கிம் கிளிஸ்டர்சு
கிம் அன்டோனி லோடெ க்ளைஸ்டர்ஸ் (Kim Antonie Lode Clijsters, பிறப்பு 8 சூன் 1983) பெல்ஜிய நாட்டு தொழில்முறை டென்னிசு விளையாட்டுக்காரர். பெண்கள் டென்னிசு சங்கம் வெளியிடும் தரவரிசையில் ஒற்றையர், இரட்டையர் இருபிரிவுகளிலும் உலக எண் ஒன்றாக விளங்கிய முன்னாள் வீரர். 31 சனவரி 2011 நிலவரப்படி உலகின் இரண்டாம் இடத்தில் இருப்பவர். ஓர் குழந்தைக்கு தாயானபின்னரும் மீண்டும் போட்டிகளில் கலந்துகொண்டு பெருவெற்றித் தொடர்களில் கூடுதலான ஒற்றையர் பட்டங்களைப் பெற்ற பெருமையை மார்கெரெட் கோர்ட்டுடன் பகிர்ந்து கொள்கிறார்.
நாடு | பெல்ஜியம் |
---|---|
வாழ்விடம் | ப்ரீ, பெல்ஜியம் |
உயரம் | 1.74 m (5 அடி 8+1⁄2 அங்) |
தொழில் ஆரம்பம் | 17 ஆகத்து 1997 |
இளைப்பாறல் | 6 மே 2007 மீள்வரவு 11 ஆகத்து 2009 |
விளையாட்டுகள் | வலதுகை (இருகைகளாலும் பின்னோக்கிய பந்தடி) |
பரிசுப் பணம் | US$21,431,916 ( பெண்கள் டென்னிசு சங்க தரவரிசையில் 6வது ) |
ஒற்றையர் போட்டிகள் | |
சாதனைகள் | 476–113 (80.8%) |
பட்டங்கள் | 41 பெண்கள் டென்னிசு சங்கப் போட்டிகளில் (13வது) 3 பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு வாகைகள் |
அதிகூடிய தரவரிசை | எண். 1 (11 ஆகத்து 2003) |
தற்போதைய தரவரிசை | எண். 2 (31 சனவரி 2011) |
பெருவெற்றித் தொடர் ஒற்றையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | வா (2011 ) |
பிரெஞ்சு ஓப்பன் | இறுதி (2001, 2003) |
விம்பிள்டன் | அரையிறுதி (2003, 2006) |
அமெரிக்க ஓப்பன் | வா (2005, 2009, 2010) |
ஏனைய தொடர்கள் | |
Tour Finals | வா (2002, 2003, 2010) |
இரட்டையர் போட்டிகள் | |
சாதனைகள் | 131–54 |
பட்டங்கள் | 11 பெ.டெ.ச, 3 ப.டெ.கூ |
அதியுயர் தரவரிசை | எண். 1 (4 ஆகத்து 2003) |
பெருவெற்றித் தொடர் இரட்டையர் முடிவுகள் | |
ஆத்திரேலிய ஓப்பன் | காலிறுதி (2003) |
பிரெஞ்சு ஓப்பன் | வா (2003) |
விம்பிள்டன் | வா (2003) |
அமெரிக்க ஓப்பன் | காலிறுதி (2002) |
இற்றைப்படுத்தப்பட்டது: சனவரி 29, 2011. |
பெண்கள் டென்னிசு சங்கத்தின் ஒற்றையர் பட்டங்களில் 41யும் இரட்டையர் பட்டங்களில் 11யும் வென்றுள்ளார். இதுவரை நான்கு பெருவெற்றித் தொடர் பட்டங்களை வென்றுள்ளார்: (2005,2009, 2010 ஆண்டுகளில்) அமெரிக்க டென்னிசுத் திறந்த போட்டிகளில் மூன்றுமுறையும் ஆத்திரேலியத் திறந்த போட்டிகளில் (2011ஆம் ஆண்டு) ஒருமுறையும் வென்றுள்ளார். மேலும் பெருவெற்றித் தொடர் ஒற்றையர் போட்டிகளில் இரண்டாவதாக நான்கு முறையும் இருந்துள்ளார். பெண்கள் டென்னிசு சங்க ஒற்றையர் பட்டங்களை 2002, 2003 மற்றும் 2010 ஆண்டுகளில் வென்றுள்ளார். இரட்டையர் ஆட்டங்களில் பிரெஞ்சு ஓப்பனிலும் விம்பிள்டனிலும் 2003ஆம் ஆண்டு வாகை சூடினார். 6 மே 2007 அன்று உடனடியாக தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்த கிளிஸ்டர்சு [2] இரண்டாண்டுகளுக்குப் பிறகு 26 மார்ச் 2009 அன்று 2009 ஆண்டுக்கான பெண்கள் சங்கப் போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பதாக அறிவித்தார்.[3] தனது மூன்றாவது போட்டியிலேயே அவர் தமது இரண்டாவது அமெரிக்க ஓப்பன் பட்டத்தை வென்றார். இதன்மூலம் முதன்முறையாக தரவரிசையில் இடம்பெறாத விளையாட்டுக்காரர் ஒருவர் பட்டம் வென்ற பெருமையையும் 1980ஆம் ஆண்டில் இவான் கூலகாங்கிற்குப் பிறகு முதல் தாயாக பெரும் போட்டியொன்றில் வென்ற பெருமையையும் பெற்றார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Hinds, Richard (2011-01-24). "Scottish Andy and Aussie Kim left to fly the flag". The Sydney Morning Herald. பார்க்கப்பட்ட நாள் 2011-01-25.
Six years after her split from Lleyton Hewitt, and despite a subsequent marriage to an American basketballer, some still refer to Kim Clijsters as "Aussie Kim".
- ↑ Sport.be பரணிடப்பட்டது 2006-11-07 at the வந்தவழி இயந்திரம், Kim's Diary-Thanks you, 6 May 2007
- ↑ Reuters.com, Clijsters announces return to tour, 26 March 2009
- ↑ SportsIllustrated.cnn.com