கிரிகல்பொத்த

(கிரிகல் பொத்தை மலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிரிகல்பொத்த (Kirigalpotha) என்பது இலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரேலியா நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது இலங்கையின் இரண்டாவது உயரமான மலை. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 2,388 மீ (7,835 அடி) ஆகும்[1].

கிரிகல்பொத்த
Kirigalpotha
கிரிகல்பொத்த Kirigalpotha is located in இலங்கை
கிரிகல்பொத்த Kirigalpotha
கிரிகல்பொத்த
Kirigalpotha
உயர்ந்த புள்ளி
உயரம்2,388 m (7,835 அடி)
புவியியல்
அமைவிடம் இலங்கை


இது ஓட்டன் சமவெளி தேசிய பூங்காவில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் அமைத்துள்ளது[2]. இதன் அடிவாரத்தை அடைவதற்கு சமவெளி, அடர்ந்த காடுகள் மற்றும் சதுப்புநிலங்களுக்கூடாக செல்ல வேண்டும். இந்த மலையை ஏறுவதற்கு ஓட்டன் சமவெளி தேசிய பூங்காவில் அனுமதி பெறுவது அவசியமாகும். தை, மாசி மற்றும் ஆடி, ஆணி மத காலங்களில் ஏறுவதும், மழை காலங்களில் ஏறுவதை தவிர்த்தலும் பரிந்துரைக்கப்படுகிறது.

கிரிகல்பொத்த மலை உச்சியை அடைதல்

தொகு

ஓட்டன் சமவெளி அருங்க்காட்சியகத்திற்கு அருகே ஆரம்பமாகும் சிறிய அடிப் பாதையை பின்தொடர்ந்து இந்த மலை ஏறும் பயணம் ஆரம்பமாகிறது .முதல் 2 கிமீ வரை சமவெளியையும் அதன் பிறகு இறந்த மரம் (Dead Tree) என்று சொல்லப்படும் இலையுதிர்ந்த மரங்களும் வருகின்றன. 2 முதல் 4 கிமீ வரை செல்லும் பொது பெலிஹுல்-ஓயா (Belihul-Oya) ஆற்றை கடக்க வேண்டும். இந்த ஆற்றைக் கடந்த பிறகு அடர்ந்த பற்றை காடுகள் மற்றும் மூங்கில் காடுகளுடன் பயணத்தை தொடர வேண்டும். அதன் பிறகு சதுப்பு நிலங்கள் மற்றும் சிறிய நீரோடைகள் நிறைந்த காடுகள் மூலம் மலையின் அடிவாரத்தை அடையமுடியும். அங்கிருந்து பற்றை காடுகள் உடன் கூடிய சற்று கடினமான மேடுகளின் ஊடக மலையின் உச்சியை அடையலாம்.

ஆதாரங்கள்

தொகு
  1. "Mount Kirigalpotta". பார்க்கப்பட்ட நாள் 2010-04-19.
  2. "இலங்கை மலைகள்". Archived from the original on 2007-06-01. பார்க்கப்பட்ட நாள் 2007-04-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிகல்பொத்த&oldid=3549681" இலிருந்து மீள்விக்கப்பட்டது