கிரிஸ்டேடஸ் பழுப்புக் கீச்சான்
கிரிஸ்டேடஸ் பழுப்புக் கீச்சான் (அறிவியல் பெயர்: Lanius cristatus cristatus) என்பது பழுப்புக் கீச்சானின் துணையினம் ஆகும்.[1] இது மத்திய, கிழக்கு சைபீரியா மற்றும் வடக்கு மங்கோலியா, இந்தியா முதல் மலாய் தீபகற்பம் வரை காணப்படுகிறது.
விளக்கம்
தொகுகொண்டைக்குருவி அளவுள்ள கிரிஸ்டேடஸ் பழுப்புக் கீச்சான் சுமார் 20 செ.மீ. நீளம் உடையது. இதன் மேல் அலகு கொம்பு நிறமான பழுப்பாகவும், கீழ் அலகு ஊன் நிறத்திலும் (முனை தவிர), விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் சிலேட் பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் கண் வழியாக ஒரு கரும்பட்டை செல்லும். அந்தக் கரும்பட்டைக்கு மேல் நெற்றி சார்ந்த பகுதி வெண்மையாக இருக்கும். மோவாய், கன்னம், தொண்டை போன்றவையும் வெண்மையாக இருக்கும். உடலின் மேற்பகுதி கருஞ்சிவப்புத் தோய்ந்த பழுப்பு நிறமாக இருக்கும். உடலின் அடிப்பகுதி செம்மஞ்சள் தோய்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.[2]
பரவலும் வாழிடமும்
தொகுகிரிஸ்டேடஸ் பழுப்புக் கீச்சான் மத்திய, கிழக்கு சைபீரியா மற்றும் வடக்கு மங்கோலியா, இந்தியா முதல் மலாய் தீபகற்பம் வரை காணப்படுகிறது. வடக்கு ஆசியாவில் உள்ள பறவைகள் குளிர் காலத்தில் தென்னிந்தியாவுக்கு வலசை வருகின்றன. இது தென்னிந்தியாவில் பசுமைமாறாக் காடுகள், இலையுதிர் காடுகள் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. காடுகளை அடுத்த திறந்த வெளிகளிலும் திரியக் காணலாம். மலைகளில் 2000 மீ. உயரம் வரைக் காண இயலும். இவை காலை மாலை வேளைகளில் இரை தேடக்கூடியவை.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "Shrikes, vireos, shrike-babblers". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 2 August 2021.
- ↑ 2.0 2.1 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. p. 350.