காஷ்மீரின் தோரமனன்
காஷ்மீரின் தோரமனன் (Toramana of Kashmir) 6-7 ஆம் நூற்றாண்டில் காஷ்மீரின் ஆட்சியாளராக இருந்தார். இந்த ஆட்சியாளரால் வெளியிடப்பட்ட நாணயங்களின் ஆய்வுகளில் பெரும்பாலும் "இரண்டாம் தோரமனன்" என்று குறிப்பிடப்படுகிறார். ஆனால் இந்த பெயர் இப்போது காபுலிஸ்தானின் முந்தைய அல்கான் ஹூன ஆட்சியாளருக்குப் பயன்படுத்தப்படுகிறது (யுதிஷ்ட்டிரன்).[1] [2]
காஷ்மீரின் தோரமனன் | |
---|---|
காஷ்மீரின் மன்னன் | |
ஆட்சிக்காலம் | 6-7ஆம் நூற்றாண்டு பொ.ச. |
அல்கான் ஹூனர்களின் வழித்தோன்றல்
தொகுகாஷ்மீரின் தோரமனனின் செப்பு நாணயங்கள் காஷ்மீர் பகுதியில் பரவலாகக் காணப்படுகின்றன. மேலும் பிரவரசேனன், மேகவன், துய்சினன் போன்ற பிற ஆட்சியாளர்களின் இதேபோன்ற பாணியிலான நாணயங்களும் கிடைத்துள்ளன. [1] இந்த நாணயங்கள் பொதுவாக பொ.ச. 6-7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. தோரமனனின் நாணயங்கள் காலவரிசையில் கடைசியாக வந்து அதன்பிறகு பல நூற்றாண்டுகளுக்கு நகலெடுக்கப்பட்டன. [1] [3] தோரமனன் என்ற பெயரில் மற்ற ஆட்சியாளர்களும் அறியப்படுகிறார்கள். பிரபலமான அல்கான் ஹூன ஆட்சியாளர்களான தோரமணன், இரண்டாம் தோரமனன் போன்றவர்கள். [2]
இந்த காஷ்மீர் ஆட்சியாளர்களின் காலம், புவியியல் இருப்பிடம், அவர்களின் பெயர்கள் போன்றவை 5-6 ஆம் நூற்றாண்டின் வடமேற்கு இந்தியாவில் ஆட்சி செய்தன் அல்கோன் ஹூனர்களின் பெயர்களை ஒத்ததாகவே இருப்பதால், இவர்கள் அல்கோன் ஹூனர்களின் வழித்தோன்றல்களாகவே இருந்திருக்க "அதிக வாய்ப்பு" உள்ளது. [1] வடமேற்கு இந்தியாவில் ஏற்பட்ட தோல்விகளைத் தொடர்ந்து அல்கோன் ஹூனர்கள் காந்தாரதேசம், காஷ்மீர் போன்ற பகுதியில் மீள்குடியேறியதாக அறியப்படுகிறது.[4][5]
நாணயம்
தொகுதோரமனனின் அறியப்பட்ட நாணயம் தாமிரத்தில் மட்டுமே உள்ளது. இந்த நாணயங்கள் பிற்கால குசானர்கள், கிடாரைட்டுகளின் நாணய வகைகளைப் பின்பற்றுகின்றன. மன்னன் முன்பக்கத்தில் நிற்கிறார். அதன் பின்புறத்தில் ஒரு தெய்வம் தாமரையைப் பிடித்துள்ளது. மேற்புறத்தில் தோரமனன் என்ற பெயர் 5-6 ஆம் நூற்றாண்டு பிராமி எழுத்துமுறையில் தோன்றுகிறது. தலைகீழ் செங்குத்தாக எழுதப்பட்ட "கி-டிடி-ரா" என்ற எழுத்தும் உள்ளது. இதன் மூலம் கிடாரைட்டுகளின் காஷ்மீரின் ஆக்கிரமிப்பை அறியலாம். கார்கோடா வம்சத்தின் பிற்பகுதியில் காணப்பட்ட கிடாரா என்ற வார்த்தை காஷ்மீர் நாணயத்தில் இருக்கிறது.[6][7]
இராஜதரங்கிணியில் தோற்றம்
தொகுகல்கணர் இயற்ரிய இராஜதரங்கிணியில் (பொ.ச. 12-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது) அல்கோன் ஹூனர்களின் பெயர்களைக் கொண்ட பல ஆட்சியாளர்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. [10]
