அலுமினியம் ஐதராக்சைடு
அலுமினியம் ஐதராக்சைடு (Aluminium hydroxide), Al(OH)3, இயற்கையில் கிப்சைட்டு (ஐதராகில்லைட்டு எனவும் அழைக்கப்படுகிறது) எனும் கனிமத்திலிருந்து கிடைக்கப் பெறுகிறது. மேலும், இதன் மிக அரிய வகை பல்லுறுப்பிகளாவன: பேயரைட்டு, டோய்லெய்ட்டு மற்றும் நார்ட்ஸ்ட்ரான்டைட்டு ஆகியவை ஆகும். அலுமினியம் ஐதராக்சைடானது இயற்கையில் ஈரியல்புத்தன்மை கொண்டதாகும். அதாவது இச்சேர்மமானது, அமிலத்தன்மையையும் மற்றும் காரத்தன்மையையும் ஒருங்கே கொண்டதாக உள்ளது. இச்சேர்மத்தோடு மிகவும் பொருந்திப் போகக்கூடியவை அலுமினியம் ஆச்சைடு ஐதராக்சைடு, AlO(OH), மற்றும் அலுமினியம் ஆக்சைடு அல்லது அலுமினா (Al2O3) ஆகும். இவற்றில் பிந்தையதும் ஈரியல்புத்தன்மை கொண்டதுமாகும். அலுமினியத்தின் கனிமூலமான பாக்சைட்டின் முக்கிய பகுதிக்கூறுகளாக இச்சேர்மங்கள் அனைத்தும் உள்ளன.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் ஐதராக்சைடு | |
முறையான ஐயூபிஏசி பெயர்
அலுமினியம்(3+) டிரைஆக்சிடனைடு | |
வேறு பெயர்கள்
அலுமினிக் அமிலம்
அலுமினிக் ஐதராக்சைடு | |
இனங்காட்டிகள் | |
21645-51-2 | |
ChEBI | CHEBI:33130 |
ChEMBL | ChEMBL1200706 |
ChemSpider | 8351587 |
DrugBank | DB06723 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D02416 |
பப்கெம் | 10176082 |
வே.ந.வி.ப எண் | BD0940000 |
| |
UNII | 5QB0T2IUN0 |
பண்புகள் | |
Al(OH)3 | |
வாய்ப்பாட்டு எடை | 78.00 கி/மோல் |
தோற்றம் | வெண்ணிறத்தூள் சீருறாத் திண்மம் |
அடர்த்தி | 2.42 கி/செமீ3, திண்மம் |
உருகுநிலை | 300 °C (572 °F; 573 K) |
0.0001கி/100 மிலி | |
கரைதிறன் பெருக்கம் (Ksp)
|
3×10−34 |
கரைதிறன் | அமிலம் மற்றும் நீர்க்காரத்தில் கரையும் |
காடித்தன்மை எண் (pKa) | >7 |
சமமின்புள்ளி | 7.7 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−1277 கிலோயூல்·மோல்−1 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
GHS pictograms | |
H319, H335 | |
P264, P261, P280, P271, P312, P304+340, P305+351+338, P337+313 | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாதது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
>5000 மிகி/கிகி (எலி, வாய்வழி) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஏதுமில்லை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பெயரிடும் முறை
தொகுஅலுமினியம் ஐதராக்சைடின் வெவ்வேறு வடிவங்களுக்குப் பெயரிடும் முறையானது குழப்பமானதாக உள்ளது. இதற்கான சர்வதேச அளவிலான வரையறைகள் ஏதும் இல்லை. பல்லுருக்கள் நான்குமே அலுமினியம் டிரைஐதராக்சைடின் வேதியியைபைக் (ஒரு அலுமினியம் அணுவானது மூன்று ஐதராக்சைடு தொகுதிகளுடன் இணைந்துள்ள) கொண்டுள்ளன.
