கார்ல் யுங்கு

(கார்ல் ஜங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கார்ல் குசுத்தாவ் யுங்கு (Carl Gustav Jung, /jʊŋ/; இடாய்ச்சு: [ˈkarl ˈɡʊstaf jʊŋ]; 26 சூலை 1875 – 6 சூன் 1961), வழமையாக கா. கு. யுங்கு, சுவிசு உளநோய் மருத்துவரும் உளச்சிகிச்சையாளரும் ஆவார். இவரே பகுப்பாய்வு உளவியலைத் துவக்கியவருமாவார். இவரது கருத்தாக்கங்கள் உளவியலில் மட்டுமன்றி மெய்யியல், மானிடவியல், தொல்பொருளியல், இலக்கியம், மற்றும் சமயத் துறைகளிலும் தாக்கமேற்படுத்தி உள்ளன. பெரும் எழுத்தாளரான இவரது கூடுதலானப் படைப்புக்கள் இவரது காலத்திற்கு பின்னரே வெளியிடப்பட்டன.

கார்ல் யுங்கு
யுங்கின் நாளறியப்படாத ஓவியம்
பிறப்புகார்ல் குசுத்தாவ் யுங்கு
(1875-07-26)26 சூலை 1875
கெஸ்வில், துர்கோ, சுவிட்சர்லாந்து
இறப்பு6 சூன் 1961(1961-06-06) (அகவை 85)
கிஸ்நாச்ட், சூரிக் மாவட்டம், சுவிட்சர்லாந்து
வாழிடம்சுவிட்சர்லாந்து
குடியுரிமைசுவிட்சர்லாந்து
தேசியம்சுவிட்சர்லாந்து
துறைஉளநோய் மருத்துவம், உளவியல், உளச்சிகிச்சை, பகுப்பாய்வு உளவியல்
பணியிடங்கள்பர்கொல்சுலி, சுவிசு படை (முதல் உலகப் போரில்)
கல்வி கற்ற இடங்கள்பேசெல் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஐகன் பிளாயுலர்
அறியப்படுவதுபகுப்பாய்வு உளவியல், உளவியல் வகைப்படுத்தல், கூட்டு நனவிலி, உளவியல் பகுப்பாய்ந்த மனப்பான்மைகள், பொது நனவிலி நிலை, உள்ளடங்கிய ஆளுமைக்கூறும் உள்நோக்கமும், ஒருமையியக்கம்
தாக்கம் 
செலுத்தியோர்
ஐகன் பிளாயுலர், பிராய்டு, நீட்சே,[1] ஆர்தர் ஷோபெனவார்,[1]
பின்பற்றுவோர்ஜோசஃப் கேம்பெல், ஹேர்மன் ஹெசே, எரிக் நியூமான், ராஸ் நிக்கோலசு, ஆலன் வாட்சு
துணைவர்எம்மா யுங்கு
கையொப்பம்

பகுப்பாய்வு உளவியலின் மையக் கருத்தாக்கமாக தனித்தன்மைப் பண்பு அமைந்துள்ளது—தங்கள் தனித்தன்மையை பராமரித்துக் கொண்டே நினைவிலியுடன் நினைவு உள்ளிட்ட எதிர்ப் பண்புகளுடனான ஒன்றிணைப்பு மையமாக உள்ளது. மாந்த மேம்பாட்டின் மையச் செயற்பாடாக தனித்தன்மைப் பண்பை யுங்கு கருதினார்.

தற்போது நன்கு அறியப்பட்டுள்ள உளவியல் வகைப்படுத்தல், கூட்டு நனவிலி, உளவியல் பகுப்பாய்ந்த மனப்பான்மைகள், அகமுகி போன்ற உளவியல் கருத்தாக்கங்களை ஜங் உருவாக்கியுள்ளார்.

மேற்சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Polly Young-Eisendrath. The Cambridge Companion To Jung. Cambridge University, 2010. பக். 24–30. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ல்_யுங்கு&oldid=2707490" இலிருந்து மீள்விக்கப்பட்டது