கியூபெக் பிரெஞ்சு

கியூபெக் பிரெஞ்சு, கனடாவில் பொது வழக்கில் பேசப்படும் பிரெஞ்சு மொழியின் முக்கிய வழக்கு ஆகும். அரசு, ஊடகம், கல்வி என அனைத்துத் துறைகளிலும், கியூபெக் பிரெஞ்சு பயன்படுத்தப்படுகிறது. கனேடிய பிரெஞ்சு என்பது கியூபெக் உட்பட கனடாவில் பேசப்படும் பிரெஞ்சு மொழியின் வட்டார வழக்குகளை சேர்த்தே குறிக்கிறது. கனடாவின் கியூபெக் மாநிலத்தில் பிரெஞ்சும், பிற மாநிலங்களில் ஆங்கிலமும் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. கனடாவின் ஆட்சி மொழிகளாக இருமொழிகளும் ஏற்கப்பட்டுள்ளன..

கெபெக் பிரெஞ்சு
Français québécois
நாடு(கள்)கெபெக், ஒன்றாரியோ, மேற்கு கனடா, நியூ இங்கிலாந்து
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
(தாய்மொழியாக) 6.2 மில்லியன் பேர் கெபெக்கில், 700,000 பேர் கனடாவின் பிற பகுதிகளில் [1]  (date missing)
இந்தோ- ஐரோப்பியம்
  • இத்தாலியம்
    • ரோமானியம்
      • மேற்கு ரோமானியம்
        • கல்லோ ஐபீரியம்
          • கல்லோ ரோமானியம்
            • கல்லோ ரேத்தியம்
              • கெபெக் பிரெஞ்சு
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
கெபெக்
மொழி கட்டுப்பாடுகெபெக் பிரெஞ்சு மொழிக்கான அலுவலகம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3
Linguasphere51-AAA-hq & 51-AAA-icd & 51-AAA-ii
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

வரலாறு

தொகு

பெரும்பாலானோர் கருதும்படி கியூபெக் பிரெஞ்சு, 10-14 ஆம் நூற்றாண்டுகளில் பேசப்பட்ட பழைய பிரெஞ்சிலிருந்து தோன்றியதல்ல. 17,18 ஆம் நூற்றாண்டுகளில் பேசப்பட்ட செவ்வியல் தன்மைகளைக் கொண்ட பிரெஞ்சு மொழியினை ஒத்திருக்கிறது. கியூபெக் பிரெஞ்சு இவ்வழக்கிலிருந்து தோன்றியிருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். இது கனேடியப் பழங்குடியினர் மொழிகளில் பயன்படுத்தப்பட்ட இடப்பெயர்களை உள்வாங்கிக் கொண்டது. கனேடிய ஒன்றியத்திற்குள் கியூபெக் மாநிலம் சேர்க்கப்பட்ட பின், ஐக்கிய அமெரிக்காவுடன் உரையாடவும், பிற கனேடிய மாநிலங்களுடன் உரையாடவும், அரசாணைகளை வெளியிடவும், ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டது. இக்காலத்தில் அயர்லாந்தினர் நிறைய பேர் கனடாவில் குடியேறினர். இதன்மூலம், அரசாணைகளில் பயன்படுத்துவதற்காக கியூபெக் பிரெஞ்சு, பல ஆங்கிலச் சொற்களை உள்வாங்கியது.

பிற பிரெஞ்சு வழக்குகளுடன் ஒத்திருக்கும் தன்மை

தொகு

பிரான்சு நாட்டு பிரெஞ்சுக்கும் கியூபெக் பிரெஞ்சுக்கும் உள்ள வேறுபாடு அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இங்கிலாந்திய ஆங்கிலத்திற்கும் உள்ள வேற்றுமையை விட அதிகமாகும். கனேடிய பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் ஒலிப்புமுறையில் மாற்றம் செய்தால் தான் ஐரோப்பிய பிரெஞ்சுக்காரர்களுடன் எளிதில் உரையாட முடியும் என்றொரு கருத்து நிலவியது. ஐரோப்பிய பிரெஞ்சை கனேடியர்கள் எளிதில் புரிந்துகொள்கிறார்கள் என்றும் சொற்தொகுதியிலேயே வேறுபாடு இருக்கும் என்று அறியப்படுகிறது.

ஐரோப்பிய பிரெஞ்சுக்காரர்களும் கனேடிய பிரெஞ்சை எளிதில் புரிந்து கொண்டாலும், பேச்சு வழக்கைப் புரிந்துகொள்வதில் சிரமப்படுவார்கள். எனவே ஐரோப்பியர்களிடம் பேசும்போது பேச்சு வழக்கை விடுத்து பொது வழக்கில் பேசுவார்கள்.

