பேச்சு:காளிப்ரஸாத்
நீக்க வேண்டுமா?
தொகுஇதையும் பார்க்கவும் - CXPathi (பேச்சு) 08:59, 27 திசம்பர் 2021 (UTC)
@AntanO:, உங்களுக்குப் பொதுவாக எழுத்தாளர்கள் பற்றி கட்டுரைகள் உருவாக்குவதில் ஓர் ஒவ்வாமை இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளீர்கள் - உங்கள் பயனர்வெளி கட்டுரை ஒன்றில். ஓரிரு புத்தகங்கள் வெளியிட்ட யாரும் தன் பெயரில் ஒரு கட்டுரை உருவாக்கலாம் என்னும் உங்கள் கவலையைப் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் தமிழ் சிற்றிதழ் இயக்க இலக்கியம் என்றும் பெரிய அளவில் மக்களை அடைந்தது இல்லை - குறைந்தது சமகாலத்தில். (உலகம் முழுவதும் சிற்றிதழ் இயக்க இலக்கியத்திற்கு இதே நிலை தான்.) ஆகவே, நீங்கள் நினைக்கும் குறிப்பிடத்தக்கமையை சில எழுத்தாளர்களைத் தவிர்த்து பிறரால் அடைய முடியாது. எனவே, பீர் ரிவ்யூ எனப்படும் சக எழுத்தாளர்கள்/ விமர்சகர்களின் குறிப்புகளே அவர்களின் முக்கியத்துவத்திற்கு அடிப்படை. அவற்றையும் நீங்கள் நம்ப முடியாத ஆதாரங்கள் என நிராகரித்தால் மிஞ்சுவது எதுவும் இல்லை. இலங்கையைச் சேர்ந்த உங்களுக்கு தமிழ் சிற்றிதழ் இலக்கியம் சார்ந்து அடிப்படை புரிதல் இல்லை என்பது உங்கள் செயல்பாடு மூலம் நான் அடையும் எண்ணம். தமிழ் பண்பாட்டிற்கு இந்த இயக்கத்தின் ஆளுமைகள் அளித்த பங்களிப்பினை புரிந்து கொள்ள ஜெயமோகனின் இலக்கிய முன்னோடிகள், நவீன தமிழ் இலக்கிய அறிமுகம், சாரு நிவேதிதாவின் பழுப்பு நிற பக்கங்கள், எஸ். ராமகிருஷ்ணனின் கதாவிலாசம், பி.எஸ். ராமையாவின் மணிக்கொடி காலம், வல்லிக்கண்ணனின் தமிழில் சிறுபதிரிக்கைகள் ஆகியவற்றை முதல்நிலை வாசிப்புக்காக பரிந்துரைக்கிறேன். மேலும், whatabouteryயாக இருந்தாலும் சொல்கிறேன் - ஸ்பானிய மொழியில் எடுக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழிமாற்றி ஒரு இணையதளத்தில் வெளியான தொடர் ஒன்றில் (எலைட்) நடித்ததற்காக மட்டும் பல நடிகர்களுக்கு கட்டுரை உருவாக்கப்பட்டுள்ள விக்கியில் அறிவுத்தளத்தில் செயல்படும் சில எழுத்தாளர்கள் பற்றி கட்டுரைகளையை சேர்ப்பதால் மட்டும் விக்கிப்பீடியா குப்பைத்தொட்டியாக மாறிவிடாது. நன்றி! - CXPathi (பேச்சு) 17:43, 27 திசம்பர் 2021 (UTC)