இராஜதரங்கிணியின் காலவரிசை பெரும்பாலும் குறைபாடுடையதாக இருந்தாலும், இந்த ஆட்சியாளர்களின் பல பெயர்கள், குறிப்பாக கோனாண்டா வம்சம் (II) என்று அழைக்கப்படுபவர்களின் பெயர்கள், காஷ்மீரில் கிடைத்த இந்த நாணயங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு பொ.ச.. 6-7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என அறியப்படுகிறது.[11] வரலாற்றாளர் இராஜ் குமாரின் கூற்றுப்படி, "கல்கணரின் அறிவிப்புடன் இந்த நாணயத்தின் தொடர்பை சந்தேகிக்க முடியாது."[10]
இராஜதரங்கிணியின் கூற்றுப்படி, காஷ்மீரின் தோரமனான் சிரேஷ்டசேனனின் (முதலாம் பிரவரசேனன்) மகனும் மேகவாகனனின் பேரனும் ஆவார். மேலும் இவர் தனது சகோதரர் இரண்யனுக்கு துணை அரசராக இருந்தார். கணக்கின்படி, இரண்யன் தோரமனன் தனது சொந்த பெயரில் அரச நாணயங்களை வெளியிட்டபோது அவரை சிறையில் அடைத்தார். காஷ்மீரின் தோரமனனின் நாணயத்தின் கண்டுபிடிப்பு இந்த கதைக்கு சில நம்பகத்தன்மையை அளிக்கிறது. [12] இராஜதரங்கிணியின் படி, தோரமனனின் மகன் இரண்டாம் பிரவரசேனன் என்பவனாவான். இவனது பெயரில் வெயிட்ட நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [13] [1]
இராஜதரங்கிணியின் கூற்றுப்படி, இவர்களது ஆட்சியானது கார்கோட பேரரசின் நிறுவனர் துர்லபவர்தனனின் மகன் பிரதாபதித்யனால் அகற்றப்பட்டது.[14][15][16]
காஷ்மீரின் தோரமனனின் நாணயத்தின் பிற்காலப் பிரதிகள்
தொகுதோரமனனின் நாணயங்கள் காஷ்மீரில் இந்து ஆட்சி முடியும் ( இலோகரா வம்சம், 1003-1320 பொ.ச.) வரை பயன்பாட்டில் இருந்தன. மேலும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், நகலெடுக்கப்பட்டன.[1] [3]
-
காஷ்மீரின் தோரமனனின் வாரிசுகளின் நாணயம், பொ.ச.855-ன் பிற்பகுதியில் தேதியிட்டது.
-
இலோகரா வம்சத்தைச் சேர்ந்த உப்பதேவர்களின் ஜகதேவரின் நாணயத்தில் (பொ.ச.1199-1213) தோற்றமளிக்கும் தோரமனனின் பகட்டான உருவம்
ஆதாரங்கள்
தொகு- Alram, Michael (2014). "From the Sasanians to the Huns New Numismatic Evidence from the Hindu Kush". The Numismatic Chronicle 174: 261–291. பன்னாட்டுத் தர தொடர் எண்:0078-2696. https://www.jstor.org/stable/44710198.
- Joe Cribb (1 April 2017). "Early Medieval Kashmir Coinage – A New Hoard and An Anomaly". Numismatic Digest Volume 40 (2016). https://www.academia.edu/32663187.
- Chandra Ray, Sunil (1969). Early History And Culture Of Kashmir. New Delhi: Munshiram Manoharlal.
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Cribb 2017.
- ↑ 2.0 2.1 Alram 2014.
- ↑ 3.0 3.1 Chandra Ray 1969.
- ↑ Dani, Ahmad Hasan; Litvinsky, B. A. (1996). History of Civilizations of Central Asia: The crossroads of civilizations, A.D. 250 to 750 (in ஆங்கிலம்). UNESCO. p. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789231032110.
- ↑ Kim, Hyun Jin (2015). The Huns (in ஆங்கிலம்). Routledge. p. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317340911.
- ↑ Chandra Ray 1969, ப. 234.
