கிம் கொட்டன்
கிம் கொட்டன் (பிறப்பு: 24 பெப்ரவரி 1978) ஒரு நியூசிலாந்து துடுப்பாட்ட நடுவர் ஆவார்.[1][2][3] ஆகத்து 2018 இல், அவர் 2018-19 ஐசிசி உலக இருபது20 கிழக்கு ஆசியா-பசிபிக் தகுதிப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றினார். அடுத்த மாதம் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை நடுவர்களின் மேம்பாட்டுக் குழுவில் சேர்க்கப்பட்டார்.[4][5][6]
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | கிம் டயானி கொட்டன் |
பிறப்பு | 24 பெப்ரவரி 1978 ஆக்லாந்து, நியூசிலாந்து |
பங்கு | நடுவர் |
நடுவராக | |
இ20ப நடுவராக | 8 (2023–2024) |
பெஒநாப நடுவராக | 22 (2019–2024) |
பெஇ20 நடுவராக | 63 (2018–2024) |
மூலம்: கிரிக்கின்ஃபோ, 14 சனவரி 2024 |
நடுவர் தொழில்
தொகுஅக்டோபர் 2018 இல், 2018 ஐசிசி பெண்கள் உலக இருபது20 போட்டிக்கான பன்னிரண்டு கள நடுவர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார்.[7]
பிப்ரவரி 2020 இல், ஆஸ்திரேலியாவில் 2020 ஐசிசி மகளிர் இருபது20 உலகக் கோப்பையில் கடமையாற்றும் நடுவர்களில் ஒருவராக ஐசிசி அவரை நியமித்தது.[8] இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான இரண்டு கள நடுவர்களில் ஒருவராகக் கொட்டன் பெயரிடப்பட்டார்.[9] பிப்ரவரி 2022 இல், நியூசிலாந்தில் நடைபெறும் 2022 மகளிர் துடுப்பாட்ட உலகக் கோப்பை கள நடுவர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார்.[10][11] ஏப்ரல் 1, 2022 அன்று, இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான கள நடுவர்களில் ஒருவராக கொட்டன் நியமிக்கப்பட்டார்.[12]
5 ஏப்ரல் 2023 அன்று, இலங்கை நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நியூசிலாந்து மற்றும் இலங்கை இடையேயான தனது முதல் ஆண்கள் இருபது20 பன்னாட்டுப் போட்டியில் அவர் கடமையாற்றினார்.[13] கொட்டன் முழு உறுப்பினர் அணிகளுக்கிடையிலான ஆண்கள் இருபது20 போட்டியில் கள நடுவராக நின்ற முதல் பெண் ஆனார்.[14]
செப்டம்பர் 2024 இல், 2024 ஐசிசி பெண்கள் இருபது20 உலகக் கோப்பைக்கான அனைத்து பெண் அலுவல் குழுவின் உறுப்பினராக அவர் பெயரிடப்பட்டார்.[15]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kim Cotton". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 March 2017.
- ↑ "Reward for Canterbury Umpire – Kim Cotton". Canterbury Cricket. Archived from the original on 5 September 2018. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018.
- ↑ "All-woman umpire appointment another historic moment for NZ women's cricket". Stuff. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018.
- ↑ "Kim Cotton added to ICC Development Panel of Umpires". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018.
- ↑ "Kim Cotton selected for ICC Umpires Panel". New Zealand Cricket. Archived from the original on 5 September 2018. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018.
- ↑ "Kim Cotton selected for ICC Umpires Panel". Cricket Country. பார்க்கப்பட்ட நாள் 5 September 2018.
- ↑ "11th team for next month's ICC Women's World T20 revealed". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 25 October 2018.
- ↑ "ICC announces Match Officials for all league matches". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 12 February 2020.
- ↑ "Kim Cotton, Ahsan Raza umpires for India-Australia Women's T20 World Cup final". The Statesman. https://www.thestatesman.com/sports/kim-cotton-ahsan-raza-umpires-india-australia-womens-t20-world-cup-final-1502863318.html.
- ↑ "Eight women among 15 Match Officials named for ICC World Cup 2022". Women's CricZone. பார்க்கப்பட்ட நாள் 22 February 2022.
- ↑ "Match officials chosen for ICC Women's Cricket World Cup 2022". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 22 February 2022.
- ↑ "Match Officials for Final confirmed". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 1 April 2022.
- ↑ "2nd T20I, Dunedin, April 05, 2023, Sri Lanka tour of New Zealand". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 April 2023.
- ↑ "NZ vs SL: New Zealand's Kim Cotton becomes first woman to umpire in full-member men's T20Is". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 5 April 2023.
- ↑ "All-female panel of match officials announced for Women's T20 World Cup 2024". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 3 October 2024.
வெளி இணைப்புகள்
தொகு- கிரிக்கின்போ தளத்தில் கிம் கொட்டன்