CXPathi
வாருங்கள்!
வாருங்கள், CXPathi, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting
தொகுThe Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.
In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்
தொகுவணக்கம், CXPathi!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
வணக்கம், CXPathi!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:
- கலைக்களஞ்சிய நடையில் எழுதப்பட்டிருத்தல். காண்க: {{விக்கியாக்கம்}}, விக்கிப்பீடியா:நடைக் கையேடு (எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, தமிங்கிலம் தவிர்த்து எழுதுதல்)
- தகுந்த ஆதாரம் (மேற்கோள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல், விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
- மூன்று வரிக்கு (வாக்கியங்கம்) அதிகமான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் (3 வரிக்குக் (வாக்கியங்கம்) குறைவான கட்டுரைகள் நீக்கப்படும்)
- சரியான பகுப்பு(கள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம், விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும்
- பிறமொழி விக்கியில் கட்டுரை ஏற்கனவே இருந்தால், அதனை சரியான விக்கித்தரவில் இணைத்தல். காண்க: விக்கிப்பீடியா:விக்கித்தரவு
மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
en:Wikipedia:List dos and don'ts --AntanO (பேச்சு) 12:19, 7 செப்டம்பர் 2021 (UTC)
- நான் எழுதிய நம்பி நங்கை திருநர் தலைப்புகள் பட்டியல் என்னும் பக்கத்தை நீக்கியுள்ளீர்கள். விக்கிப்பீடியா:தலைப்புகள் பட்டியல்களின் பட்டியல் என்னும் பகுப்பில் உள்ள பல பக்கங்களைப் போலவே நான் அப்பட்டியலை எழுதினேன். அக்கட்டுரையின் தரக்குறைபாடு என்ன என்பதை விளக்கமாகச் சொல்ல முடியுமா? மேலும் அக்கட்டுரையினை ஒரு விக்கித்திட்டமாக ஆக்குவதற்கும் தகுதி பெற்றது என்றே நினைக்கிறேன். ஆங்கிலத்திலும் இன்னும் பல மொழிகளிலும் அதற்கு இணையான கட்டுரைகள் (பார்க்க: en:Outline of LGBT topics) இருக்கையில் இந்தக் கட்டுரையை நீக்கியதின் காரணம் தெரியவில்லை. இந்நிலையில் நீங்கள் அப்பக்கத்தை நீக்கியதும் அல்லாது, உங்களது பங்களிப்புகளின் பட்டியலிலிருந்தும் அச்செயலை அழித்தது அதிர்ச்சியை அளிக்கிறது. @செல்வா: @Ravidreams: @Kanags: @Sodabottle:. உரையாடும் விருப்பத்துடன் CXPathi (பேச்சு) 14:12, 7 செப்டம்பர் 2021 (UTC)
- en:Outline of LGBT topics இங்குள்ளபடி முறையாக உருவாக்குதென்றால் நன்று. அதைவிடுத்து தமிழ் + ஆங்கில கலப்பில் கட்டுரை உருவாக்க வேண்டாம். மேலும், en:Wikipedia:List dos and don'ts இதனையும் கவனிப்பதுடன் பட்டியல் உருவாக்கம் இங்குள்ள வழிகாட்டலின்படி அமைய வேண்டும். நன்றி. --AntanO (பேச்சு) 17:14, 7 செப்டம்பர் 2021 (UTC)
- நன்றி! விக்கிப்பீடியா:தலைப்புகள் பட்டியல்களின் பட்டியல் இந்தப்பக்கத்தின் சில கட்டுரைகளிலும் ஆங்கில கலப்பு இருந்ததனாலேயே அவ்வாறு செய்தேன். அவை மிகப்பழைய கட்டுரைகள் என்பதை கருத்தில் கொள்ளாது இருந்துவிட்டேன். இப்போது ந.ந.ஈ.தி என்னும் பகுப்பின் அடிப்படையில் கட்டுரைகளைத் தொகுத்து வருகிறேன். செப்டம்பர் இறுதி வரை நிறையக் கட்டுரைகள் தமிழாக்கப்படும் என்று நினைக்கிறேன். அதன்பின்பு en:Outline of LGBT topics இதைப்போல் ஒரு பக்கம் உருவாக்குகிறேன். அன்புடன் -CXPathi (பேச்சு) 13:22, 8 செப்டம்பர் 2021 (UTC)
September 2021
தொகுவணக்கம், விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவில் யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், தக்க காரணமின்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக்கூடாது. விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையின் தலைப்பு சரியானதாகவும் மற்றும் துல்லியமானதாகவும், அனைவரும் எளிதில் அறிந்து கொள்வதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு நடப்பு பெயர் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றால் பொதுவாக, ஒரு பக்கம் ஒரு புதிய தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக ஏனைய பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது என்பது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. AntanO (பேச்சு) 17:07, 7 செப்டம்பர் 2021 (UTC)
உங்களுக்கு ஒரு பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது!
