கால்சியம் பெர்குளோரேட்டு
கால்சியம் பெர்குளோரேட்டு (Calcium perchlorate) என்பது Ca(ClO4)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓர் உலோக பெர்குளோரேட்டு உப்பாகவும் வெடிக்கும் வினைத்திறம் கொண்டதாகவும் இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. தோற்றத்தில் மஞ்சள்-வெள்ளை நிறத்தில் படிக திடப்பொருளாகக் காணப்படுகிறது. ஒரு வலிமையான ஆக்சிசனேற்ற முகவராக, வெப்பம் மற்றும் வாயுவாக இருக்கும் பொருட்களை உருவாக்க சூடேற்றும்போது குறைக்கும் முகவர்களுடன் இது வினைபுரிகிறது. கால்சியம் பெர்குளோரேட்டு மூடிய கொள்கலன்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். செவ்வாய் கிரகத்தின் மண்ணில் ஒரு பொதுவான இரசாயனமாக உள்ளது. செவ்வாய் கிரகத்தின் தூசியில் கிட்டத்தட்ட 1% எடையாகவும் கணக்கிடப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் பெர்குளோரேட்டு
| |
வேறு பெயர்கள்
கால்சியம் பெர்குளோரேட்டு நான்குநீரேற்று, கால்சியம் இருபெர்குளோரேட்டு, பெர்குளோரிக் அமில கால்சியம் உப்பு (2:1), கால்சியம் பெர்குளோரேட்டு, நீரேற்றப்பட்டது
| |
இனங்காட்டிகள் | |
13477-36-6 | |
ChemSpider | 55537 |
EC number | 236-768-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 61629 |
| |
UNII | 8249MC3K19 |
பண்புகள் | |
Ca(ClO4)2 | |
வாய்ப்பாட்டு எடை | 238.9792 கி/மோல் |
தோற்றம் | வெள்ளையும் மஞ்சளும் கலந்த படிகத் திண்மம் |
அடர்த்தி | 2.651 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 270 °C (518 °F; 543 K) [1] |
188.7 கி/100 கி[1] | |
acetone-இல் கரைதிறன் | 61.76 கி/100 கி |
எத்தில் அசிட்டேட்டு-இல் கரைதிறன் | 113.5 கி/100 கி |
ethanol-இல் கரைதிறன் | 166.2 கி/100 கி |
எத்தில் ஈதர்-இல் கரைதிறன் | 0.26 கி/100 கி |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | ஆக்சிகரணி |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H271 | |
P210, P220, P221, P280, P283, P306+360, P370+378, P371+380+375, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பண்புகள்
தொகுகால்சியம் பெர்குளோரேட்டு ஒரு வலுவான கனிம ஆக்சிசனேற்ற முகவராகும். வெடிப்புக்கு வழிவகுக்கும் பிற பொருட்களின் எரிப்பை இது அதிகரிக்கிறது. பெர்குளோரேட்டு அயனி ClO4- சமச்சீர் நான்முகி அமைப்பைக் கொண்டுள்ளது. குறைந்த எலக்ட்ரான்-தானம் செய்யும் புரோட்டான்-ஏற்றுக்கொள்ளும் சக்தி மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த முனைவாக்கம் மூலம் கரைசலில் வலுவாக உறுதிப்படுத்தப்படுகிறது.
