கிரண் வாலியா
கிரண் வாலியா என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் தில்லியின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது சட்டமன்றங்களில் உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் தில்லியின் மாளவியா நகர் சட்டமன்றத் தொகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[1]
கிரண் வாலியா Kiran Walia | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் தில்லி 4வது சட்டமன்றம் | |
பதவியில் அக்டோபர் 2008 – நவம்பர் 2013 | |
தொகுதி | மால்வீயா நகர் சட்டமன்றத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் தில்லி 3வது சட்டமன்றம் | |
பதவியில் திசம்பர் 2003 – அக்டோபர் 2008 | |
தொகுதி | ஹௌஸ் காஸ் |
சட்டமன்ற உறுப்பினர் தில்லி 2வது சட்டமன்றம் | |
பதவியில் நவம்பர் 1998 – நவம்பர் 2003 | |
தொகுதி | ஹௌஸ் காஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28 அக்டோபர் 1944 தில்லி |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சத் பிரகாசு வாலியா |
பிள்ளைகள் | 1 மகன் & 1 மகள் |
பெற்றோர் | எஸ். என். பாசின் (தந்தை) |
வாழிடம் | புது தில்லி |
தொழில் | பேராசிரியர் & அரசியல்வாதி |
இளமையும் கல்வியும்
தொகுகிரண் வாலி புது தில்லியில் பிறந்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.[1]
அரசியல் வாழ்க்கை
தொகுகிரண் வாலியா மூன்று முறை தில்லி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவரது சமீபத்திய ஆட்சிக் காலத்தில், இவர் மாளவியா நகர் (தில்லி சட்டமன்றத் தொகுதி) தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். சீலா தீட்சித்தின் அரசில் மாநில அமைச்சராகவும் இருந்தார்.[1][2]
வகித்தப் பதவிகள்
தொகு# | முதல் | வரை | பதவி | கருத்துகள் |
---|---|---|---|---|
01 | 1998 | 2003 | உறுப்பினர், 2வது சட்டமன்றம் | |
02 | 2003 | 2008 | உறுப்பினர், 3வது சட்டமன்றம் | |
03 | 2008 | 2013 | உறுப்பினர், 04வது சட்டமன்றம் | |
04 | 2008 | 2013 | சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் | |
05 | 2008 | 2013 | பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் மொழிகள் அமைச்சர் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Member profile". Delhi Legislative Assembly website. http://delhiassembly.nic.in/aspfile/whos_who/kiran.htm. பார்த்த நாள்: 6 February 2015.
- ↑ "Member List". Delhi Legislative Assembly website. http://delhiassembly.nic.in/MemberSearch.htm. பார்த்த நாள்: 6 February 2015.