கா. அயவதன ராவ்
ராவ் பகதூர் காஞ்சீவரம் அயவதான ராவ் (Conjeevaram Hayavadana Rao) (10 சூலை 1865 - 27 சனவரி 1946) இவர் ஓர் இந்திய வரலாற்றாசிரியரும், அருங்காட்சியகவியலாளரும், மானுடவியலாளரும், பொருளாதார நிபுணரும், பன்மொழிப் புலமைக் கொண்ட நிபுணரும் ஆவார் . இவர் பேரரசின் மானுடவியல் நிறுவனத்திலும், இந்திய வரலாற்று பதிவுகள் ஆணையத்திலும், பேரரசின் பொருளாதாரச் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார்.
ராவ் பகதூர் காஞ்சீவரம் அயவதான ராவ் | |
---|---|
பிறப்பு | ஓசூர், சேலம் மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 10 சூலை 1865
இறப்பு | 27 சனவரி 1946 பெங்களூர், மைசூர் அரசு | (அகவை 80)
பணி | வரலாற்றாசிரியர், மானுடவியலாளர், பொருளாதார நிபுணர் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஅயவதான ராவ் 1865 சூலை 10, அன்று அப்போதைய சென்னை மாகாணத்திருந்த சேலம் மாவட்டத்தின் ஓசூர் நகரில் கன்னடம் பேசும் தேசஸ்த் மத்வ பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். [1] வரலாற்றில் பட்டம் பெற்ற பிறகு, இவர் சட்டத்தையும், பொருளாதாரத்தையும் பயின்றார். பின்னர் மற்றும் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வாசிப்பவராககப் பணியில் சேர்ந்தார். இவர் ஓய்வு பெறும் வரை ஒரு வாசிப்பவராகவே பணியாற்றி "தி இந்தியன் பயோகிராஃபிக்கல் டிக்ஷனரி" என்பதைத் தொகுத்தார். இவர் ஆங்கிலம், லத்தீன், பிரஞ்சு, ஜெர்மன், கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் சமசுகிருதம் போன்ற மொழிகளில் சரளமாக இருந்தார்.
மைசூர் அரசு
தொகு1924 ஆம் ஆண்டில், <i>பி.எல். ரைஸ்</i> என்பவர் எழுதிய மைசூர் அரசிதழை திருத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். ஏழு தொகுதிகளை உள்ளடக்கிய திருத்தப்பட்ட பதிப்பு 1927 இல் வெளியிடப்பட்டது. இவர் இதைத் தொடர்ந்து மைசூர் வரலாற்றைப் பற்றிய மூன்று தொகுதிகளை வெளியிட்டார். இது (1399-1799) உடையார் வம்சத்தை விவரிக்கிறது.
இறப்பு
தொகுஇவர் 1946சனவரி 27 அன்று பெங்களூரில் காலமானார். [2]
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- "HAYAVADANA RAO C., 1865-1946". classicalkannada.org. Archived from the original on 2012-03-30. பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.