கினபாலு பூங்கா

கினபாலு பூங்கா (Kinabalu Park) 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மலேசியாவின் முதல் தேசிய பூங்கா ஆகும். டிசம்பர் 2000இல் மலேசியாவின் முதல் உலக மரபுரிமை தளமாக, யுனெஸ்கோவால் அறிவிக்கப்படது. இப் பூங்கா "தனித்துவமான உலகளாவிய மதிப்புகள்" மற்றும் உலகின் மிக முக்கியமான உயிரியல் தளங்களில் ஒன்றாகும். இங்கு, 326 பறவைகள் மற்றும் சுமார் 100 பாலூட்டிகள்,[1] மற்றும் 110 வகையான ஊர்வன இனங்கள் உள்ளன.[2]

கினபாலு பூங்கா
அமைவிடம்சபா, மலேசியா
அருகாமை நகரம்கோத்தா கினபாலு, தூரன், தம்பாருலி, கோத்தா பெலட், ராணா
ஆள்கூறுகள்6°09′N 116°39′E / 6.15°N 116.65°E / 6.15; 116.65
பரப்பளவு754 km2 (291 sq mi)
நிறுவப்பட்டது1964
நிருவாக அமைப்புசபா பூங்காக்கள்
அலுவல் பெயர்கினபாலு பூங்கா
வகைஇயற்கை
வரன்முறைix, x
தெரியப்பட்டது2000 (24th உலக பாரம்பரியக் குழு)
உசாவு எண்1012
State Partyமலேசியா
மண்டலம்ஆசியா-பசிபிக் உலக பாரம்பரிய இடங்களின் பட்டியல்

இப் பூங்கா, கிழக்கு மலேசியாவிலுள்ள கினபாலு சபாவின் போர்னியோ என்ற இடத்தில் உள்ளது, இது கினபாலு மலையைச் சுற்றியுள்ள 754 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது, இது 4,095.2 மீட்டர் உயரமுள்ள போர்னியோ தீவின் மிக உயர்ந்த மலையாகும். இது சபா மற்றும் மலேசியாவில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். 1967 ஆம் ஆண்டில், 987,653 பார்வையாளர்கள் மற்றும் 43,430 மலை ஏறுபவர்கள் இப் பூங்காவை பார்வையிட்டனர்.

வரலாறு

தொகு

இப்பகுதி 1964 இல் ஒரு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. பிரித்தானிய காலனித்துவ நிர்வாகி மற்றும் இயற்கை நிபுணரான ஹக் லோ 1851 ஆம் ஆண்டில் தூரன் பகுதிக்குச் சென்றார். மவுண்ட் கினபாலுவினுடைய உச்சத்தை அடைவதற்கு முதலில் பதிவு செய்த மனிதர் இவர் ஆவார்.[3] பின்னர், மலையின் மிக உயரமான சிகரத்திற்கு லோஸ் பீக் எனப் பெயரிடப்பட்டது

நிலவியல்

தொகு

கினபாலு பூங்கா சபாவின் மேற்கு கடற்கரையில் க்ரோக்கர் மலைத்தொடரில் அமைந்துள்ளது. இது மேற்கு கரையோரப் பகுதியிலுள்ள ராணா மாவட்டத்தில் அமைந்துள்ளது. தெற்கில் ஒரு தனி பூங்காவாகக் கருதப்படும் க்ரோக்கர் ரேஞ்ச் தேசிய பூங்காவுடன் இந்த பூங்காவையும் ஒன்று என பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

 
மரங்கள் அடர்ந்த ராஜா விடுதியின் முன்புறத் தோற்றம்
 
கினபாலு மலையில் வளர்ந்த ஒரு தாவரம்

பூங்கா தலைமையகம் கோத்தா கினபாலுவிலிருந்து 88 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சபாவின் மற்ற பகுதிகளிலிருந்தும் பூங்கா தலைமையகத்திற்கு செல்லும் சாலைகள் பாதுகாக்கப்பட்ட சாலையாக உள்ளது. இது கினபாலு பூங்காவின் தெற்கு எல்லையில் 1,563 m (5,128 அடி) உயரத்தில் அமைந்துள்ளது,

படத்தொகுப்பு

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


குறிப்புகள்

தொகு
  1. Chilling out in a tropical destination பரணிடப்பட்டது 23 மே 2016 at the வந்தவழி இயந்திரம். The Jakarta Post, 12 June 2011.
  2. Liew, T.S., M. Schilthuizen & M. Lakim, 2017. The determinants of land snail diversity along a tropical elevational gradient: insularity, geometry and niches. Journal of Biogeography, 37: 1071-1078
  3. "Kinabalu Park". Sabah Parks. Archived from the original on 4 August 2008. பார்க்கப்பட்ட நாள் 1 November 2008.
  .
"https://ta.wikipedia.org/w/index.php?title=கினபாலு_பூங்கா&oldid=3924832" இலிருந்து மீள்விக்கப்பட்டது