கிரண் நாடார்

கிரண் நாடார் ஒரு இந்திய கலை சேகரிப்பாளர் மற்றும் கொடையாளர் ஆவார். கிரண் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனரான சிவ் நாடாரின் மனைவியும் மற்றும் சிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் கிரண் நாடார் கலை அருங்காட்சியகத்தின் நிறுவனரும் ஆவார்.[1] இவர் நிறுவிய நிறுவனங்களில் சென்னையில் உள்ள எஸ்.எஸ்.என்.பொறியியல் கல்லூரியானது இந்தியாவில் காணப்படுகின்ற தனியார் பொறியியல் கல்லூரிகளில் முதன்மையானதாகத் திகழ்கிறது. இது தவிர இவருடைய நிறுவனங்கள் சிவ நாடார் பல்கலைக்கழகம், வித்யாஞான் பள்ளிகள், கிரண் நாடார் கலை அருங்காட்சியகம் போன்றவையாகும். கிரண் நாடார் தற்போது கிரண் நாடார் இந்தியாவில் புதுதில்லியில் எச்.சி.எல் நிறுவனரும் சிவ் நாடார் அறக்கட்டளையின் தலைவருமான அவரது கணவர் சிவ நாடாருடன் வாழ்ந்து வருகிறார்.[2]

கிரண் நாடார்
பிறப்பு1951
இருப்பிடம்தில்லி, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிகலைப்பொருள் சேகரிப்பாளர்,
கொடையாளர்
வாழ்க்கைத்
துணை
சிவ நாடார்
பிள்ளைகள்ரோஷினி நாடார் (மகள்)

சொந்த வாழ்க்கை

தொகு

கிரண் நாடார் தனது கணவர் சிவ் நாடாரை அவர் பணிபுரிந்த ஒரு விளம்பர நிறுவனத்தில் சந்தித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நாடாருக்கு ரோசிணி நாடார் என்ற மகள் உள்ளார். இந்தியாவின் சிறந்த, சீட்டாட்ட விளையாட்டுகளில் ஒன்றான ஒப்பந்த பாலம்[3] என்ற சீட்டாட்டத்தை விளையாடுபவர்களில் ஒருவர் ஆவார். [1] .

நாடார் எம்.சி.எம் நிறுவனத்தில் தகவல் தொடர்பு மற்றும் பிராண்டுகள் நிபுணராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். நாடார் பின்னர் என்ஐஐடி நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு மற்றும் பிராண்டை வடிவமைக்க உதவினார்.[4]

தற்போது, அவர் எஸ்.எஸ்.என்.டிரஸ்ட், இந்தியா பொது சுகாதாரம் அறக்கட்டளை, ராசாஜா அறக்கட்டளை மற்றும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஆகியவற்றை நிர்வகித்து வருவதோடு உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம் முஸ்லீம் பெண்களின் படிப்பிற்கு ஆதரவு செய்து வருகிறார்.

கலை சேகரிப்புகள் மற்றும் அருங்காட்சியகம்

தொகு

கலைப்படைப்புகளை சேகரிப்பதில் நாடாரின் மோகம் 1988 ஆம் ஆண்டில் தனது வீட்டிற்கு கலைப் பொருள்களை வாங்கியபோது தொடங்கியது.

2005 ஆம் ஆண்டில், நாடார் அதிக எண்ணிக்கையிலான கலைப்புகள் இருந்ததால் தன்து சொந்த அருங்காட்சியகத்தை திறக்க முடிவு செய்தார். "எனது கலைப்படைப்புகளில் பெரும்பகுதி சேமித்து வைக்கப்பட்டிருப்பதை எண்ணிப் பார்த்தேன். நான் அவற்றை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்" என்று நாடார் விளக்குகிறார். தற்போது, கிரண் நாடார் கலை அருங்காட்சியகம் ஆண்டுக்கு 100,000 பார்வையாளர்களை ஈர்க்கிறது. சோதேபியின் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் கௌரவு பாட்டியாவின் கூற்றுப்படி, நாடாரின் அருங்காட்சியகம் "நம்பமுடியாத சில கலைப்படைப்புகளைக்கூட பொது குடிமக்கள் அணுகும் வகையில் உள்ளதாக உருவாக்கியுள்ளது" . நாடாரின் தொகுப்பு "உள்ளுணர்வு, ஆய்வு மற்றும் உற்சாகத்தின் அற்புதமான கலவை" என்றும் பாட்டியா பாராட்டியுள்ளார்.

விருதுகள் மற்றும் பாராட்டுகள்

தொகு

2010 ஆம் ஆண்டில், கிரண் நாடாரை ஆசிய இதழான ஃபோர்ப்ஸ் இந்தியாவின் முதல் தனியார் கொடை அருங்காட்சியகத்தை அறிமுகப்படுத்திய வகையில் அவரை "கொடையின் நாயகர்" என்று ஒப்புக் கொண்டது.[5]

5,500க்கும் மேற்பட்டமேற்பட்ட சேகரிப்புகளையும், அவற்றில் அதிக எண்ணிக்கையில் நவீன தெற்காசிய கலைகளின் தொகுப்பினையும் வைத்துள்ள நிலையில் நாடார் இந்திய கலை உலகின் மகாராணியாக கருதப்படுகிறார்.[6] நியூயார்க்கில் உள்ள நவீன கலை அருங்காட்சியகத்தின் சர்வதேச கவுன்சில் உறுப்பினரான இவர், இந்தியாவின் சிறந்த காமன்வெல்த் பாலம் விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் உள்ளார். அவர் "வல்லமைமிக்கவர்" என்பதன் உறுப்பினராக உள்ளார். மேலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். நாடார் பல்வேறு சர்வதேச போட்டிகளிலும் பாலம் நடத்திய போட்டிகளிலும் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டுள்ளார். மேலும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கான தங்கப் பதக்கத்தை அவர் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Jury". The Skoda Art prize. Archived from the original on 26 April 2012. பார்க்கப்பட்ட நாள் 12 May 2012.
  2. "Who We Are". Archived from the original on 2020-08-06. பார்க்கப்பட்ட நாள் 2020-01-09.
  3. "Contract bridge", Wikipedia (in ஆங்கிலம்), 2019-12-31, பார்க்கப்பட்ட நாள் 2020-01-09
  4. Singh, Pallavi (23 January 2012). "The Kiran Nadar Museum of Art". Economic Times. http://economictimes.indiatimes.com/features/people-places/the-kiran-nadar-museum-of-art/articleshow/7344989.cms?curpg=1. பார்த்த நாள்: 12 May 2012. 
  5. Alberts, Hana R. "Asia's Heroes Of Philanthropy". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-02. {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Karmali, Naazneen. "Kiran Nadar's Groundbreaking Museum Of Indian Art". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-02.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரண்_நாடார்&oldid=4126929" இலிருந்து மீள்விக்கப்பட்டது