கிரோடி லால் மீனா

இந்திய அரசியல்வாதி

கிரோடி லால் மீனா (Kirodi Lal Meena)(பிறப்பு 3 நவம்பர் 1951) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 8வது, 11வது, 12வது, 13வது மற்றும் 14வது ராஜஸ்தான் சட்டப் பேரவை, 9வது மற்றும் 15வது மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். மீனா தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். [1]

கிரோடி லால் மீனா
உறுப்பினர்-மாநிலங்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
4 ஏப்ரல் 2018
முன்னையவர்நரேந்திர புடானியா, இதேகா
தொகுதிஇராசத்தான்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
2009 – 18 மே 2014
முன்னையவர்சச்சின் பைலட்
தொகுதிதௌசா மக்களவைத் தொகுதி
பதவியில்
2 திசம்பர் 1989 – 13 மார்ச் 1991
முன்னையவர்இராம் குமார் மீனா
தொகுதிசவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி
உறுப்பினர் இராசத்தான் சட்டமன்றம்
பதவியில்
1 திசம்பர் 2013 – 2017
முன்னையவர்பர்சதி லால் மீனா
தொகுதிலால்சோட் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2008–2013
தொகுதிதோடாபிம் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2003–2008
முன்னையவர்யாசுமின் அப்ரார்
தொகுதிசவாய் மாதோபூர் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
25 நவம்பர் 1998 – 2003
முன்னையவர்கீரா இலால்
தொகுதிபாமன்வாசு சட்டமன்றத் தொகுதி
பதவியில்
3 மே 1985 – 1989
முன்னையவர்அரி சிங்
தொகுதிமஹுவ சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 நவம்பர் 1951 (1951-11-03) (அகவை 72)
தொளசா, இராசத்தான், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய மக்கள் கட்சி
துணைவர்கோல்மா தேவி மீனா
பெற்றோர்(s)மனோகர் இலா மீனா
போலா தேவி
வாழிடம்தௌசா

மீனா ஆரம்பத்திலிருந்தே பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்து வந்த நிலையில், 2008ல் சிறிது காலம் விலகி, 2018ல் மீண்டும் கட்சியில் சேர்ந்தார். இவர் அமைச்சராகவும், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2009ஆம் ஆண்டு இந்தியப் பொதுத்தேர்தலில் ராஜஸ்தானிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார். இவர் மீனா சமூகத்தைச் சேர்ந்தவர்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

மீனா 1951ஆம் ஆண்டு ராஜஸ்தானில் கோஹ்ரா முல்லா தெஹ்-மஹ்வா மாவட்டம்-தௌசாவில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை அரசுப் பள்ளி ஒன்றில் பயின்றார். ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள எஸ். பி. மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டத்தினை முடித்தார்.

கைது தொகு

24 திசம்பர் 2017 அன்று, சமூக உறுப்பினர்களின் விருப்பத்திற்கு எதிராக சங்க்வாலியில் உள்ள ஒரு தனியார் கோவிலுக்குள் நுழைய முயன்றதற்காக மீனா ஆதரவாளர்கள் சிலருடன் கைது செய்யப்பட்டார்.

மாநிலங்களவையில் தனி நபர் பொது சிவில் சட்ட முன்மொழிவு தொகு

கிரோடி லால் மீனா 9 டிசம்பர் 2022 அன்று மாநிலங்களவையில், பொது சிவில் சட்டத்தை இயற்றுவதற்கான குழுவை அமைக்கக் கோரி, தனிநபர் சட்ட முன்மொழிவை தாக்கல் செய்தார். இந்த சட்ட முன்மொழிவுக்கு இந்திய தேசிய காங்கிரசு, சமாஜ்வாதி கட்சி, இந்தியப் பொதுவுடமைக் கட்சிகள், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் இந்த சட்டமுன்மொழிவு அறிமுகப்படுத்த வாக்கெடுப்பு நடத்தினார். சட்ட முமொழிவை அறிமுகப்படுத்துவதற்கான தீர்மானத்திற்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிராக 23 வாக்குகளும் பெற்றது.[2]

