முதன்மை பட்டியைத் திறக்கவும்
கார்ல் சாண்ட்பர்க்

கார்ல் சாண்ட்பர்க் (Carl Sandburg, பி. ஜனவரி 6, 1878 – இ. ஜூலை 22, 1967) ஒரு அமெரிக்க இதழாசிரியர், எழுத்தாளர் மற்றும் கவிஞர். மூன்று முறை புலிட்சர் பரிசு பெற்றவர். அமெரிக்க கவிதை ஆளுமைகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

இலினாய் மாநிலத்தில் பிறந்த சாண்ட்பர்க், சிகாகோ டெய்லி நியூஸ் நாளிதழில் பத்திரிக்கையாளராகத் தன் எழுத்து வாழ்வைத் தொடங்கினார். கவிதைகள், வாழ்க்கை வரலாறுகள், குழந்தை இலக்கியம், புதினங்கள், திரைப்பட விமர்சனங்கள் என பல்வேறு வகை படைப்புகளை எழுதியுள்ளார். எனினும் அவர் வாழ்ந்த சிகாகோ நகர் பற்றிய கவிதைகளுக்காகவே அவர் பரவலாக அறியப்படுகிறார். கவிதைத் தொகுப்புகளுக்காக இரு முறையும், ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாற்றுக்காக ஒரு முறையும் புலிட்சர் பரிசினை வென்றுள்ளார். அமெரிக்க கவிதையுலகில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ள சாண்ட்பர்குக்கு அமெரிக்காவின் பல இடங்களில் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவரது நினைவாகப் பல கல்லூரிகள், பள்ளிகள், தொடருந்துச் சேவைகள் மற்றும் கட்டிடங்கள் பெயரிடப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ல்_சாண்ட்பர்க்&oldid=2707629" இருந்து மீள்விக்கப்பட்டது