கிருஷ்ணராயபுரம் திருக்கண்மாலீஸ்வரர் கோயில்
திருக்கண்மாலீஸ்வரர் கோயில் என்பது கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் எனும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இங்குள்ள இறைவன் திருஅகத்தீஸ்வரர், திருமுக்கண்ணன் , திருக்கண் மாலீஸ்வர் என பெயர்களில் அழைக்கப்படுகிறார். இந்த சிவன் கோயிலானது காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.
கோயில் வரலாறு
தொகுஇக்கோயில் சோழப் பேரரசு காலத்தில் சைவர்களால் கட்டப்பட்டதாகும். விஜய நகர பேரரசர் கிருஷ்ணதேவராயரால் இக்கோயில் புனரமைக்கப்பட்டது.[2] எனவே இவ்வூர் கிருஷ்ணராயபுரம் எனப்பெயர் பெற்றது.
இக்கோயில் எதிரில் மயானம் அமைந்துள்ளது. இதனால் காசிக்கு நிகரான கோயிலாக சைவர்கள் கருதுகின்றனர். காசிக்கு சென்று செய்ய வேண்டிய வேண்டுதலை இங்கு நிறைவேற்றுகின்றனர்.
சந்நிதிகள்
தொகுஇக்கோவிலில் மதுக்கரை வேணி, வண்டார் குழலி என்ற பெயரில் அம்மன் சன்னதியும் உப சன்னதிகளாக விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகளும் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
நவகிரகங்கள் சந்நிதி, காலபைரவர், ஹெயகிரீவர் சூரியன் சந்திரன் ஆகிய சந்நிதிகள் அமைந்துள்ளன.
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் திருக்கண்மாலீஸ்வரர், வண்டார்குழலி அம்மன் சன்னதிகளும், அம்மன், நவகிரகம், தட்சணாமூர்த்தி, விநாயகர், பிரம்மா, சூரியன், சந்திரன், காலபைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பூசைகள்
தொகுஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
விழாக்கள்
தொகுபிரதோசம், மாசி பெரும் விழா மற்றும் திருமண விசேஷங்கள் நடைபெறுகிறது. இக்கோயில் தமிழ் நாடு அரசு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "திருக்கண்மாலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி". Dinamalar. 30 ஜன., 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "கடன் தொல்லை நீங்கும் திருக்கண்மாலீஸ்வரர் வழிபாடு!". Dinamalar. 30 ஜன., 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help)