தொகுமரியாதை மிக்கவர் பதக்கம் | |
டி.தருமராஜ் அவர்களின் பக்கத்தை தக்கவைப்பதற்கு பரிந்துரை செய்தமைக்கு நன்றி. அந்த பக்கத்தை மேலும் செழுமை படுத்த உதவவும். உங்களுக்கும் விருப்பமிருந்தால் , நாம் ஸ்டாலின் ராஜாங்கம் போன்ற எழுத்தாளர்களுக்கு பக்கங்களை சேர்ந்து உருவாக்கி தமிழ் விக்கியை மேலும் செழுமைப் படுத்தலாம் :-) . Spharish (பேச்சு) 10:37, 5 அக்டோபர் 2021 (UTC) |
- நன்றி! தமிழ் தலித் இயக்கம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் (ஆளுமைகள், முக்கிய நிகழ்வுகள், பத்திரிக்கைகள்- சமீபத்தில் அரவிந்தன் கண்ணையனின் பதிரிக்ககைகள் உரையைக் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்:) ) விக்கியில் ஏற்றுவதும் என் திட்டகளுள் ஒன்று. நேரம் தான் அதிகம் இல்லை. முடிந்தபோது பங்களிக்கிறேன். சேர்ந்து பணியாற்றுவோம் - CXPathi (பேச்சு) 15:04, 5 அக்டோபர் 2021 (UTC)
- ஆம். அரவிந்தன் கண்ணையன் அவர்கள் தொகுத்த உரையாடலை கேட்டேன். தருமராஜ் அவர்களின் பக்கத்தை மேலும் செழுமைப்படுத்த என்ன செய்ய வேண்டும் என கூற முடியுமா ? தற்போது பக்கத்தில் 15 குறிப்பீடுகள் இணைக்கப் பட்டுள்ளது. இருப்பினும், பக்கம் நீக்கப் பரிந்துரை செய்யப் படுகிறது. Spharish (பேச்சு) 15:21, 5 அக்டோபர் 2021 (UTC)
- விக்கியின் சிக்கல்களுள் ஒன்றே இது. அரசியல் தவிர்த்த அறிவுத்தரப்புகள் பொது ஊடகங்களில் அதிக கவனத்தைப் பெறுவதில்லை. எனவே, இப்பக்கங்கள் குறிப்பிடத்தக்கவை தான் என்று எளிதில் நிறுவுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே, நம் குரலைப் பதிவு செய்வது ஒன்றுதான் இப்போது இயல்வது. அதைச் செய்வோம். பக்கம் நீக்கப்படாது என்றுதான் நினைக்கிறேன். வருடக்கணக்கில் நீக்குவதற்கான பட்டியலில் உள்ள பக்கங்கள் சில இன்னும் அப்படியே உள்ளன. தருமராஜின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவர் குறித்து பிற அறிஞர்கள் கூறியவற்றையும் இன்னும் சேர்க்கலாம். முடிந்தவரை அவரைப்பற்றி இணையத்தில் உள்ளவற்றுக்கு இணைப்பு கொடுக்கலாம். நன்றி. - CXPathi (பேச்சு) 15:35, 5 அக்டோபர் 2021 (UTC)
- ஆம். அரவிந்தன் கண்ணையன் அவர்கள் தொகுத்த உரையாடலை கேட்டேன். தருமராஜ் அவர்களின் பக்கத்தை மேலும் செழுமைப்படுத்த என்ன செய்ய வேண்டும் என கூற முடியுமா ? தற்போது பக்கத்தில் 15 குறிப்பீடுகள் இணைக்கப் பட்டுள்ளது. இருப்பினும், பக்கம் நீக்கப் பரிந்துரை செய்யப் படுகிறது. Spharish (பேச்சு) 15:21, 5 அக்டோபர் 2021 (UTC)
October 2021
தொகுவணக்கம், உங்கள் அண்மைய தொகுப்பில் பேணுகை வார்ப்புருக்களை நீக்கியுள்ளீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும். அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் தவறுதலாக இதனைச் செய்திருந்தால் வருந்தவேண்டாம். உங்கள் தொகுப்பை நான் மீளமைத்துள்ளேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. ~AntanO4task (பேச்சு) 16:50, 5 அக்டோபர் 2021 (UTC)
