காறை எலும்பு
மனித உடற்கூற்றியலில், காறை எலும்பு (Clavicle) என்பது ஒரு நீண்ட எலும்பாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. இது தோள் பட்டையின் ஒரு பகுதியாக அமைகின்றது. இது தனது சொந்த அச்சில் சுழலக்கூடியது. சிலரில், சிறப்பாகப் பெண்களில், தோளின் இப்பகுதியில் கொழுப்புக் குறைவாக இருப்பதன் காரணமாக, இவ்வெலும்பு கண்ணுக்குத் தெரியும் விதமாகப் புடைத்து இருப்பதைக் காணலாம்.
எலும்பு: காறை எலும்பு | |
---|---|
Gray's | subject #49 200 |
MeSH | எலும்பு காறை எலும்பு |
காறை எலும்பு, இரட்டை வளைவு கொண்ட நீண்ட எலும்பாகும். மனித உடலில் கிடையாக உள்ள ஒரே நீண்ட எலும்பு இதுவே. இது மேற் கையை, முதல் விலா எலும்புக்குச் சற்று மேலே உடலுடன் இணைக்கின்றது. இதன் மறு முனை, தோள் எலும்பின் (scapula) உச்சியுடன், உச்சிக்காறை மூட்டில் இணைந்துள்ளது. இதன் வெளிப்புற முனை தட்டையாகவும், உட்புற முனை உருண்டை வடிவிலும் உள்ளது.
வலது காறை எலும்பு - கீழிருந்தும், மேலிருந்துமான தோற்றங்கள். |
இடது காறை எலும்பு - மேலிருந்தும், கீழிருந்துமான தோற்றங்கள். |