குறை உருகுநிலைத் திட்டம்
தொகுகால்சியம் பெர்குளோரேட்டு கரைசல் ஓர் எளிய குறை உருகுநிலைத் திட்ட அமைப்பை உருவாக்குகிறது. கால்சியம் பெர்குளோரேட்டு கரைசலின் குறை உருகுநிலைச் சேர்மம் 4.2 மோல் / 1000 கிராம் நீர் ஆகும். இது இசுட்ரோன்சியம் மற்றும் பேரியத்தின் நெருங்கிய தொடர்புடைய உலோக நேர்மின் அயனி பெர்குளோரேட்டுகளின் கலவையை மிகவும் ஒத்திருக்கிறது.[2][3]
தோற்றம்
தொகுமின்பகுளி மின் கடத்துத்திறன்
தொகுகரிமக் கரைப்பான் அசிட்டோநைட்ரைலில் Ca(ClO4)2 மற்றும் இரட்டை மின்னேற்ற உலோக நேர்மின் அயனிகளின் மின்பகுளி மின் கடத்துத்திறன் சோதிக்கப்பட்டது.[4] குறிப்பிட்ட உடனொளிர்வு குறிகாட்டிகளின் மிகை வளர்ச்சியின் காரணமாக ஒளியுணரி ஈந்தணைவிகளுடன் உலோக நேர்மின் அயனிகளின் பெர்குளோரேட்டு தொடர்புகளில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
தயாரிப்பு
தொகுபெர்குளோரேட்டு உப்புகள் ஒரு காரமும் பெர்குளோரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் உருவாகும் சேர்மமாகும். கால்சியம் கார்பனேட்டையும் அம்மோனியம் பெர்குளோரேட்டையும் சேர்த்து கலவையை சூடாக்குவதன் மூலம் கால்சியம் பெர்குளோரேட்டைத் தயாரிக்கலாம். அம்மோனியம் கார்பனேட்டு வாயு நிலையில் உருவாகி, கால்சியம் பெர்குளோரேட்டை திடப்பொருளாக விட்டுச்செல்கிறது.[5][6]
வினைகள்
தொகுநீர்
தொகுஅதிக நீருறிஞ்சும் பண்பைக் கொண்டிருப்பதால் கால்சியம் பெர்குளோரேட்டு பொதுவாக நான்கு நீர் மூலக்கூறுகளின் முன்னிலையில் காணப்படுகிறது. இது கால்சியம் பெர்குளோரேட்டு நான்குநீரேற்று Ca(ClO4)2·4H2O என குறிப்பிடப்படுகிறது.[1]
வளைய ஐதரசன்பாசுபோனேட்டு
தொகுடையாக்சாபாசுபோகேன்கள், எட்டு உறுப்பு வளைய ஐதரசன்பாசுபேனேட்டு, கால்சியம் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் ஒரு கலப்பின கரிம-கனிம மூலக்கூறு உருவாக்கிறது. கால்சியம் பெர்குளோரேட்டில் இருந்து கால்சியம் சில்படிம மூலக்கூறின் கட்டமைப்பு ஒருமைப்பாட்டிற்கு பங்களிக்கிறது. நான்கு கால்சியம் அயனிகள் நான்கு டையாக்சாபாசுபோகேன் பகுதிகளுக்கு இடையில் இணைக்கப்பட்டுள்ளது.[7]
நச்சுத்தன்மை
தொகுகால்சியம் பெர்குளோரேட்டு தூசித் துகள்களை உட்கொள்வதன் மூலமோ அல்லது உள்ளிழுப்பதன் மூலமோ அல்லது குறைவாகத் தோலுடன் தொடர்பு கொள்வதன் மூலமோ மனிதர்களுக்குச் சிறிது நச்சுத்தன்மையை அளிக்கிறது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Physical Constants of Inorganic Compounds", CRC Handbook of Chemistry and Physics (97 ed.), Taylor and Francis Group, p. 4-54, 2016, பார்க்கப்பட்ட நாள் June 4, 2023
- ↑ Marion, G.M.; Catling, D.C.; Zahnle, K.J.; Claire, M.W. (June 2010). "Modeling aqueous perchlorate chemistries with applications to Mars" (in en). Icarus 207 (2): 675–685. doi:10.1016/j.icarus.2009.12.003. http://faculty.washington.edu/dcatling/Marion2010_PerchlorateFREZCHEM.pdf. பார்த்த நாள்: 5 November 2022.
- ↑ Pestova, O. N.; Myund, L. A.; Khripun, M. K.; Prigaro, A. V. (2005), "Polythermal Study of the Systems M(ClO4)2–H2O (M2+ = Mg2+, Ca2+, Sr2+, Ba2+)", Russian Journal of Applied Chemistry, 78 (3): 409–413, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/s11167-005-0306-z, S2CID 95464181
- ↑ Kalugin, Oleg N.; Agieienko, Vira N.; Otroshko, Natalya A. (January 2012), "Ion association and solvation in solutions of Mg2+, Ca2+, Sr2+, Ba2+ and Ni2+ perchlorates in acetonitrile: Conductometric study", Journal of Molecular Liquids, 165: 78–86, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/j.molliq.2011.10.012
- ↑ "Calcium Perchlorate", ChemicalBook, பார்க்கப்பட்ட நாள் October 25, 2012
- ↑ "Perchlorates", Megalomania's Method of Making Perchlorates, Megalomania's Controversial Chem Lab, archived from the original on March 12, 2005, பார்க்கப்பட்ட நாள் June 4, 2023
- ↑ Sutra, Elsa; Lamandé, Lydia; Gornitzka, Heinz; Bellan, Jacques (2002), "A New Oligomeric Complex of Cyclic Hydrogenphosphonates with Calcium Perchlorate", European Journal of Inorganic Chemistry, 2002 (10): 2727–2729, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/1099-0682(200210)2002:10<2727::AID-EJIC2727>3.0.CO;2-D
- ↑ "Calcium Perchlorate", Cameo Chemicals, Office of Response and Restoration, National Ocean Service, பார்க்கப்பட்ட நாள் October 25, 2012