காஷ்மீர் சிங்
காஷ்மீர் சிங்(Kashmir Singh') (பிறப்பு: 1941), முன்னாள் இந்திய உளவாளியான இவர் பாகிஸ்தான் சிறைச்சாலைகளில் 35 ஆண்டுகள் கழித்த பிறகு, பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப்பின் அறிவித்தலின்படி விடுவிக்கப்பட்டு இந்தியா வந்தடைந்தார்.
இளமை வாழ்க்கை
தொகுகாஷ்மீர் சிங் இந்திய இராணுவத்தில் ஏறத்தாழ் 1962 முதல் 1966 முடிய பணியாற்றிய பிறகு, பஞ்சாப் மாநில காவல் துறையில் பணியில் இருக்கும் போது, மாதம் ரூபாய் 400 வீதம் ஒப்பந்த அடிப்படையில், இப்ராகிம் எனும் பெயரில் முஸ்லீமாக வேடம் தரித்து, பாகிஸ்தான் சென்று இந்தியாவிற்கு உளவுப் பணி மேற்கொண்டார்.[1]
கைது
தொகு1973ல் பெசாவர்-ராவல்பிண்டி சாலையில் வைத்து காஷ்மீர் சிங் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டார்.[1][2]
உளவு மற்றும் கடத்தல் செயல்களுக்காக காஷ்மீர் சிங் குற்றம் சாட்டப்பட்டு சிறை அடைக்கப்பட்டார்.. ஆனால் இக்குற்றச்சாட்டை பாகிஸ்தானால் நிருபிக்க இயலவில்லை.[3] காஷ்மீர் சிங் பாகிஸ்தான் சிறையில் இருந்த போது, அவருக்கும் பரம்ஜித் கௌர் எனும் மனைவியும், 10 வயதிற்குட்பட்ட 3 குழந்தைகள் இருந்தனர்.
1973ல் பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம் காஷ்மீர் சிங்கிற்கு மரண தண்டனை விதித்தது.[4] 1976-77களில் இராணுவ நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பை சிவில் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.[1][4] பின்னர் காஷ்மீர் சிங்கை முடிவிலா சிறை தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்[1][5] காஷ்மீர் சிங் 35 ஆண்டுகள் சிறையில் காலம் கழித்தார்.[6]
1986ல் காஷ்மீர் சிங் மரண தண்டனை கைதியாக லாகூர் சிறையில் இருந்தது அறியப்பட்டது. .[7]
விடுதலை
தொகு2008ல் காஷ்மீர் சிங் சிறையில் மன நலம் குன்றியவராக காணப்பட்டர்.[6] இதனால் அன்றைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முசாரப்பின் அறிவுறுத்தலில் பேரில், 4 மார்ச் 2008 அன்று காஷ்மீர் சிங் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.[8]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Singh, Khushwant (7 March 2008). "Kashmir Singh denies conversion". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 23 October 2012. பார்க்கப்பட்ட நாள் 7 March 2008.
- ↑ "Kashmir Singh released from Lahore jail". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 March 2008. Archived from the original on 23 October 2012. பார்க்கப்பட்ட நாள் 7 March 2008.
- ↑ "Kashmir Singh returns to India after 35 years in Pak jails". Yahoo! India News. 4 March 2008. பார்க்கப்பட்ட நாள் 7 March 2008.
- ↑ 4.0 4.1 Jolly, Asit (4 March 2008). "A powerful Indian love story". BBC. பார்க்கப்பட்ட நாள் 7 March 2008.
- ↑ "I was a spy and did my duty, says Kashmir Singh". The Indian Express. 7 March 2008. Archived from the original on 9 March 2008. பார்க்கப்பட்ட நாள் 7 March 2008.
- ↑ 6.0 6.1 "Hero's welcome for forgotten prisoner". Herald Sun. 6 March 2008. பார்க்கப்பட்ட நாள் 7 March 2008.
- ↑ Mann, Kuldeep (4 March 2008). "Kashmir Singh comes home after 35 yrs". Hindustan Times. Archived from the original on 5 March 2008. பார்க்கப்பட்ட நாள் 7 March 2008.
- ↑ "Kashmir Singh arrives home, gets a hero's welcome". 4 March 2008. Archived from the original on 7 மார்ச் 2008. பார்க்கப்பட்ட நாள் 7 March 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)