எலியட்ஸ் கடற்கரை

சென்னையில் உள்ள கடற்கரை

எலியட்ஸ் கடற்கரை சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் அமைந்த கடற்கரை ஆகும். மெரீனா கடற்கரையின் தெற்கில் அமைந்த இக்கடற்கரை[1] அருகில் அஷ்டலட்சுமி கோயிலும் வேளாங்கன்னி தேவாலயமும் அமைந்துள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இக்கடற்கரை வெள்ளையர்கள் மட்டுமே வரக்கூடியதாக இருந்தது.முந்தைய சென்னை ஆளுனர் எட்வர்ட் எலியட்டின் பெயரால் வழங்கப்பட்ட இந்தக் கடற்கரை பரவலாக பெசன்ட் நகர் கடற்கரை என்றே அறியப்படுகிறது.

இசுமிட் நினைவுச் சின்னம்

சென்னையின் இளைய தலைமுறையினர் கூடும் இடமாக தற்போது இது உள்ளது. பல வகைப்பட்ட உணவகங்களும் மனமகிழ்மன்றங்களும் அவர்களுக்கான ஈர்ப்பை கூட்டுகின்றன. வார இறுதி நாட்களில் வண்டிகளை நிறுத்தக்கூட இடம் கிடைக்காத நிலை உள்ளது.

கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம்

தொகு

இக்கடற்கரைக்கு ஓர் அடையாளமாக கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம் விளங்குகிறது. மூழ்கிக் கொண்டிருந்த ஓர் நீச்சல்காரரை காப்பாற்ற தன்னுயிர் தந்த ஓர் டச்சு மாலுமியின் நினைவாக இந்த நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.[2]

காட்சிக்கூடம்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Edward Elliot's Beach
என்பதில் ஊடகங்கள் உள்ளன.



"https://ta.wikipedia.org/w/index.php?title=எலியட்ஸ்_கடற்கரை&oldid=3612035" இலிருந்து மீள்விக்கப்பட்டது