கிர்சுடென்போட்சு தேசிய தாவரவியல் பூங்கா

கிர்சுடென்போட்சு தேசிய தாவரவியல் பூங்கா (Kirstenbosch National Botanical Garden) என்ற இந்த முக்கியமான தாவரவியல் பூங்கா, தென்னாப்பிரிக்கா நாட்டிலுள்ள, மேசை மலையின் கிழக்கு அடிவாரத்தில், கேப் டவுன் நகரில் உள்ளது. தென்னாப்பிரிக்காவின் பத்து தேசிய தாவரவியல் பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும். இதில் தென்னாப்பிரிக்காவின் ஆறு வேறுபட்ட உயிர்மச் சூழ்நிலைகளில் ஐந்து உயிரிமங்கள் பேணப்படுகின்றன. இங்கு அகணியத் தாவரங்களை, அதற்குரிய சூழல்களில் பயிரிட்டு வளர்க்கின்றனர். 1913 ஆம் ஆண்டு இது தென்னாப்பிரிக்காவின் தாவர வளங்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டது.

கிர்சுடென்போட்சு தேசிய தாவரவியல் பூங்கா
Kirstenbosch National Botanical Garden
மேல்: வடமேற்கு மலைத்தொடர். நடுஇடது: பாதுகாக்கப்பட்ட உயிர்மக் குடில். நடுவலது: நூற்றாண்டு மரம்(Boomslang) அடிஇடது: பறவைகளிடம்- அடிவலது: பாரம்பரிய மூலிகைகள்
Map
வகைதாவரவியல் பூங்கா
அமைவிடம்கேப் டவுன், தென்னாப்பிரிக்கா
ஆள்கூறு33°59′15″S 18°25′57″E / 33.98750°S 18.43250°E / -33.98750; 18.43250
பரப்பளவு528 எக்டேர்கள் (1,300 ஏக்கர்கள்)
உருவாக்கம்1913; 111 ஆண்டுகளுக்கு முன்னர் (1913)
இயக்குபவர்South African National Biodiversity Institute (SANBI)
இணையதளம்sanbi.org/gardens/kirstenbosch

உலர் தாவரகங்கள்

தொகு
 
மருத்துவர் கார்ல் வில்ம், செருமனியார், 1855
  • கோம்ப்டன் (Compton) உலர் தாவரகம் என்பது இப்பூங்காவில் உள்ளது. இது ஆப்பிரிக்கத் தாவரங்களையும், புதிய தாவரயினங்களையும் கண்டறிந்து விவர ஆவணங்களை உருவாக்குகின்றன.[1]. ஏறத்தாழ 2, 50,000 உலர்ந்த தாவர ஆவணங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. ஆய்வாளர்கள் பயன்படுத்தும் வகையில் பெரிய நூலகமொன்றும் இங்குள்ளது.
  • தென்னாப்பிரிக்கா உலர் தாவரக அருங்காட்சியகம் இங்குள்ளது. உலகின் பல பகுதிகளின் தாவரயினங்கள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன. முதன்முதலில் டேனிய தாவரவியலாளர் (Christian Friedrich Ecklon) 325 தாவர ஆவணங்களோடு இதனைத் தொடங்கினார். 1855 ஆம் ஆண்டு செருமானிய மருத்துவரும், தாவரவியலாளரும் ஆன மருத்துவர் கார்ல் வில்ம் (Dr. Karl Wilhelm Ludwig Pappe), 325 ஆவணங்களைப் பாதுகாத்து விரிவு படுத்தினார்.
  • 1902 ஆம் ஆண்டு Stellenbosch அரசு உலர் தாவரகம் தோற்றுவிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு இது கோம்ப்டன் உலர் தாவரகத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு