கியூபெக் பாலம்

கியூபெக் பாலம் (Quebec Bridge) (பிரெஞ்சு: Pont de Québec) கனடாவில் கியூபெக் மாநிலத்தில் சென் லோரன்ஸ் ஆற்றிற்குக் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது கியூபெக் நகரின் மேற்கேயும் லேவி நகரிற்கும் இடையில் அமைந்துள்ளது.

கியூபெக் பாலம்
கிழக்குப் பகுதியில் இருந்து பாலத்தின் தோற்றம்
ஆள்கூற்று46°44′46″N 71°17′16″W / 46.74611°N 71.28778°W / 46.74611; -71.28778
வாகன வகை/வழிகள்3 வாகன வழிகள்
1 தொடருந்து வழி
1 நடைபாதை
கடப்பதுசென் லோரன்ஸ் ஆறு
இடம்கியூபெக் நகரம், லேவி, கியூபெக்
அதிகாரபூர்வ பெயர்Pont de Québec
பராமரிப்புகனேடிய தேசிய ரயில்வே
Characteristics
வடிவமைப்புCantilever bridge
மொத்த நீளம்987 மீ (3,239 அடிகள்)
அகலம்29 மீ (94 அடிகள்)
அதிகூடிய தாவகலம்549 மீ (1,800 அடிகள்)
History
திறக்கப்பட்ட நாள்டிசம்பர் 3, 1919
Statistics
சுங்கம்1942 இலிருந்து எதுவுமில்லை

இதன் மொத்த நீளம் 987 மீட்டர்களும் அகலம் 29 மீ, உயரம் 104 மீ ஆகும்.

வரலாறு

தொகு

1904ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பாலத்தின் கட்டுமனப் பணிகள் 1907 நடுப்பகுதியில் ஏறத்தாழ முடிவடையும் நிலையை எட்டியது. எனினும் ஆகஸ்ட் 29, 1907 மாலையில் இதன் தெற்குப் பகுதியும் மத்தியின் ஒரு பகுதியும் சென் லோரன்ஸ் ஆற்றில் இடிந்து வீழ்ந்தது. இவ்விபத்தில் 86 தொழிலாளர்களில் 75 பேர் உயிரிழந்தனர். ஏனையோர் படுகாயமடைந்தனர்.

இதன் பின்னர் இரண்டாம் பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பித்தன. செப்டம்பர் 11, 1916 இல் இடம்பெற்ற இன்னுமொரு விபாத்தில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

முடிவில் ஆகஸ்ட் 1919 இல் மொத்தம் $25 மில்லியன் செலவில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. டிசம்பர் 3 1919 இல் தொடருந்து சேவைக்காக இப்பாலம் திறக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூபெக்_பாலம்&oldid=1396708" இலிருந்து மீள்விக்கப்பட்டது