- விக்கிப்பீடியா நிர்வாகியான உங்களுக்கு, குறிப்பிடத்தக்கமை சார்ந்து விக்கிப்பீடியாவிற்கு தனிக் கொள்கைகள் ஏதும் இல்லை என்பதை நினைவுறுத்துவதற்கு வருந்துகிறேன். மேலும், நூல் ஆசிரியர்களின் படைப்புகளுக்கும் கருத்துக்களுக்கும் அவர்கள் பதிப்பித்த இணையப் பதிவுகளோ அவர்களது புத்தகங்களோ போதிய ஆதாரங்கள் ஆகும். டி. தருமராஜின் புத்தகங்கள் தமிழின் முன்னணி பதிப்பகங்களுள் ஒன்றான கிழக்குப் பதிப்பகத்த்தால் வெளியிடப்பட்டுள்ளன. அவர் பக்கத்தில் உள்ள கூகிள் புத்தகம் இணைப்புகளைப் பார்க்கவும். விக்கிப்பீடியாவில் ஏற்றுக்கொள்ளப்படும் சான்றுகளை அறிய பார்க்கவும்: விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை. மேலும், ஒரு தொகுப்பினை மீளமைப்பு செய்வதற்குமுன் அத்தொகுப்பு சார்ந்த குறிப்பினைப் படிக்கவும். நன்றி! - CXPathi (பேச்சு) 17:07, 5 அக்டோபர் 2021 (UTC)
- உங்கள் கருத்துகள் விக்கி வழிகாட்டல்கள் அல்ல. விளங்காவிட்டால் கேளுங்கள். நன்றி. AntanO (பேச்சு) 17:24, 5 அக்டோபர் 2021 (UTC)
- விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை என்னும் கொள்கைப்பக்கத்தின் முதல்வரியே //குறிப்பிடத்தக்கத் தன்மை பற்றிய கொள்கையோ, இதுபற்றிய திட்டமோ விக்கிப்பீடியாவுக்கு இல்லை.// என்பதுதான். எனவே, கறாரான கொள்கை எதுவும் இது சார்ந்து இருக்கிறதா?. விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (கல்வியாளர்கள்)யின்படி கல்வியாளர்கள் செலுத்தும் தாக்கமே முதன்மையானது. தற்போது தருமராஜ் பக்கத்தில் உள்ள 15 மேற்கோள்களில் 7 மற்றும் 15 தவிர பிற அனைத்தும் அவரின் தாக்கத்தைப் புலப்படுத்துவதே ஆகும். நன்றி! - CXPathi (பேச்சு) 17:52, 5 அக்டோபர் 2021 (UTC)
- சில வழிகாட்டல் பக்கங்கள் காலாவியாகிவிட்டிருக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆ. வி பக்கம் உதவக்கூடும். 15 மேற்கோள்கள் இருப்பதால் குறிப்பிடத்தக்கமை உள்ளது என்றாகிவிடாது. காண்க: en:Wikipedia:Reliable sources. மேலும், ஏதாவது ஒரு இடத்தில் உரையாடவும். AntanO (பேச்சு) 18:09, 5 அக்டோபர் 2021 (UTC)
- விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை என்னும் கொள்கைப்பக்கத்தின் முதல்வரியே //குறிப்பிடத்தக்கத் தன்மை பற்றிய கொள்கையோ, இதுபற்றிய திட்டமோ விக்கிப்பீடியாவுக்கு இல்லை.// என்பதுதான். எனவே, கறாரான கொள்கை எதுவும் இது சார்ந்து இருக்கிறதா?. விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (கல்வியாளர்கள்)யின்படி கல்வியாளர்கள் செலுத்தும் தாக்கமே முதன்மையானது. தற்போது தருமராஜ் பக்கத்தில் உள்ள 15 மேற்கோள்களில் 7 மற்றும் 15 தவிர பிற அனைத்தும் அவரின் தாக்கத்தைப் புலப்படுத்துவதே ஆகும். நன்றி! - CXPathi (பேச்சு) 17:52, 5 அக்டோபர் 2021 (UTC)
- உங்கள் கருத்துகள் விக்கி வழிகாட்டல்கள் அல்ல. விளங்காவிட்டால் கேளுங்கள். நன்றி. AntanO (பேச்சு) 17:24, 5 அக்டோபர் 2021 (UTC)
பகுப்பு சேர்த்தல்