கிப்சைட்டு ஐதராகில்லைட்டு எனவும் அழைக்கப்படுகிறது. இச்சேர்மமானது. நீர் (hydra) மற்றும் களி(argylles) இவற்றின் கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டதாகும். ஐதராகில்லைட்டு எனப் பெயரிடப்பட்ட முதல் சேர்மமானது அலுமினியம் ஐதராக்சைடாக கருதப்பட்டது. ஆனால், பின்னர் அது அலுமினியம் பாசுபேட்டு என அறியப்பட்டது; இவற்றிற்குப் பிறகாகவும், கிப்சைட்டு மற்றும் ஐதராகில்லைட்டு ஆகியவை அலுமினியம் ஐதராக்சைடின் பல்லுருத்தன்மையைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. கிப்சைட்டானது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெரும்பான்மையாகவும் மற்றும் ஐதராகில்லைட்டு ஐரோப்பாவில் அதிகமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
தயாரிப்பு
தொகுவணிகரீதியாக பயன்படுத்தப்படும் அலுமினியம் ஐதராக்சைடானது பேயர் தொகுப்பு முறையில் தயாரிக்கப்படுகிறது.[1] இம்முறையானது பாக்சைட்டினை 270•செல்சியசு அளவிற்கு வெப்பப்படுத்தப்பட்ட சோடியம் ஐதராக்சைடில் கரைக்கின்ற செயல்முறையை உள்ளடக்கியதாகும். பாக்சைட்டுக் கழிவானது திண்மக்கழிவாக பிரித்தெடுக்கப்பட்ட பின் சோடியம் அலுமினேட்டுக் கரைசலில் இருந்து அலுமினியம் ஐதராக்சைடானது வீழ்படிவாக்கப்படுகிறது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற அலுமினியம் ஐதராக்சைடானது, அலுமினியம் ஆக்சைடு அல்லது அலுமினாவாக சூடேற்றிப் பிரித்தல் மூலம் மாற்றப்படுகிறது.
பண்புகள்
தொகுகிப்சைட்டு ஐதரசன் பிணைப்புகளோடு கூடிய உலோக ஐதராக்சைடு அமைப்பினைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பானது, அலுமினியம் அயனிகள் மற்றும் ஐதராக்சில் தொகுதிகளாலான இரட்டை அடுக்குகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு அடுக்குகளுக்கு இடையிலான எண்முகியின் மூன்றில் இரண்டு பங்கு துளைகளை அலுமினியம் அயனிகள் நிரப்பிக் கொள்கின்றன.[2][3]
அலுமினியம் ஐதராக்சைடானது ஈரியல்புத் தன்மை உடையதாக உள்ளது. அமிலத்தில், அமிலத்தில் உள்ள ஐதரசன் அயனிகளை எடுத்துக் கொண்டு அமிலத்தை நடுநிலைப்படுத்தி பிரான்ஸ்டெட்-லெளரி காரமாகச் செயல்பட்டு ஒரு உப்பினைத் தருகிறது:[4]
- 3HCl + Al(OH)3 → AlCl3 + 3H2O
காரக்கரைசலில், இது லூயிசு அமிலத்தைப் போன்று அதாவது, ஐதராக்சைடு அயனியிலிருந்து ஓரிணை எதிர்மின்னிகளை எடுத்துக் கொண்டு செயல்படுகிறது:
- Al(OH)3 + OH– → Al(OH)4–
மேற்கோள்கள்
தொகு- ↑ Hind, AR; Bhargava SK; Grocott SC (1999). "The Surface Chemistry of Bayer Process Solids: A Review". Colloids Surf Physiochem Eng Aspects 146: 359–74. doi:10.1016/S0927-7757(98)00798-5.
- ↑ வார்ப்புரு:Wells4th
- ↑ Evans, KA (1993). "Properties and uses of aluminium oxides and aluminium hydroxides". In A. J. Downs (ed.). Chemistry of aluminium, gallium, indium, and thallium (1st ed.). London; New York: Blackie Academic & Professional. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780751401035.
- ↑ Boundless (2016-07-26). "Basic and Amphoteric Hydroxides". Boundless Chemistry. Archived from the original on 2017-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-07-02.