காலியம்(III) ஐதராக்சைடு
(காலியம் ஐதராக்சைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காலியம்(III) ஐதராக்சைடு (Gallium(III) hydroxide) என்பது Ga(OH)3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்டவேதியியல் சேர்மமாகும். காலியம் உப்புகளுடன் (Ga3+) அமோனியாவைச்[1] சேர்க்கும் போது கூழ்மம் போன்ற இச்சேர்மம் உருவாகிறது. இயற்கையில் அரியவகை கனிமத் தாதுவான சோவன்சைட்டில் எண்முகவடிவில் ஒருங்கிணைக்கப்பட்ட காலியம் அணுக்கள் காணப்படுகின்றன.[2] காலியம் ஐதராக்சைடு அமிலத்திலும் காரத்திலும் கரையக்கூடிய ஒர் ஈரியல்பு ஐதராக்சைடு ஆகும். வலுவான அமிலச்சூழலில் காலியம் அயனி, Ga3+ உருவாகிறது. அதேபோல வலிமையான காரச்சூழலில் Ga(OH)4− அயனி உருவாகிறது. காலியம் ஐதராக்சைடின் உப்புகள் சிலசமயங்களில் காலேட்டுகள் [1] என அழைக்கப்படுகின்றன.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
காலியம் மூவைதராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12023-99-3 | |
ChemSpider | 8329553 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10154045 |
| |
பண்புகள் | |
Ga(OH)3 | |
வாய்ப்பாட்டு எடை | 120.7437 கி/மோல் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | அலுமினியம் ஐதராக்சைடு, இண்டியம்(III)ஐதராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Anthony John Downs, (1993), Chemistry of Aluminium, Gallium, Indium, and Thallium, Springer, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7514-0103-5
- ↑ Crystal Structure of a new mineral söhngeite, J.D. Scott, The American Mineralogist, (1971), 56, 355