தொகுவணக்கம் கட்டுரைகளில் தாங்கள் பகுப்பு சேர்த்துவருவது மகிழ்ச்சி. ஒரு கட்டுரையை திறந்து அதில் பகுப்பை இட்டு சேமிப்பதைவிட விரைவுப்பகுப்பி கருவி வழியாக விரைவாகவும் எளிதாகவும் பகுப்புகளை சேர்க்கவோ, திருத்தவோ செய்யலாம் நன்றி----சா அருணாசலம் (பேச்சு) 13:08, 27 அக்டோபர் 2021 (UTC)
பகுப்பு சேர்க்கும் போது சரியான பகுப்பா என்று உறுதி செய்து பின்னர் பகுப்பை இணையுங்கள். பகுப்பிற்கும் கட்டுரைக்கும் தொடர்பிருக்க வேண்டும் --சா அருணாசலம் (பேச்சு) 13:25, 27 அக்டோபர் 2021 (UTC)
- நான் ஆங்கில பகுப்பில் இருந்த கட்டுரைகளுக்கு மட்டுமே தமிழில் பகுப்பினை சேர்த்தேன் அய்யா! பல கட்டுரைகளில் பகுப்புக்கு காரணமான குறிப்புகள் இல்லை என்பதையும் கவனித்தேன். அக்கட்டுரைகளையும் விரிவாக்க எண்ணியுள்ளேன். - CXPathi (பேச்சு) 16:07, 27 அக்டோபர் 2021 (UTC)
தனிநபர் விமர்சனம்
தொகுஎன்னைப் பற்றி விமர்சிக்க உமக்கு யாரும் இங்கு உரிமையளிக்கவில்லை. நான் இலங்கை என்று முத்திரை குத்தி பிரதேசவாதம் பேச வேண்டாம். விக்கி பொதுவானது. அதன் வழிகாட்டலின்படிதான் இயங்க வேண்டுமேயற்றி, எனக்கு விளக்கமளிக்க வேண்டாம். இதனை அறிவுரையாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ எடுத்துக் கொண்டு ஆக்கபூர்மமாகப் பங்களிக்கவும். நன்றி. --AntanO (பேச்சு) 18:12, 27 திசம்பர் 2021 (UTC)
- நான் பிரதேச வாதம் பேசவில்லை. இயல்பான கலாச்சார வேறுபாடுகள் மூலம் உருவாகும் முக்கியத்துவம், இலக்கியப் புரிதல்களையே சொல்லியுள்ளேன். மேலும், சிற்றிதழ் சார் இலக்கியம் இயங்கும் வெளியின் அடிப்படையான தீவிரத்தனம் காரணமாக பொதுவாக வெகுஜன ஊடகங்களில் இடம்பெறாமையினால் அதன் முக்கியத்துவம் குறைந்துவிடாது என்றும் எனவே, விக்கிப்பீடிய கொள்கையான படைப்பாளிகளின் வாழ்க்கை வரலாற்று கட்டுரைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் முக்கியத்துவமான பீர் ரிவ்யூ எனப்படும் சக படைப்பாளிகளின் கருத்துக்களே எழுத்தாளர்களின் குறிப்பிடத்தக்கத் தன்மையினை நிலைநிறுத்தும் ஒரே வாய்ப்பு என்றும் அவற்றையும் முக்கியமற்ற ஆதாரங்கள் என்று நிராகரித்தால் ஒட்டு மொத்தமாக ஒரு அறிவியக்கத்தை பற்றிய கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் குறைந்த அளவில் மட்டுமே இடம்பெறும் அபாயத்தையுமே அங்கு சொல்லியுள்ளேன். உங்கள் மேலான ஆக்கப்பூர்வ பங்களிப்புகள் இன்னும் சிறப்படையவே தமிழ் சிற்றிதழ் சார்ந்த அடிப்படை நூல்களை அங்கு அறிமுகப்படுத்தியுள்ளேன். நன்றி! - CXPathi (பேச்சு) 18:26, 27 திசம்பர் 2021 (UTC)
- ஒட்டுமொத்தமான விவாதமே படைப்பாளிகளின் குறிப்பிடத்தக்கமையை நிறுவ அவர்களின் சக படைப்பாளிகளின் கருத்துக்களே போதுமானது என்னும் விக்கிப்பீடிய கொள்கையை நீங்கள் பொருட்படுத்தி ஏற்க வேண்டும் என்னும் மன்றாட்டு தான். CXPathi (பேச்சு) 18:30, 27 திசம்பர் 2021 (UTC)
- யான் யாரிடமும் கலாச்சார வேறுபாடுகள் பற்றி பாடம் நடத்தக் கேட்கவில்லை. அவ்வாறிருக்க எனக்கு அது பற்றி அறிவில்லையெனக் கருதி விளக்கமளிக்கத்தேவையில்லை. இங்கு உருவாக்கப்படும் கட்டுரைகளின் தரம், நோக்கம் ஆகியன மட்டில் 10 வருட அனுபவம் உள்ளது. மேலும், விக்கிப்பீடியாவிற்கென சில வழிகாட்டல்கள், நடைமுறைகள் உள்ளன. முடிந்தால், விக்கிப்பீயாவின் வழிகாட்டல்களை மாற்றிவிட்டு கருத்திடவும். தன்னிலை விளக்கம் தேவையில்லை. --AntanO (பேச்சு) 18:34, 27 திசம்பர் 2021 (UTC)
- நான் பேசுவதும் அதேதான் ஐயா! சிற்றிதழ் சார்ந்த படைப்பாளிகளுக்கு படைப்பாளிகளின் குறிப்பிடத்தக்கமையை நிறுவ அவர்களின் சக படைப்பாளிகளின் கருத்துக்களே போதுமானது என்னும் விக்கிப்பீடிய கொள்கை வழிகாட்டலை ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான். CXPathi (பேச்சு) 18:50, 27 திசம்பர் 2021 (UTC)
- நான் பிரதேச வாதம் பேசவில்லை. இயல்பான கலாச்சார வேறுபாடுகள் மூலம் உருவாகும் முக்கியத்துவம், இலக்கியப் புரிதல்களையே சொல்லியுள்ளேன். மேலும், சிற்றிதழ் சார் இலக்கியம் இயங்கும் வெளியின் அடிப்படையான தீவிரத்தனம் காரணமாக பொதுவாக வெகுஜன ஊடகங்களில் இடம்பெறாமையினால் அதன் முக்கியத்துவம் குறைந்துவிடாது என்றும் எனவே, விக்கிப்பீடிய கொள்கையான படைப்பாளிகளின் வாழ்க்கை வரலாற்று கட்டுரைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் முக்கியத்துவமான பீர் ரிவ்யூ எனப்படும் சக படைப்பாளிகளின் கருத்துக்களே எழுத்தாளர்களின் குறிப்பிடத்தக்கத் தன்மையினை நிலைநிறுத்தும் ஒரே வாய்ப்பு என்றும் அவற்றையும் முக்கியமற்ற ஆதாரங்கள் என்று நிராகரித்தால் ஒட்டு மொத்தமாக ஒரு அறிவியக்கத்தை பற்றிய கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் குறைந்த அளவில் மட்டுமே இடம்பெறும் அபாயத்தையுமே அங்கு சொல்லியுள்ளேன். உங்கள் மேலான ஆக்கப்பூர்வ பங்களிப்புகள் இன்னும் சிறப்படையவே தமிழ் சிற்றிதழ் சார்ந்த அடிப்படை நூல்களை அங்கு அறிமுகப்படுத்தியுள்ளேன். நன்றி! - CXPathi (பேச்சு) 18:26, 27 திசம்பர் 2021 (UTC)
- விக்கிப்பீடியா சமூக ஒப்புதலின்றி நானோ அல்லது வேறொருவரோ ஏற்றுக் கொள்ள முடியாது. --AntanO (பேச்சு) 18:56, 27 திசம்பர் 2021 (UTC)
- சுத்தம் ஐயா! விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவர் பக்கத்தில் additional criteria என்பதன்கீழ் படைப்பாளிகள் என்னும் வகையின் முதல் கூற்றே, நான் இவ்வளவு நேரம் சொல்வதுதான் ஐயா! CXPathi (பேச்சு) 19:06, 27 திசம்பர் 2021 (UTC)
- வரிக்கு வரி என்னால் பாடம் நடத்த முடியாது. யாராவது தெரிந்தவரிடம் கேட்டு அறியவும். நன்றி. --AntanO (பேச்சு) 19:21, 27 திசம்பர் 2021 (UTC)
மதன் கௌரி பக்கம்
தொகுவணக்கம். தாங்கள் மதன் கௌரி பக்கத்தின் குறிப்பிடத்தக்கத் தன்மை பற்றி கேள்வி எழுப்பியுள்ளீர்கள். நான் அவரை பற்றிய பல செய்திக் கட்டுரைகளை இணைத்துள்ளேன். மேலும் அவர் ஓடைக்கு கிட்டத்தட்ட 1.1 பில்லியன் பார்வைகள் உள்ளன. ஒரு தனி நபர் நடத்தும் யூடியூப் ஓடைக்கு இது மிகவும் அதிகமாகும். எனவே இந்த பக்கம் குறிப்பிடத்தக்கது என நினைக்கிறேன். எனவே நீக்கப் பரிந்துரையை நீக்க முடியுமா?
ஹரீஷ் எசு.பி. (பேச்சு) 06:28, 16 சனவரி 2022 (UTC)
- நீங்களே அதை நீக்கிவிடுங்கள் -14:42, 17 சனவரி 2022 (UTC)
April 2022
தொகுWelcome to Wikipedia and thank you for your contributions. I am glad to see that you are discussing a topic. However, as a general rule, talk pages are for discussion related to improving the article, not general discussion about the topic or unrelated topics. If you have specific questions about certain topics, consider visiting our reference desk and asking them there instead of on article talk pages. Thank you. AntanO (பேச்சு) 15:30, 8 ஏப்ரல் 2022 (UTC)
அங்கும் இங்குமாக, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பேச வேண்டாம். மேலும், ஒருமையில் என்னை அழைக்க வேண்டாம். --AntanO (பேச்சு) 15:32, 8 ஏப்ரல் 2022 (UTC)
- அவ்வுரையாடல் ஒரு தனிக்கட்டுரை தொடர்பானது அல்ல என்றும் அதனால் ஆலமரத்தடியில் பேசுவதே முறை என்றும் கூறிதான் அங்கேயே எழுதினேன். ஏற்கனவே ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பேச வேண்டாம் என்றுதான் நீங்கள் பேச்சு:நங்கை, நம்பி, ஈரர், திருனர் பக்கத்தில் எழுதியதை வெட்டி ஒட்டி ஆலமரத்தடியிலேயே பதில் கூறினேன். ஆலமரத்தடியில் பதிந்த பதிலிலும் உங்களைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. மேலும் உங்களுக்காக ஓர் அடிப்படை இலக்கண விதி. "கூறியுள்ளீர்" என்பது முன்னிலைப் பன்மைச் சொல்தான். பார்க்க: விகுதி. எனவே, ஆலமரத்தடியில் நான் பதிந்ததை ஏன் மீளமைத்தீர் என்று கூற முடியுமா? நன்றி. வணக்கம். -CXPathi (பேச்சு) 16:51, 8 ஏப்ரல் 2022 (UTC)
Please refrain from using talk pages for general discussion of the topic or other unrelated topics. They are for discussion related to improving the article; not for use as a forum or chat room. If you have specific questions about certain topics, consider visiting our reference desk and asking them there instead of on article talk pages. See here for more information. Thank you. AntanO (பேச்சு) 17:23, 8 ஏப்ரல் 2022 (UTC)
- அதனால் தான் பேச்சு:நங்கை, நம்பி, ஈரர், திருனர் பக்கத்தில் பேசாமல் ஆலமரத்தடியில் பதிந்தேன். நீங்கள்தான் அதை நீக்கினீர். எனவே, ஆலமரத்தடியில் நீங்கள் நீக்கியதை மீளமைக்க முடியுமா? நன்றி. வணக்கம் -CXPathi (பேச்சு) 17:26, 8 ஏப்ரல் 2022 (UTC)
தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து use talk pages for inappropriate discussion, நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 17:29, 8 ஏப்ரல் 2022 (UTC)
மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தைக்கூறிக் கொண்டிருக்க முடியாது. வீண் பேச்சு தவிர்க்கவும். நன்றி --AntanO (பேச்சு) 17:31, 8 ஏப்ரல் 2022 (UTC)
- ஐயா, உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை. நீங்கள் தான் என் பேச்சுப் பக்கத்தில் வந்து ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் உரையாட வேண்டாம் என்றும் ஒருமையில் அழைக்க வேண்டாம் என்றும் கூறினீர். அதற்கு நான் இரண்டையும் செய்யவில்லை என விளக்கினால், தேவையற்ற தொகுப்பு எனவும் inappropriate use of talk page என்றும் கூறுகிறீர்கள். ஆலமரத்தடியில் நான் பதிந்ததை ஏன் நீக்கினீர் என்றும் கூறவில்லை. நன்றி! -CXPathi (பேச்சு)
இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.use talk pages for inappropriate discussions. AntanO (பேச்சு) 17:40, 8 ஏப்ரல் 2022 (UTC)
உங்கள் கணக்கு 2 வாரங்களிற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. இறுதி எச்சரிக்கையை மீறியதும், வழிகாட்டல்களைப் பின்பற்றாது விக்கிச் சமூகத்திற்கு குழப்பம் தரும் விதத்தில் நடந்து கொண்டது இதற்கான காரணங்கள். தடை மீறியதும் பயனுள்ள பங்களிப்புச் செய்யுங்கள். மீண்டும் தொடர்ந்தால் நீண்ட கால / முடிவிலித் தடைக்கு உள்ளாகலம். நன்றி. --AntanO (பேச்சு) 18:10, 8 ஏப்ரல் 2022 (UTC)
தடை நீக்கக் கோரிக்கை
தொகு@Kanags:@Natkeeran:@Kurumban:@Sundar:@Sodabottle:@Ravidreams:@Nan:@Info-farmer:@Gowtham Sampath:@Gowtham Sampath:@Arularasan. G:@செல்வா: வணக்கம்! நான் CXPathi.
விக்கிப்பீடியாவிற்கு பால்புதுமை சமூகம் சார்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கலைச்சொற்களின் பட்டியல் இல்லை என்பது நாம் எல்லோரும் அறிந்தது. தொடர்ந்து பால்புதுமை சார்ந்த பக்கங்களை மாற்ற கோரிக்கைகள் வந்துகொண்டே உள்ளன. இந்த கலைச்சொற்களில் பொதுப்புரிதல் எட்டப்படாததால், தலைப்பில் உள்ள எழுத்துப்பிழையைக் கூட நம்மால் திருத்த முடிவதில்லை. இங்கு பார்க்கவும்.