- ↑ Cunningham, Alexander (1894). Coins Of Mediaeval India From The Seventh Century. p. 42.
- ↑ "Toramana coin (Kashmir) British Museum". The British Museum (in ஆங்கிலம்).
- ↑ Cribb 2017, ப. 86-110.
- ↑ 10.0 10.1 Kumar, Raj (2008). History Of The Chamar Dynasty : (From 6Th Century A.D. To 12Th Century A.D.) (in ஆங்கிலம்). Gyan Publishing House. pp. 318–319. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-635-8.
ஆனால் காஷ்மீர் செப்புக் காசுகளில் தோரமனன் என்ற பெயர் காணப்படுகிறது. அவற்றில் குறிப்பிடத்தக்க அளவு இன்றுவரை பாதுகாக்கப்படுட்டுள்ளது. கல்கணரின் அறிவிப்புடன் இந்த நாணயத்தின் தொடர்பை சந்தேகிக்க முடியாது.
- ↑ Cribb 2017, ப. 99, "இந்த காலகட்டத்தில் காஷ்மீரின் ஆட்சியாளர்கள் 4 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து 6 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வடமேற்கு இந்தியாவின் பெரும் பகுதிகளை ஆண்ட ஹூன மன்னர்களின் வழித்தோன்றல்களாக இருந்திருக்கலாம்.".
- ↑ Chandra Ray 1969, ப. 45, "இரண்யனின் சகோதரனான தோரமனன் செப்புக் காசுகளை வெளியிட்டதில் சில உண்மைகள் இருக்கலாம். தோராமனனின் ஏராளமான செப்பு நாணயங்கள் பள்ளத்தாக்கில் காணப்படுகின்றன. இந்த நாணயங்கள் இந்து ஆட்சியின் இறுதி வரை இருந்த போதிலும், அவற்றின் முதல் புழக்கம் ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்திருக்கலாம். அவை இரண்யனின் சகோதரனால் வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை..".
- ↑ Chandra Ray 1969, ப. 45, "தோரமனனின் மகன் இரண்டாம் பிரவரசேனன் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு வரலாற்று நபராவார். பிரவரபுர நகரம் இவரது பெயரில் நுறுவப்பட்டிருக்கலாம். கிடார குசான நாணயங்களின் தவிர்க்க முடியாத செல்வாக்கைக் கொண்ட சில தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களையும் இவருக்குக் கூறலாம்...
- ↑ Dani, Ahmad Hasan; Litvinsky, B. A. (1996). History of Civilizations of Central Asia: The crossroads of civilizations, A.D. 250 to 750 (in ஆங்கிலம்). UNESCO. p. 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789231032110.
- ↑ PAL, PRATAPADITYA (1973). "Bronzes of Kashmir: Their Sources and Influences". Journal of the Royal Society of Arts 121 (5207): 727. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-9114. https://www.jstor.org/stable/41371150. ""கார்கோடர்கள் அரியணைக்கு வருவதற்கு முன்பு, காஷ்மீர் நீண்ட காலமாக அந்நிய ஆட்சியாளர்கள் அல்லது பழங்குடியினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கலாம். நிச்சயமாக குசானர்கள், ஹுனர்கள் இருவரும் பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் இருந்தனர். உண்மையில், காஷ்மீரின் வரலாறு பொ.ச.625-இல் கார்கோட வம்சத்தின் அடித்தளத்துடன் மட்டுமே வடிவம் பெறத் தொடங்குகிறது. கார்கோடர்களின் உடனடி முன்னோடியாக ஹூனர்கள் இருந்ததாகத் தெரிகிறது..."".
- ↑ Kim, Hyun Jin (2015-11-19). "THE HUNS OF CENTRAL ASIA AND SOUTH ASIA: THE KIDARITE AND HEPHTHALITE WHITE HUNS". The Huns (in ஆங்கிலம்). Routledge. p. 58. எண்ணிம ஆவணச் சுட்டி:10.4324/9781315661704-11 (inactive 31 October 2021). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-34090-4. Archived from the original on 2021-11-25. பார்க்கப்பட்ட நாள் 2022-02-25.
{{cite book}}
: CS1 maint: DOI inactive as of அக்டோபர் 2021 (link)