காலி மாவட்டம், அப்காசியா

காலி மாவட்டம் (ஆங்கிலம்: Gali District) அப்காசியாவின் மாவட்டங்களில் ஒன்றாகும். அதன் தலைநகரம் காலி இதன் பெயரில் உள்ள நகரம் ஆகும். சோர்சியாவின் 'தி சிரே'வை விட இந்த மாவட்டம் சிறியது. ஏனெனில் அதன் முந்தைய பகுதிகள் சில இப்போது 'திவார்செலி' மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது 1995 இல் நடைமுறையில் உண்மையான அரசாக அப்காசிய அதிகாரிகளால் உருவாக்கப்பட்டது.

காலி மாவட்டமானது போருக்கு முந்தைய அப்காசியாவில் சோர்சிய பிராந்திய துணைப்பிரிவான மிங்ரேலியனித்தில் இருந்தது. 1993-1994 மற்றும் 1998 இல் மீண்டும் இனங்களுக்கிடையேயான மோதல்களைத் தொடர்ந்து பெரும்பான்மையான சோர்சியர்கள் மாவட்டத்தை விட்டு வெளியேறினர். போருக்குப் பின்னர் 1998 முதல் 40,000 முதல் 60,000 அகதிகள் காலி மாவட்டத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளனர். இதில் யுத்த நிறுத்தக் கோட்டின் வழியாக தினமும் பயணிக்கும் நபர்கள் மற்றும் அவ்வப்போது குடியேறுபவர்கள் உட்பட விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களும் அட்ங்குவர். காலி மாவட்டம் இது இப்போது அப்காசியாவின் ஒரே மாவட்டமாகும். இங்கு சோர்சியர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

அப்காசியாவின் 2003 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாவட்டத்தின் மக்கள் தொகை 29,287 ஆக இருந்தது. ஆனால் அந்த எண்ணிக்கை பல சர்வதேச பார்வையாளர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.[1] 2006 ஆம் ஆண்டில் இது 45 ஆயிரம் என்று மதிப்பிடப்பட்டது. இருப்பினும் குறைந்தது 65,000 அகதிகள் திரும்பி வந்திருக்கலாம் என அப்காசிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.[2] கோடோரி பள்ளத்தாக்குடன் சேர்ந்து, காலி மாவட்டம் தொடர்ச்சியான வன்முறை இருக்கும் பகுதியில் ஒன்றாகும். அதே நேரத்தில் அப்காசியாவின் மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது நிலைமை அமைதியானது. இது சோர்சிய-அப்காசிய மோதலின் 1998 விரிவாக்கத்தின் போர்க்களமாகும்.

புள்ளி விவரங்கள். தொகு

2003 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மக்கள் தொகையில் சோர்சியர்கள் - 28.919 (98.7%) பேர், உருசியர்கள் - 159 (0.5%) பேர், அப்காஸ் - 121 (0.4%) பேர், மற்றவர்கள் - 55 (0.4%) என்ற அளவில் உள்ளனர்.[1] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மக்கள் தொகையில் சோர்சியர்கள் - 29.813 (98.2%) பேரும், அப்காசியர்கள் - 208 (0.7%) பேரும், உருசியர்கள் - 188 (0.6%), பேரும் மற்றவர்கள் - 58 (0.3%) பேரும் உள்ளனர்.

பொருளாதாரம் தொகு

காலி மாவட்டம் தேயிலை, நாரத்தை, ஜாதிபத்திரி மற்றும் காய்கறிகளுக்கு வளமான விவசாயப் பகுதியாகும். இங்குரி நீர்மின் நிலையம், அப்காசியாவிற்கு விநியோகம் செய்யும் ஒரு முக்கிய பகுதியாகும். மேலும் இது சோர்சியாவின் அருகில் இருக்கும் பகுதியாகவும் உள்ளது. இந்த மின்நிலையம் அப்காசிய - சோர்சிய போர்நிறுத்தக் கோட்டில் அமைந்துள்ளது. இந்த மின் நிலையம் இரு நாடுகளும் சேர்ந்து கூட்டாக இயக்கப்படுகிறது.

காலியின் குடியிருப்பாளர்கள் ஒப்பீட்டளவில் சுதந்திரமாக அண்டை சோர்சிய மாவட்டங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் 50 உருசிய ரூபிள் செலுத்த வேண்டும். சோர்சியாவுக்கு வெளியே செல்லும் எந்தவொரு பொருட்களுக்கும் சுங்க கட்டணம் விதிக்கப்படுகிறது.[2] இருப்பினும், 2008 உருசிய- சோர்சியப் போருக்குப் பிறகு, எல்லையை கடப்பது மிகவும் கடினமாகிவிட்டது. சோதனைச் சாவடியில் நீண்ட தாமதங்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக, போர்நிறுத்தக் கோட்டின் இரு பக்கங்களுக்கிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளுக்கு முதுகெலும்பாக அமைந்தது. அப்பகுதியில் வசிப்போரின் சமாளிக்கக் கூடிய பொருளாதாரம் மேலும் திணறியது.

மாவட்டத்தின் 2006 வரவு செலவுத் திட்டம் 7.5 மில்லியன் உருசிய ரூபிள் (300,000 டாலர்) ஆனால் 30 சதவீதம் வரி வருவாய் சுகுமிக்கு அனுப்பப்பட்டது. மீதமுள்ள 70 சதவீதம் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக செலவிடப்படுகிறது. இருப்பினும், மாவட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு மத்தியிலிருந்து நிதி எதுவும் ஒதுக்குவது இல்லை. எனினும், குறிப்பிட்ட தேவைகளைப் பொறுத்து தற்காலிகமாக நிதி ஒதுக்கீடு இருக்கும்.[2] உள்கட்டமைப்பு சரிந்த நிலையில் உள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச அளவிலான மனிதாபிமான உதவி இருந்தபோதிலும், திரும்பி வருபவர்களில் பெரும்பாலோர் சேதமடைந்த வீடுகளில் அல்லது தற்காலிக தங்குமிடங்களில் தொடர்ந்து வாழ்கின்றனர்.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 2003 Census results (உருசிய மொழியில்)
  2. 2.0 2.1 2.2 Abkhazia Today. பரணிடப்பட்டது 2011-09-03 at the வந்தவழி இயந்திரம் The International Crisis Group Europe Report N°176, 15 September 2006, page 11. Retrieved on May 27, 2007. Free registration needed to view full report
  வெளிப் படிமங்கள்
  Gali district countryside[1]
  Street in Gali District[2]
  1. Photos by Patrick Perrier, 26.10.2008
  2. Geotimes பரணிடப்பட்டது 2008-09-06 at the வந்தவழி இயந்திரம் 4.1.2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலி_மாவட்டம்,_அப்காசியா&oldid=2868130" இலிருந்து மீள்விக்கப்பட்டது