இந்நிலையில், சமீபத்தில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் பால்புதுமை சமூகம் சார்ந்து பயன்படுத்த வேண்டிய கலைச்சொற்களுக்கான கையேடு ஒன்றை வெளியிட்டு, அதைப் பயன்படுத்துமாறு தமிழக அரசிற்கும் தமிழக ஊடகங்களுக்கும் ஆணை ஒன்றை (W.P.No. 7284 of 2021, தேதி: 18.02.2022) இட்டுள்ளது. எனவே நான் நங்கை, நம்பி, ஈரர், திருனர் என்னும் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இக்கையேட்டை பின்பற்ற வேண்டும் என்னும் கோரிக்கையை வைத்தேன். இங்கு பார்க்கவும். மேலும் இது இந்த ஒரு கட்டுரை தொடர்பான கருத்து மட்டும் அல்ல என்பதால், ஆலமரத்தடி கொள்கை பக்கத்திலும் பகிர்ந்தேன். இதை விக்கிப்பீடியா கொள்கை தொடர்பானது அல்ல என நிர்வாகி AntonO நீக்கிவிட்டார். பின்பு இக்கட்டுரையின் சொற்களை மட்டும் மாற்ற மட்டும் இங்கு உரையாடுங்கள் எனவும் குறிப்பிட்ட பக்கங்களில் முறையாக உரையாடுங்கள் எனவும் AntonO கூறினார். எனவே, AntonO சொன்னதற்கு ஏற்ப மீண்டும் ஆலமரத்தடி புதிய கருத்துக்கள் பக்கத்தில் என் கோரிக்கையை விளக்கி முன்வைத்தேன். (பகுப்பு:ந.ந.ஈ.தி பக்கத்தின் பட்டியலில் உள்ள பல கட்டுரைகளின் தலைப்பிற்கும் இச்சிக்கல் இருப்பதால்). அதற்கு பதிலாக ஒரே இடத்தில் உரையாடுங்கள் எனவும் உங்களுக்கான மாற்றுக்கருத்ததை அந்தப் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன் எனவும் AntonO கூறினார். நான் இவ்விவாதத்தை ஆலமரத்தடியில் நடத்துவதன் தேவை குறித்தும் பேச்சு:நங்கை, நம்பி, ஈரர், திருனர் பக்கத்தில் AntonO முன்வைத்த மாற்றுக்கருத்திற்கான விளக்கத்தையும் எழுதினேன்.
நான் அளித்த விளக்கங்களுக்கு எந்த பதிலும் கூறாமல், அந்த விளக்கங்களை நீக்கி விட்டார். நீக்கியதற்கான காரணங்களையும் குறிப்பிடவில்லை. மேலும், எனது பேச்சுப்பக்கத்தில் வந்து ஒரு கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் பொது உரையாடல் கூடாது எனவும், அங்கும் இங்கும் பேச வேண்டாம் எனவும், ஒருமையில் பேச வேண்டாம் எனவும், தனிநபர் தாக்குதல் கூடாது எனவும் கூறினார். பின்பு தனிமனித தாக்குதல் என்ற குற்றச்சாட்டை மட்டும் நீக்கிவிட்டார்.
நான் பேச்சுப்பக்கத்தில் பொது உரையாடல் கூடாது, அங்கும் இங்கும் பேச வேண்டாம் ஆகிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக ஏற்கனவே நீங்கள் சொன்னபடி தான் ஆலமரத்தடியிலேயே பேசுகிறேன் என்றும் கூறினேன். யாரையும் ஒருமையில் பேசும் பழக்கம் இல்லாத நான் 'ஒருமையில் பேச வேண்டாம்' என என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் அதிர்ச்சி அடைந்து, ஆலமரத்தடியில் எழுதியதை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்த்தேன். 'கூறியுள்ளீர்' என்னும் முன்னிலைப் பன்மை வினைச்சொல்லைத் தான் ஒருமை என்று AntonO நினைத்துள்ளார் என்பதை அறிந்து, விக்கிப்பீடியா நிர்வாகிக்கு அடிப்படை தமிழ் இலக்கணம் தெரியாதா என்று மேலும் அதிர்ச்சியை அடைந்து, அவருக்கு நான் ஒருமையில் பேசவில்லை என்ற விளக்கத்தை அளித்தேன். பின்பு Antonஓ சொல்வதைப் பின்பற்றினாலும் ஆலமரத்தடியில் நான் எழுதியதை நீக்கியதன் காரணத்தையும் கேட்டேன். அதற்கு பதிலாக பேச்சுப்பக்கத்தில் பொது உரையாடல் கூடாது என்று AntonO கூறினார். நீங்கள் சொல்வதைத்தான் நான் செய்கிறேன். எனவே ஆலமரத்தடியில் நான் எழுதியதை மீளமைக்க முடியுமா என்று கேட்டதற்கு, AntonO நான் விக்கிப்பீடியாவில் தடை செய்யப்படலாம் என்று கூறினார். நான் அதற்கு மீண்டும், இரண்டு இடங்களில் பேசவில்லை, ஆலமரத்தடியில் மட்டுமே பேசலாம் என்று நான் கூறியதை நீங்கள்தான் நீக்கிவிட்டீர்கள். மேலும், என் பேச்சுப்பக்கத்தில் நீங்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் மட்டுமே கூறினேன், அது எவ்வாறு inappropriate use of takk page என்று வினவினேன். நான் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்கு இம்முறையும் பதில் சொல்லாமல் 'இதுவே இதுதி எச்சரிக்கை. இனிமேல் இவ்வாறு பேசினால் தடை செய்யப்படுவீர்கள்' என்று AntonO கூறினார். நான் எழுதுவது எதையும் இவர் வாசித்துப் பார்க்கிறாரா? ஏதேனும் இவருக்குப் புரிகிறதா என்னும் அதிர்ச்சியே அப்போது எனக்கு ஏற்பட்டது. எனவே, மீண்டும் ஆலமரத்தடியில் நான் எழுதியதை விரிவாக்கி அங்கேயே எழுதினேன். AntonO அதையும் நீக்கி விட்டு என்னை 14 நாட்களுக்குத் தடை செய்துவிட்டார்.