அமெரிக்கர்கள் பிரித்தானிய ஆங்கில ஊடகங்களை விரும்பிப் பயன்படுத்துவதைப் போல் கியூபெக் கனேடியர்கள் பிரான்சில் இருந்து வெளியாகும் ஊடகங்களை விரும்பிப் பயன்படுத்துகின்றனர். கியூபெக் பிரெஞ்சு சில காலமாக, இதன் ஆங்கிலக் கலப்பாலும், பொது வழக்கிலிருந்து வேறுபடுவதாலும், கீழ்த் தரமாகக் கருதப்பட்டது. ஆயினும் தற்போது கியூபெக் பிரெஞ்சும் ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பிய பிரெஞ்சு குறித்த ஆய்வு

தொகு

1960களில் செய்யப்பட்ட சமூக ஆய்வின்படி கியூபெக் மாநிலத்தவர்கள், கியூபெக் பிரெஞ்சுக்காரர்களைவிடவும் ஐரோப்பிய பிரெஞ்சுக்காரர்களுக்கு அதிக வாக்குகள் அளித்தனர். கல்வி, பொது அறிவு, இலக்கு, நட்பு தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் இந்த முடிவைக் கண்டு வியந்தனர். கியூபெக் அரசும், முடிந்தவரை பொது பிரெஞ்சை பயன்படுத்த வேண்டும் என்றூ தெரிவித்திருந்தது. கியூபெக் மாநில பிரெஞ்சுப் பேராசிரியர் குழு, கியூபெக் பிரெஞ்சு பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

மொழி அமைப்பில் வேறுபாடு

தொகு
 
நிற்க என்பதற்கான பிரெஞ்சு மொழிச் சொல்

பொது பிரெஞ்சை விடவும் பெருமளவில் சொற்தொகுதியிலும், ஒலிப்புமுறையிலும், இலக்கண விதிகளிலும் மாறுபட்டிருக்கிறது. வினைச்சொற்களும், பெயர்ச்சொற்களும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆங்கிலத்தில் இருந்து பொதுப் பயன்பாட்டு சொற்களையும் கனேடியப் பழங்குடியினர் மொழிகளில் இருந்து இடப்பெயர்களையும் எனப் பல சொற்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொது பிரெஞ்சிற்கும் கியூபெக் பிரெஞ்சிற்கும் உள்ள சில வேறுபாடுகள் ஒரே பொருளுக்கான வேறுபட்ட சொற்கள்

கியூபெக் பிரெஞ்சு பொது பிரெஞ்சு தமிழ்ப் பொருள்
abrier couvrir மூடுவது
astheure maintenant தற்போது
chum copain ஆண் தோழன்
magasiner faire des courses சிறு வேலைகளை செய்வது, கடைக்குப் போவது
placoter papoter அரட்டையடிப்பது

பொருள் வேறுபாடு

சொல் கியூபெக் பிரெஞ்சில் பொருள் பொது பிரெஞ்சு பொருள்
blonde (f) பெண் தோழி வெண்மஞ்சள் தலைமயிரை உடைய பெண்
char (m) சீருந்து/தனுந்து தேர்
dépanneur (m) சேவை செய்யும் கடை சீர்செய்யும் கடை
gosse விரைப்பைகள் gosse (masc sg): child/kid
suçon (m) குச்சி மிட்டாய் hickey
éventuellement eventually possibly

கியூபெக் பிரெஞ்சுக்குண்டான தனித்துவமான சொற்றொடர்கள்

கியூபெக் பிரெஞ்சு பொது பிரெஞ்சு தமிழ் சொற்றொடர்
avoir le flu avoir la diarrhée வயிற்றுப் போக்கு
avoir le goût dérangé gouter une saveur étrange வித்தியாசமான ஒன்றை சுவைத்தல்
en arracher en baver வெட்டியாக இருத்தல்
faire beau soleil faire un temps radieux வெப்பமான தட்பவெப்பநிலை
prendre une marche faire une promenade நடந்து செல்லுதல்
avoir le bec fin faire le difficile to be picky
se faire passer un sapin se faire duper to be tricked
parler à travers son chapeau parler à tort et à travers to talk through one's hat

பரவலான சில சொற்சுருக்கங்கள்

தொகு

கியூபெக் பகுதிக்கு மட்டும் தனித்துவமான சொற்சுருக்கங்கள் உள்ளன. அவற்று சில:

  • clavardage, (மடலாடல்) = "clavier" (தட்டச்சு) + "bavardage" (அரட்டை) என்பதன் சுருக்கம்
  • courriel, (மின்னஞ்சல்) = "courrier électronique" (மின்னஞ்சல்) என்பதன் சுருக்கம்
  • pourriel, (எரித மின்னஞ்சல்) = "courriel" (மின்னஞ்சல்) + "poubelle" (குப்பை). என்பதன் சுருக்கம்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூபெக்_பிரெஞ்சு&oldid=3366085" இலிருந்து மீள்விக்கப்பட்டது