காளிப்ரஸாத்

எழுத்தாளர்

ஆர். காளிப்ரஸாத் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் குறிப்பிடத்தக்க சிறுகதைகள், மொழியாக்கங்கள், மற்றும் இலக்கிய விமர்சனங்களை எழுதியுள்ளார்.

காளிப்ரஸாத்
Tamil writer Kaliprasad.jpg
பிறப்புஏப்ரல் 6, 1979 (1979-04-06) (அகவை 43)
வேளுக்குடி,திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு
தேசியம்இந்தியர்
பணிஎழுத்தாளர்

வாழ்க்கைக் குறிப்புதொகு

காளிப்ரஸாத் 1979ம் ஆண்டு இன்றைய திருவாரூர் மாவட்டத்திலுள்ள வேளுக்குடியில் பிறந்தார். இளம்வயதில் மன்னார்குடியில் வசித்துவந்தார். பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்தார். இவருக்கு மணமாகி இரு குழந்தைகள் உள்ளன. தற்போது சென்னையில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை பார்த்து வருகிறார்.[1]

இலக்கியச் செயல்பாடுதொகு

புனைவெழுத்துதொகு

சொல்வனம் போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகளை எழுதி வந்துள்ளார். இவரது பத்து சிறுகதைகளின் தொகுப்பு 'ஆள்தலும் அளத்தலும்' என்ற பெயரில் 2021-ல் யாவரும் & பதாகை பதிப்பகங்கள் சேர்ந்து வெளியிட்டன.[2][3][4]

மொழியாக்கங்கள்தொகு

இந்திய ஆங்கில எழுத்தாளரான விலாஸ் சாரங் எழுதி ஆங்கிலத்தில் வெளியான The Dhamma Man புதினத்தை 2020-இல் 'தம்மம் தந்தவன்' என்ற பெயரில் தமிழ் மொழியாக்கம் செய்தார். நற்றிணை பதிப்பகம் வெளியிட்ட இந்நூல் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை கதைகளும் தத்துவமும் அரசியலும் கலந்து ஒரு நவீன நாவலாக விவரிக்கிறது. இது பரவலான வாசக கவனத்தைப் பெற்றது.[5][6]

இலக்கிய விமர்சனம்தொகு

காளிப்ரசாத் இலக்கிய விமர்சன கட்டுரைகள் எழுதுபவராகவே தன் இலக்கியப் பயணத்தை தொடங்கினார். இவரது இலக்கிய விமர்சன கட்டுரைகள் வல்லினம்,[7][8] சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் அரூ[9] மற்றும் பல இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன.[10][11][12]

மேற்கோள்கள்தொகு

 1. "காளிப்ரஸாத் இணையதளம்". kaliprasadh.blogspot.com. 22 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
 2. "படிப்பறை - சைலபதி விமர்சனம்". www.vikatan.com/.
 3. "புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து". சொல்வனம்.காம். 22 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
 4. மகாராஜன், அருணாச்சலம் (30 April 2021). "ஆள்தலும் அளத்தலும்: செல்லும் தூரத்தை சுட்டும் சாதனை". வல்லினம்.
 5. "முடியாத புத்தர் - தம்மம் தந்தவன் பற்றி ஷங்கர்ராமசுப்ரமணியன்". Hindu Tamil Thisai. 22 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
 6. "தம்மம் தந்தவன் - தினமணி மதிப்புரை". தினமணி.காம்.
 7. பிரசாத், காளி (31 October 2020). "உபாதைகள் மொய்க்கும் தீம்புனல் உலகம்". வல்லினம். 22 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
 8. பிரசாத், காளி (31 August 2020). "வரலாற்றுடன் உரையாடுதல்". வல்லினம். 22 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
 9. "கைவிடப்பட்டவரின் பிரதிநிதி - நாஞ்சில்நாடனின் கான்சாகிப் சிறுகதை தொகுதி பற்றி". aroo.space. Aroo. 22 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
 10. "புலம் பெயர் தமிழ் எழுத்துக்கள்". வாசகசாலை இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு. 31 July 2019. 22 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
 11. "ஈழ எழுத்தாளர்கள் படைப்புகள் - ஆர். காளிப்பிரஸாத் – அகழ்". akazhonline.com. 22 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
 12. "அழகியபெரியவன் கதைகள் – காளிப்பிரசாத் | எழுத்தாளர் ஜெயமோகன்". www.jeyamohan.in. 22 December 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிப்ரஸாத்&oldid=3589451" இருந்து மீள்விக்கப்பட்டது