பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டம்
பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டம் (Women's Test cricket) பெண்கள் துடுப்பாட்ட அணிகளால் விளையாடப்படும் அதிக நிறைவுகள் கொண்ட துடுப்பாட்ட வடிவம் ஆகும். இது ஆண்களால் விளையாடப்படும் தேர்வுத் துடுப்பாட்டத்தினை ஒத்தது.இது நான்கு ஆட்டப் பகுதிகளைக் கொண்டது. குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்கு மேல் விளையாடப்படும் துடுப்பாட்ட வடிவம் ஆகும். ஆனால் நடுவர் மற்றும் மைதான அளவு ஆகியவற்றில் ஆண்களுக்கான துடுப்பாட்ட வடிவத்தில் இருந்து சற்று மாறுபடுகிறது. 1934 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலிய அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடைபெற்றது. இதில் இதில் இங்கிலாந்து ஒன்பது இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [1]
நாடுகள்தொகு
பத்து பெண்கள் அணிகள் இதுவரையில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி உள்ளது.1934-35 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்த மூன்று அணிகளும் குறைந்தது 45 போட்டிகளில் விளையாடியுள்ளன. தென்னாப்பிரிக்கா அணி1960 இல் முதல் போட்டியில் விளையாடியது. [2] இருப்பினும், நாட்டின் நிறவெறி கொள்கை காரணமாக சர்வதேச விளையாட்டிலிருந்து அவர்கள் விலக்கப்பட்டதன் காரணமாக [3] அவர்கள் பதினொரு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர். இது இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளை விட குறைவான போட்டி எண்ணிக்கை ஆகும்.பாகிஸ்தான், அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் இலங்கை தேர்வு கிய நான்கு அணிகளும் ஐந்துக்கும் குறைவான போட்டிகளில் போட்டியிட்டன.
அணி | முதலில் | சமீபத்தியது | போட்டிகள் |
---|---|---|---|
ஆத்திரேலியா | 1934 | 2019 | 74 |
இங்கிலாந்து | 1934 | 2019 | 95 |
இந்தியா | 1976 | 2014 | 36 |
அயர்லாந்து | 2000 | 2000 | 1 |
நெதர்லாந்து | 2007 | 2007 | 1 |
நியூசிலாந்து | 1935 | 2004 | 45 |
பாக்கித்தான் | 1998 | 2004 | 3 |
தென்னாப்பிரிக்கா | 1960 | 2014 | 12 |
இலங்கை | 1998 | 1998 | 1 |
மேற்கிந்தியத் தீவுகள் | 1976 | 2004 | 12 |
மேலும் காண்கதொகு
சான்றுகள்தொகு
- ↑ "1st Test: Australia Women v England Women at Brisbane, Dec 28–31, 1934". Cricinfo. 28 December 1934. 9 February 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Records / Women's Test matches / Team records / Results summary". ESPNcricinfo. 1 January 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "From the Archive: Gleneagles Agreement on Sport". Commonwealth Secretariat. 11 June 2009. 17 September 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 May 2013 அன்று பார்க்கப்பட்டது.