AntonO என்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளான அங்கும் இங்கும் பேசுதல், பேச்சுப்பக்கத்தில் பொது உரையாடல், ஒருமையில் பேசுதல், தனிநபர் தாக்குதல் ஆகியவற்றில் நான் ஒன்றைக்கூட செய்யவில்லை. நான் அளித்த உரிய விளக்கங்களையும் படித்துப் பார்த்து, அவற்றின் போதாமைகளையோ, மேலதிக விளக்கங்களையோ AntonO கேட்கவில்லை. எனவே, என்மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், ஆலமரத்தடியில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஆணையைப் பரிசீலித்து, அதன் உதவியுடன் விக்கிக்கான பால்புதுமை சார்ந்த கலைச்சொற்களின் பட்டியலை இறுதி செய்ய வேண்டும் எனவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! வணக்கம்.
- @Kanags:@Natkeeran:@Kurumban:@Sundar:@Sodabottle:@Ravidreams:@Nan:@Info-farmer:@Gowtham Sampath:@Gowtham Sampath:@Arularasan. G:@செல்வா: யாராவது இருக்கிறீர்களா?
May 2022
தொகுவணக்கம், வார்ப்புரு:வைணவ சமயம் என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 01:47, 6 மே 2022 (UTC)
வணக்கம். இந்தக் கட்டுரையை விரைந்து நீக்க பரிந்துரைத்துள்ளீர்கள். ஏதேனும் குறிப்பிட்ட காரணம் இருக்கிறதா என்பதனைத் தெரிவியுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:28, 4 சூலை 2022 (UTC)
- அண்ணா, பொதுவாக இங்கு தமிழ் நூல்களையே குறிப்பிடத் தக்கது அன்று என நீக்கும்போது, ஒரு டேனிஷ் மொழி நூலின் ஒரு கதைக்குத் தனிப்பக்கம் வேண்டுமா? -CXPathi (பேச்சு) 17:59, 5 சூலை 2022 (UTC)
தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு
தொகுவணக்கம்!
ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.
தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!
- விழா ஏற்பாட்டுக் குழு
விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு
தொகுவிக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு
தொகுவிக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
- ஒருங்கிணைப்பாளர்கள்
WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open
தொகுDear Wikimedian,
We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.
We also have exciting updates about the Program and Scholarships.
The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.
For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.
‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.
Regards
MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)
(on behalf of the WCI Organizing Committee)
WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline
தொகுDear Wikimedian,
Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.
COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.
Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call
- WCI 2023 Open Community Call
- Date: 3rd December 2022
- Time: 1800-1900 (IST)
- Google Link': https://meet.google.com/cwa-bgwi-ryx
Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)
On Behalf of, WCI 2023 Core organizing team.
December 2022
தொகுதயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து தக்க காரணமின்றி பேணுகை வார்ப்புருக்களை நீக்கினால், as you did at யூமா வாசுகி, நீங்கள் தடை செய்யப்படலாம். ~AntanO4task (பேச்சு) 11:52, 11 திசம்பர் 2022 (UTC)
- @~AntanO4task: யூமா வாசுகி பக்கத்தில் நான் எந்த வார்ப்புருவை நீக்கினேன்? -CXPathi (பேச்சு) 02:25, 12 திசம்பர் 2022 (UTC)
செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G
தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடலுக்கான அழைப்பு
தொகுவணக்கம்!
செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம்.
நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் எனும் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 27 (அன்றிரவு 12 மணி வரை)
- ஒருங்கிணைப்புக் குழு