2022 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

2022 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (2022 Women's Cricket World Cup) பன்னிரண்டாவது மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணமாகும்.[1] ஒவ்வொரு ஆட்டமும் 50 நிறைவுகள் விளையாடும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட முறையில் விளையாடப்படுகிறது. மார்ச் 4, 2022 முதல் ஏப்ரல் 3, 2022 வரை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் நடத்தப்பட்ட இப்போட்டிகளை நியூசிலாந்து ஏற்று நடத்தியது.[2] 2021-ல் இத்தொடர் நடைப்பெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இத்தொடர் 2022-க்கு மாற்றப்பட்டது.[3] இத்தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று ஆத்திரேலியா அணி 7-வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.[4]

2022 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
நாட்கள்4 மார்ச் – 3 ஏப்ரல் 2022
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்மகளிர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்குழுநிலைச் சுற்று, 2 அரையிறுதி மற்றும் 1 இறுதி போட்டிகள்
நடத்துனர்(கள்)நியூசிலாந்து நியூசிலாந்து
வாகையாளர்ஆத்திரேலியா ஆத்திரேலியா
இரண்டாமவர்இங்கிலாந்து இங்கிலாந்து
மொத்த பங்கேற்பாளர்கள்8
மொத்த போட்டிகள்31
தொடர் நாயகன்ஆத்திரேலியா அலீசா ஹீலி
அதிக ஓட்டங்கள்ஆத்திரேலியா அலீசா ஹீலி (509)
அதிக வீழ்த்தல்கள்இங்கிலாந்து சோஃபி எக்கல்ஸ்டோன் (21)
அலுவல்முறை வலைத்தளம்Official site
2017

பங்கேற்ற அணிகள் தொகு

இந்தப் போட்டிகளில் பங்கேற்ற எட்டு நாட்டு மகளிர் அணிகள்:

விளையாட்டரங்கங்கள் தொகு

கிறைஸ்ட்சர்ச் ஆக்லாந்து மவுண்ட் மவுங்காநுயி
ஏக்லி ஓவல் ஈடன் பூங்கா பே ஓவல்
கொள்ளளவு : 18,000 கொள்ளளவு : 42,000 கொள்ளளவு : 10,000
     
ஹாமில்டன் வெல்லிங்டன் டெனெடின்
செடான் பூங்கா பேசின் ரிசர்வ் பல்கலைக்கழக ஓவல்
கொள்ளளவு : 10,000 கொள்ளளவு : 11,600 கொள்ளளவு : 3,500
     
2022 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டிகள் நடைபெறும் விளையாட்டரங்குகள்

குழுநிலைச் சுற்று தொகு

குழுநிலைச் சுற்றில் உள்ள 8 அணிகளும் மற்ற ஏழு அணிகளுடன் தலா 1 முறை எதிர்கொண்டன.ஒரு போட்டியை வென்ற அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்பட்டது. குழுநிலைச் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்கள் பெற்ற அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.[5][6][7]

நிலை அணி வி (Pld) வெ (W) தோ (L) ச (T) மு.எ (NR) பு (Pts) நி.ஓ.வி (NRR)
1   ஆத்திரேலியா 7 7 0 0 0 14 1.283
2   தென்னாபிரிக்கா 7 5 1 0 1 11 0.078
3   இங்கிலாந்து 7 4 3 0 0 8 0.949
4   மேற்கிந்தியத் தீவுகள் 7 3 3 0 1 7 −0.885
5   இந்தியா 7 3 4 0 0 6 0.642
6   நியூசிலாந்து 7 3 4 0 0 6 0.027
7   வங்கதேசம் 7 1 6 0 0 2 −0.999
8   பாக்கித்தான் 7 1 6 0 0 2 −1.313

     - அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்

அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி தொகு

  அரை இறுதி இறுதி
             
30 மார்ச்– பேசின் ரிசர்வ், வெல்லிங்டன்
   ஆத்திரேலியா 303/5  
   மேற்கிந்தியத் தீவுகள் 148  
 
3 ஏப்ரல் – ஏக்லி ஓவல், கிறைஸ்ட்சர்ச்
       ஆத்திரேலியா 356/5
     இங்கிலாந்து 285
31 மார்ச்– ஏக்லி ஓவல், கிறைஸ்ட்சர்ச்
   இங்கிலாந்து 293/8
   தென்னாப்பிரிக்கா 156  

புள்ளிவிவரங்கள் தொகு

 
அலீசா ஹீலி - இடத்தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்

அதிக ஓட்டங்கள் தொகு

வீரர் இன்னிங்ஸ் ஓட்டங்கள் சராசரி HS 100 50
  அலீசா ஹீலி 9 509 56.55 170 2 4
  ராக்கேல் ஹெய்ன்ஸ் 9 497 62.12 130 1 4
  நாட் சிவர் 8 436 72.66 148* 2 3
  லாரா வுல்வர்ட் 8 433 54.12 90 0 5
  மெக் லென்னிங் 9 394 56.28 135* 1 3
Source: ICC [8][9][10][11]
 
சோஃபி எக்கல்ஸ்டோன் - இத்தொடரில் அதிக வீழ்த்தல்களை எடுத்தவர்

அதிக வீழ்த்தல்கள் தொகு

வீரர் இன்னிங்ஸ் வீழ்த்தல்கள் BBI Avg Econ SR 5W
  சோஃபி எக்கல்ஸ்டோன் 9 21 6/36 15.61 3.83 24.4 1
  சப்னிம் இஸ்மாயில் 7 14 3/27 17.50 4.02 26.0 0
  ஜெஸ் ஜோனஸ்ஸன் 8 13 3/57 18.84 4.04 27.9 0
  அலனா கிங் 8 12 3/59 24.50 4.52 32.5 0
  மரிசேண் காப் 7 12 5/45 26.25 4.73 33.2 1

மேற்கோள்கள் தொகு

  1. "ICC Women's World Cup 2021 attracts star line-up". New Zealand Cricket. Archived from the original on 18 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 June 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Host cities for ICC Women's Cricket World Cup 2021 revealed". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 23 January 2020.
  3. "Venue for postponed 2020 ICC Men's T20 World Cup confirmed". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 7 August 2020.
  4. "Healy show helps Australia clinch seventh World Cup title as Sciver wages a lone battle". Women's CricZone. பார்க்கப்பட்ட நாள் 3 April 2022.
  5. "England to open Women's World Cup defence against Australia". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
  6. "ICC Women's Cricket World World Cup 2021 fixtures announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
  7. "Standings | Women's Cricket World Cup 2022". www.cricketworldcup.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-04.
  8. "Most Runs - ICC Women's Cricket World Cup 2022". www.cricketworldcup.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-04.
  9. "Highest score- innings - ICC Women's Cricket World Cup 2022". www.cricketworldcup.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-04.
  10. "Most Hundreds - ICC Women's Cricket World Cup 2022". www.cricketworldcup.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-04.
  11. "Most Fifties- ICC Women's Cricket World Cup 2022". www.cricketworldcup.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-04.