கிருஷ்ணா கோலி

பாக்கித்தானிய அரசியல்வாதி

கிருஷ்ண குமாரி கோலி ( Krishna Kumari Kohli 1 பிப்ரவரி 1979 இல் பிறந்தார்), கிஷூ பாய் என்ற புனைப்பெயரால் அறியப்படும், இவர், பாக்கித்தானைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் மார்ச் 2018 முதல் பாக்கித்தானின் அரசியல் சபையின் உறுப்பினராக உள்ளார். இந்தப் பதவியை வகிக்கும் இரண்டாவது இந்துப் பெண்ணான இவர் பெண்களின் உரிமைகள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு எதிரான தனது பிரச்சாரங்களுக்காக அறியப்படுகிறார். மேலும் 2018 இல் பிபிசியின் 100 செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக பெயரிடப்பட்டார்

அரசியல் சபை உறுப்பினர்
கிருஷ்ணா கோலி
ڪرشنا ڪوهلي
பாக்கித்தானின் அரசியல் சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மார்ச்சு 2018
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 பெப்ரவரி 1979 (1979-02-01) (அகவை 45)
நகர்பார்க்கர், சிந்து, பாக்கித்தான்
தேசியம்பாக்கித்தானியர்
அரசியல் கட்சிபாக்கித்தான் மக்கள் கட்சி
உறவுகள்வீரு கோலி, (சகோதரன்), ரூப்லா கோலி (பெரிய தாத்தா)
முன்னாள் கல்லூரிசிந்து பல்கலைக்கழகம்
புனைப்பெயர்கிஷூ பாய் [1]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

கிருஷ்ண குமாரி, பிப்ரவரி 1, 1979 அன்று நகர்பார்க்கரில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஏழை கோலி இனத்தில் ஒரு குடும்பத்தில் பிறந்தார்.[2] இவர், குழந்தையாகவும், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியாகவும் இருந்தபோது, உமர்கோட் மாவட்டத்தில் ஒரு நில உரிமையாளருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு தனியார் சிறையில் கொத்தடிமைத் தொழிலாளர்களாக இவரும் இவருடைய குடும்பமும் மூன்று ஆண்டுகள் சிறைபிடிக்கப்பட்டனர். [3] [2] இவர்களது முதலாளியின் நிலத்தில் காவலர்கள் சோதனை நடத்திய பின்னரே இவர்கள் விடுவிக்கப்பட்டனர். உமர்கோட் மாவட்டத்திலும் பின்னர் மிர்புர்காஸ் மாவட்டத்திலும்தனது ஆரம்பக் கல்வியை பெற்றார். [4]

1994 ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் போது 16 வயதில் திருமணம் செய்து கொண்டார். [4] இவர் தனது திருமணத்திற்குப் பிறகு தனது கல்வியைத் தொடர்ந்தார். பின்னர், 2013 இல் சிந்து பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். [2]

2007 ஆம் ஆண்டில், இஸ்லாமாபாத்தில் நடந்த மூன்றாவது மெஹர்கர் மனித உரிமைகள் இளைஞர் தலைமைத்துவ பயிற்சி முகாமில் இவர் கலந்து கொண்டார். அதில் இவர் பாக்கித்தான் அரசாங்கம், சர்வதேச இடம்பெயர்வு, மூலோபாய திட்டமிடல் மற்றும் சமூக மாற்றத்தை உருவாக்க பயன்படும் கருவிகளைப் பற்றி அறிந்து கொண்டார். [4]

அரசியல் வாழ்க்கை

தொகு

பாக்கித்தான் மக்கள் கட்சியில் சமூக ஆர்வலராக இணைந்து தார் பகுதியில் உள்ள விளிம்புநிலை சமூகங்களின் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்தார். பெண்களின் உரிமைகளுக்காகவும், கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு எதிராகவும், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்கிறார். [5] 2018 ஆம் ஆண்டில், பாக்கித்தான் அரசியல் சபையில் தேர்தலில், சிந்துவிலிருந்து பெண்களுக்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்சி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 12 மார்ச் 2018 அன்று பதவியேற்றார் ரத்னா பகவன்தாஸ் சாவ்லாவுக்குப் பிறகு அரசியல் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இந்துப் பெண் இவர். [5]

2018 ஆம் ஆண்டில், பிபிசி இவரை "பிபிசியின் 100 செல்வாக்கு மிக்க பெண்களில்" ஒருவராகப் பட்டியலிட்டது.

2020 காரக் கோயில் தாக்குதலைத் தொடர்ந்து சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீதான இதுபோன்ற தாக்குதலைத் தவிர்ப்பதற்காக பாக்கித்ஸ்தானின் மக்களவையில் "மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாப்பு மசோதா" என்ற புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் உறுப்பினர் அப்துல் கஃபூர் ஹைதரி தலைமையிலான நிலைக்குழு அதை நிராகரித்தது. இதனால் கிருஷ்ண குமாரி கோலி, சபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

இதனையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Agha, Bilal (15 March 2018). "Living Colours: 'My first priority is health, education of Thari women'". DAWN.COM. https://www.dawn.com/news/1395331. 
  2. 2.0 2.1 2.2 Samoon, Hanif (4 February 2018). "PPP nominates Thari woman to contest Senate polls on general seat". Dawn. பார்க்கப்பட்ட நாள் 4 March 2018.
  3. Dawood Rehman (3 March 2018). "Krishna Kumari becomes first Hindu Dalit woman senator of Pakistan". Daily Pakistan Global.
  4. 4.0 4.1 4.2 . 
  5. 5.0 5.1 Dawood Rehman (3 March 2018). "Krishna Kumari becomes first Hindu Dalit woman senator of Pakistan". Daily Pakistan Global.Dawood Rehman (3 March 2018).

வெளி இணைப்புகள்

தொகு
  • Profile at Senate of Pakistan website
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணா_கோலி&oldid=3669752" இலிருந்து மீள்விக்கப்பட்டது