleshow/17801703.cms. பார்த்த நாள்: 17 Mar 2013. Hemalatha, Karthikeyan (29 December 2012). "Schmidt Memorial a tippler's haunt". The Times of India. Chennai: The Times Group. Retrieved 17 March 2013.
  4. "Schmidt Memorial to be wrapped, strengthened". The Hindu (Chennai). 4 February 2014. http://www.thehindu.com/news/cities/chennai/schmidt-memorial-to-be-wrapped-strengthened/article5650138.ece?homepage=true. பார்த்த நாள்: 15 May 2021. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-09-05. பார்க்கப்பட்ட நாள் 2022-04-07.