கியாசுதீன் மக்மூத் சா

வங்காளத்தின் உசைன் ஷாஹி வம்சத்தின் கடைசி சுல்தான்

கியாசுதின் மக்முத் சா (Ghiyasuddin Mahmud Shah) வங்காள சுல்தானகத்தை கி.பி.1533 முதல் 1538 வரை ஆட்சி செய்த உசைன் ஷாஹி வம்சத்தின் கடைசி சுல்தான் ஆவார். வம்சம் 1494 இல் இவரது தந்தை அலாவுதீன் உசைன் சா என்பவரால் நிறுவப்பட்டது.[1]

கியாசுதீன் மக்மூத் சா
கியாத் அத்-துனியா வா அத்-தின் அபு அல்-முசாபர்
வங்காள சுல்தானகம்
ஆட்சிக்காலம்1533 - 1538
முன்னையவர்இரண்டாம் அலாவுதீன் பிரூசு சா
பின்னையவர்சேர் சா சூரியால் வங்காளம் கையகப்படுத்தப்பட்டது.
இறப்பு1538
குழந்தைகளின்
பெயர்கள்
சையதா மொமெனா காதுன்
உட்பட இருமகன்கள் ( சேர் சா சூரியால் கொல்லப்பட்டனர்)
காதி கான் சுரக்கின் மனைவி
தந்தைஅலாவுதீன் உசைன் சா
மதம்இசுலாம்

வரலாறு

தொகு

வங்காளப்பீடியா இவரை ஒரு "பலவீனமான, இன்பத்தை விரும்பும் மற்றும் எளிதில் அணுகக் கூடிய ஆட்சியாளர்" என்று மதிப்பிடுகிறது. இவர் "...தனது ஆட்சியின் போது வங்காளத்தை சூழ்ந்த அரசியல் பிரச்சனைகளுக்கு இராஜதந்திர தொலைநோக்கு அல்லது நடைமுறை அணுகுமுறை எதுவும் கொண்டிருக்கவில்லை".[1] இவரது ஆட்சியானது, இவரது தளபதியும் சிட்டகொங்கின் ஆளுநருமான குதா பக்சு கான், மற்றும் ஹாஜிபூரின் ஆளுநரான மக்தூம் ஆலம் ஆகியோரின் கிளர்ச்சிகளால் ஆளானது.[1]

இவரது ஆட்சியின் போது போர்த்துகீசியர்கள் 1534 இல் சிட்டகொங்கிற்கு வந்தனர். அவர்கள் சிறைபிடிக்கப்பட்டு கௌடா நகரத்தில் குற்றச்சாட்டின் பேரில் கைதிகளாக அனுப்பப்பட்டனர். பின்னர், அவர்களின் மேன்மையை அறிந்துகொண்டு அவர்களுடன் சமரசம் செய்து, சிட்டகொங் மற்றும் கூக்ளியில் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிலையங்களை நிறுவ அனுமதித்தார்.[1] பின்னர், போர்த்துகீசியர்களின் உதவியுடன், தெலியாகர்ஹி கணவாயை (கி.பி. 1536) படையெடுப்பைத் தடுத்தார்.[2] கியாசுதீன் மக்மூத் சா மற்றும் இவரது போர்த்துகீசிய கூட்டாளிகள் 6 ஏப்ரல் 1538 இல் சேர் சா சூரியால் தோற்கடிக்கப்பட்டனர். முகலாய பேரரசர் உமாயூனிடம் இவர் செய்த முறையீடுகள் பதிலளிக்கப்படவில்லை. [1]

இறப்பு

தொகு

மேலும் இவரது இரண்டு மகன்கள் ஆப்கானியர்களால் தூக்கிலிடப்பட்டதை அறிந்ததும் வருத்தம் அடைந்தார். [3][4] சேர் சா சூரி, கௌடாவை முற்றுகையிட்டபோது ஏற்பட்ட காயங்களால் கியாசுதீன் இறந்தார்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 வார்ப்புரு:Cite Banglapedia
  2. "Banglapedia - Ghiyasuddin Mahmud Shah".
  3. "Ghiyasuddin Mahmud Shah - Banglapedia". en.banglapedia.org. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
  4. Chandra, Satish (2007). History of Medieval India: 800-1700 (in ஆங்கிலம்). Orient BlackSwan. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-3226-7.
முன்னர்
இரண்டாம் அலாவுதீன் பிரூசு சா
உசைன் ஷாஹி வம்சம்
1533–1538
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியாசுதீன்_மக்மூத்_சா&oldid=3843341" இலிருந்து மீள்விக்கப்பட்டது