அரசியல் வாழ்க்கை தொகு

  • 84 மாவட்டத் தலைவர், பாஜக, சவாய் மாதோபூர்
  • 1985-86 மாநிலச் செயலாளர், ராஜஸ்தான், பாஜக
  • 1985-89,1993–98, 1999 உறுப்பினர், ராஜஸ்தான் சட்டமன்றம் (நான்கு முறை)
  • 1985-89 உறுப்பினர், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் நலக் குழு, ராஜஸ்தான் சட்டமன்றம்
  • 1986-88 மாநிலத் தலைவர், பாரதிய ஜனதா இளைஞர் பிரிவு, ராஜஸ்தான்
  • 1989 சவாய் மாதோபூரிலிருந்து இந்தியாவின் 9வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 1989-91 உறுப்பினர், உணவு மற்றும் பொதுவிநியோக ஆலோசனைக் குழு
  • 1990 இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர்
  • 1990-91 உறுப்பினர், லாப அலுவலகம் தொடர்பான மக்களவையின் கூட்டுக் குழு
  • 1993-97 மாநிலத் தலைவர், எஸ்டி முன்னணி, பாஜக
  • 1995-98 மாவட்ட பிரமுக், மாவட்ட குழு தௌசா, ராஜஸ்தான்
  • 1998-99 மாநில துணைத் தலைவர், ராஜஸ்தான், பாஜக
  • 1998-2000 தேசிய துணைத் தலைவர், பட்டியலின முன்னணி, பாஜக
  • உறுப்பினர், தேசிய குழு, பாஜக (நான்கு முறை)
  • மாநில செயற்குழு, பா.ஜ.க (நான்கு முறை)
  • உறுப்பினர், வனவிலங்கு ஆலோசனைக் குழு, ராஜஸ்தான்
  • 1998-2003 உறுப்பினர், மதிப்பீட்டுக் குழு
  • 2003-2008 உணவு மற்றும் வழங்கலுக்கான அமைச்சர், அரசு. ராஜஸ்தான்
  • 2007 - 2008 ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் மதிப்பீட்டுக் குழு தலைவர்
  • 2009 15வது மக்களவைக்கு (2வது முறையாக) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் தௌசா மக்களவை
  • 16 செப். 2009 உறுப்பினர், நீர்வள அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு
  • 31 ஆகத்து 2009 உறுப்பினர், பணியாளர், பொதுக் குறைகள், சட்டம் மற்றும் நீதி
  • 2013-2017 ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
  • 2018 முதல் மாநிலங்களவை உறுப்பினர்

வகித்த பதவிகள் தொகு

முதல் வரை பதவி
1985 1988 உறுப்பினர், ராஜஸ்தானின் 8வது சட்டமன்ற உறுப்பினர்
1989 1991 உறுப்பினர், ஒன்பதாவது மக்களவை
1998 2003 உறுப்பினர், ராஜஸ்தானின் 11வது சட்டமன்ற உறுப்பினர்
2003 2008 உறுப்பினர், ராஜஸ்தானின் 12வது சட்டமன்ற உறுப்பினர்
2008 2009 உறுப்பினர், ராஜஸ்தானின் 13வது சட்டமன்ற உறுப்பினர்
2009 2014 உறுப்பினர், 15வது மக்களவை
2013 2017 உறுப்பினர், ராஜஸ்தானின் 14வது சட்டமன்ற உறுப்பினர்
2018 பதவியில் உறுப்பினர், மக்களவை

மற்ற பதவிகள் தொகு

முதல் வரை பதவி
1985 1988 உறுப்பினர், பட்டியல் சாதியினர் நலக் குழு
1989 1991 உணவு மற்றும் பொது வழங்கல் தொடர்பான மக்களவையின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
1990 உறுப்பினர், இந்திய நாடாளுமன்றக் குழு
1990 1991 உறுப்பினர், லாப அலுவலகத்தின் கூட்டுக் குழு
1998 2003 உறுப்பினர், மதிப்பீட்டுக் குழு
2003 2007 அமைச்சர், உணவு மற்றும் சிவில் சப்ளை, ராஜஸ்தான் அரசு
2007 2008 தலைவர், மதிப்பீட்டிற்கான குழு
2009 2013 உறுப்பினர், சட்டம் மற்றும் நீதிக்கான குழு
2013 உறுப்பினர், மதிப்பீட்டுக் குழு
நீர்வளக் குழு உறுப்பினர்
நகர்ப்புற வளர்ச்சிக் குழு உறுப்பினர்
2018 2019 நீர்வளக் குழு உறுப்பினர்
2019 2021 உறுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கல்விக்கான தேசிய கண்காணிப்புக் குழு
2019 முதல் உறுப்பினர், சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழு, வனம் மற்றும் பேரழிவு மேலாண்மை

மேற்கோள்கள் தொகு

  1. "Kirodi".
  2. Private member's bill on Uniform Civil Code introduced in Rajya Sabha

வெளி இணைப்புகள் தொகு

  • Kirodi Lal Meena on Facebook
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரோடி_லால்_மீனா&oldid=3618767" இலிருந்து மீள்விக்கப்பட்டது