கிம்ச்சி

கிம்ச்சி (김치), IPA: kimtɕʰi), என்பது காய்கறிகளைக் கொண்டு, பல்வேறு சுவை, மணப்பொருள்கள் சேர்த்து உருவாக்காப்படும் மரபுசார்ந்த தென்கொரிய உணவு வகை. இதில் நொதிக்க வைத்தும், நொதிக்க வைக்காததுமாகிய இரண்டு வகையும் உண்டு. நாப்பா முட்டைக்கோசு, வெங்காயம், வெள்ளரிக்காய், சிவப்பு முள்ளங்கி போன்றவற்றைக் கொண்டு நூற்றுக்கணக்கான வகைகள் செய்கிறார்கள்[1] . முக்கிய உணவுடன் சேர்த்துச் சாப்பிடும் உணவில் (தொடுகறி போல் (பஞ்ச்சன் (banchan)) கிம்ச்சி பரவலாகப் பயன்படுகின்றது.

கிம்ச்சி
காய்கறிகளைக் கொண்டு செய்யும் கிம்ச்சி என்னும் தென்கொரிய உணவு வகை

வரலாறுதொகு

 
பழங்கால கிம்ச்சி

2600 முதல் 3000 ஆண்டுகளுக்கு முன்பே கிம்ச்சி என்னும் உணவைப் பற்றிய குறிப்பு சி சிங் (Shi Jing) (). என்னும் சீனச் செய்யுள் புத்தகத்தில் உள்ளது [2] . இப்புத்தகத்தில் கிம்ச்சி என்பது சியோ (jeo (菹)) என்று அழைக்கப்பட்ட்டுள்ளது. 12 ஆவது நூற்றாண்டில் இனிப்பு, புளிப்பு முதலான சுவைப்பொருள்களும், நிறம் தரும் பொருள்களும் சேர்க்கப்பட்டன [3] . கி.பி 1500 உக்குப் பின் சிவப்பு குடமிளகாய் முதலிய சேர்க்கப்பட்டன.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகள்தொகு

  1. Saveur.com A World of Kimchi
  2. (கொரிய மொழி) The origin of the etymology on Kimchi from Kimchi Expo 2003 website
  3. "Kimchi Museum Official Website". 2011-07-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-07-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்ச்சி&oldid=3239966" இருந்து மீள்விக்கப்பட்டது