கால்டெரைட்டு
கால்டெரைட்டு (Calderite) என்பது (Mn2+, Ca)3(Fe3+, Al)2(SiO4)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கோமேதகம் குழுவைச் சேர்ந்த ஒரு கனிமமாகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் Cdr என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.[3]
கால்டெரைட்டு Calderite | |
---|---|
நோர்வேயில் கிடைத்த கால்டெரைட்டு கனிமம் | |
பொதுவானாவை | |
வகை | சிலிக்கேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | (Mn2+Ca)3(Fe3+Al)2(SiO4)3 |
இனங்காணல் | |
நிறம் | பழுப்புச் சிவப்பு முதல் பழுப்பு மஞ்சள் |
படிக அமைப்பு | கனசதுரம் |
பிளப்பு | இல்லை |
மோவின் அளவுகோல் வலிமை | 6.5–7.5 |
மிளிர்வு | கண்ணாடி பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் மற்றும் கசியும் |
ஒப்படர்த்தி | 3.756 |
ஒளியியல் பண்புகள் | ஒருபடித்தானது. |
ஒளிவிலகல் எண் | n = 1.872 |
மேற்கோள்கள் | [1][2] |
கால்டெரைட்டு அடர் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருந்து அடர் மஞ்சள் நிறம் வரையிலான நிறங்களில் இருக்கும். பொதுவாக சிறுமணிகளின் திரட்சியாகக் காணப்படும்.[4]
இந்தியாவின் புவியியல் துறையில் பணியாற்றிய புவியியலாளர் இயேம்சு கால்டரின் பெயரால் கனிமத்திற்கு இப்பெயரிடப்பட்டது. இந்த பெயர் முதன்முதலில் பீகார் மாநிலத்தின் அசாரிபாக்கு மாவட்டத்தின் கட்கம்சாண்டி கிராமத்தில் காணப்பட்ட மாங்கனீசு படிவுகளில் உள்ள ஒரு பாறைக்கு பயன்படுத்தப்பட்டது. இதே பாறை இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நேத்ரா, பாலகாட்டு மாவட்டத்திலும் காணப்பட்டது. பின்னர் இப்பெயர் முக்கிய கனிமத்திற்கு மாற்றப்பட்டது.[2][4] 1909 ஆம் ஆண்டில், நமீபியாவின் ஓட்சோசோண்ட்சூபா பிராந்தியத்தில் உள்ள ஓட்சோசோண்டுவிலிருந்து வந்த கனிமமாக இது விவரிக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Mindat.org
- ↑ 2.0 2.1 Webmineral.com
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ 4.0 4.1 Handbook of Mineralogy
மேலும் வாசிக்க
தொகு- James Calder; J. D. Herbert (1981). Geology of the Indian Sub-continent: Observations on Mineralogy, Cypsum, Mines and Mountain Formations (reprint ed.). Cosmo Publications. p. 218.