கோண் அல்லது கிரேடியன் (gon , gradian) என்பது தளத்திலமையும் கோணங்களின் அளவுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அலகுகளுள் ஒரு வகை. ஒரு கிரேடியனின் அளவு, ஒரு சுற்றின் அளவில் 1400 பங்காகவும், ஒரு பாகையின் அளவில் 910 பங்காகவும், ஒரு ரேடியனில் π200 பங்காகவும் உள்ளது.[1]

கோண்
அலகு பயன்படும் இடம்கோணம்
குறியீடுg, கோண் or கிரேடு
அலகு மாற்றங்கள்
g இல் ...... சமன் ...
   சுற்றுகள்   1/400
   ரேடியன்கள்   π/200
   பாகைகள்   9/10°

கிரேட், கிரேடு (grad, grade ) என்பன கிரேடியனுக்கான மாற்றுப் பெயர்கள். gon-என்பது கோணத்தைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான γωνία/gōnía இலிருந்து உருவான சொல்.

ஐரோப்பிய நாடுகளில் ஒரு கிரேடின் நூற்றில் ஒரு பங்கைக் குறிப்பதற்கு செண்டிகிரேடு (centigrade), ஆயிரத்தில் ஒரு பங்கைக் குறிக்க மிரியோகிரேடு (myriograde) என்ற பெயர்கள் பயன்பாட்டில் இருந்தன. செண்டிகிரேடு என்பது கோணத்தின் அலகாக இருந்ததால் குழப்பம் ஏற்படாதிருக்கும் பொருட்டு, வெப்ப அலகான செண்டிகிரேடுக்கு செல்சியசு என மாற்றுப்பெயர் தரப்பட்டது.[2][3]

அலகுமாற்ற அட்டவணை

தொகு
கோண அலகுமாற்ற அட்டவணை
சுற்றுகள் ரேடியன்கள் பாகைகள் கிரேடியன்கள்
0 0 0g
1/24 π/12 15° 16 2/3g
1/12 π/6 30° 33 1/3g
1/10 π/5 36° 40g
1/8 π/4 45° 50g
1/ 1 ca. 57.3° ca. 63.7g
1/6 π/3 60° 66 2/3g
1/5 2π/5 72° 80g
1/4 π/2 90° 100g
1/3 2π/3 120° 133 1/3g
2/5 4π/5 144° 160g
1/2 π 180° 200g
3/4 3π/2 270° 300g
1 2π 360° 400g

பயன்கள்

தொகு

ஒவ்வொரு காற்பகுதியும் 100 கிரேடுகளாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

= 0 கிரேடியன்கள்
90° = 100 கிரேடு
180° = 200 கிரேடு
270° = 300 கிரேடு
360° = 400 கிரேடு

கிரேடியனை அலகாகப் பயன்படுத்தும்போது, ஒரு கோணத்தில் அடங்கிய செங்கோணங்களை எளிதாகக் கணக்கிடலாம். ஆனால் இவ்வலகு முறையில் 30° , 60° போன்ற கோணங்களைப் பின்னங்களாகத்தான் குறிக்க முடியும்:

30° = 3313 கிரேடு
60° = 6623 கிரேடு)

ஒரு மணி நேரத்தில் (124 நாள்) பூமி சுழலும் கோணவளவு 15° = 1623 கிரேடு.

சிக்கலெண் தளத்தில் திசைகன்களை எடுத்துக்கொள்ளும் போதும் கிரேடியன் பயனுள்ளதாக இருக்கும். சிக்கலெண் தளத்தில் உள்ள ஒரு திசையனின் கற்பனை அலகின் அடுக்கு, நேர் x-அச்சிலிருந்து அத்திசையனின் கோணத்திற்குச் (கோணவீச்சு) சமமாக ஹெக்டாகிரேடியனில் (100 கிரேடு) அமைந்திருக்கும்: :  இன் கோணவீச்சு   கிரேடு

அளக்கையியலில் பயன்பாடு

தொகு

உலகின் பலபாகங்களிலும் அளக்கையியலில் (surveying) கோணத்தின் இயல்பான அலகாகக் கிரேடியன் பயன்படுத்தப்படுகிறது.[4] அளக்கையியலில்

கிரேடியனின் உட்பிரிவு அலகுகள்:

1 c = 0.01 கிரேடு;
1 cc = 0.0001 கிரேடு.

மேற்கோள்கள்

தொகு
  1. Patrick Bouron (2005). Cartographie: Lecture de Carte (PDF). Institut Géographique National. p. 12. Archived from the original (PDF) on 2010-04-15. பார்க்கப்பட்ட நாள் 2011-07-07.
  2. Frasier, E. Lewis (February 1974), "Improving an imperfect metric system", Bulletin of the Atomic Scientists: 9ff. On p. 42 Frasier argues for using grads instead of radians as a standard unit of angle, but for renaming grads to "radials" instead of renaming the temperature scale.
  3. Mahaffey, Charles T. (1976), Metrication problems in the construction codes and standards sector, NBS Technical Note 915, U.S. Department of Commerce, National Bureau of Commerce, Institute for Applied Technology, Center for Building Technology, The term "Celsius" was adopted instead of the more familiar "centigrade" because in France the word centigrade has customarily been applied to angles.
  4. Lindeburg, Michael R. (2012), Civil Engineering Reference Manual for the PE Exam, Professional Publications, Inc., p. 78-7, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781591263807.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேடியன்&oldid=3240173" இலிருந்து மீள்விக்கப்பட்டது