கிறிசு சிகர்டுசன்
கிறிசு சிகர்டுசன் ஒரு கனடிய இயற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். இவர் பிரித்தானியக் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வான்கூவர் பிரித்தானியக் கொலம்பியாவில் உள்ள இயற்பியல், வானியல் துறையில் இணை பேராசிரியராக உள்ளார்.[1] அவர் முன்பு நாசாவினலபுள் ஆய்வுறுப்பினராகவும் உயர் ஆய்வு நிறுவனத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.[2][3] கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[4]
பிறப்பு | |
---|---|
தேசியம் | கனடியர் |
துறை | இயற்பியல் |
துறை ஆலோசகர் | மார்க் கமியொன்கோசுகி |
சிகர்டுசன் அண்டவியல் சிற்றலைவுகளில் இருண்ட பொருளின் விளைவுகள் குறித்த பணிக்காகவும் இருண்ட பொருள் துகள் இயற்பியலின் புதிய படிமங்களுக்காகவும் அண்டவியல் மூலம் பல்லண்ட அடையாளங்களைக் கவனிப்பதற்கான திறனுக்காகவும் அறியப்படுகிறார்.[5][6][7][8][9][10] தொடக்கநிலைப் புடவியின் இயற்பியல் , அண்டவியல் சிற்றலைவுக் கோட்பாடு, 21 செமீ அண்ட அலைவுகள் ஆகியவை அவரது பிற படைப்புகள் அடங்கும்.[11]
2010 ஆம் ஆண்டில் , இருண்ட பொருளின் உருவாக்கத்தை அடர்துகளாக்கத்துடன் இணைக்கும் பொருளின் தோற்றம் குறித்த கோட்பாடான இருட்துகளாக்கக் கோட்பாட்டை முன்மொழிந்த ஒரு கட்டுரையை அவர் பிறருடன்இணைந்து எழுதினார்.[12] நீண்ட காலத்திற்கு முதன்மின்கள் அல்லது நொதுமிகள் இருண்ட பொருளுடன் தொடர்புகொள்வதன் மூலம் அழிக்கப்படலாம் என்று இந்தக் கோட்பாடு கணித்துள்ளது.[13]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kris Sigurdson. UBC Physics & Astronomy People Directory. Retrieved on 2012-03-03.
- ↑ Listing of all Hubble Fellows பரணிடப்பட்டது 2012-08-05 at Archive.today. Space Telescope Science Institute. Retrieved on 2012-03-03.
- ↑ Previous People பரணிடப்பட்டது 2012-02-27 at the வந்தவழி இயந்திரம். IAS School of Natural Sciences. Retrieved on 2012-03-03.
- ↑ 2005 Commencement. California Institute of Technology. Retrieved on 2012-03-03.
- ↑ What Mass Are the Smallest Protohalos?. Physical Review Letters. Retrieved on 2012-03-03.
- ↑ Charged-Particle Decay and Suppression of Primordial Power on Small Scales. Physical Review Letters. Retrieved on 2012-03-03.
- ↑ Unified Origin for Baryonic Visible Matter and Antibaryonic Dark Matter. Physical Review Letters. Retrieved on 2012-03-03.
- ↑ X Particle Explains Dark Matter and Antimatter at the Same Time. Wired Science. Retrieved on 2012-03-03.
- ↑ How to spot a multiverse. physicsworld.com. Retrieved on 2012-03-03.
- ↑ Greene, Brian (2011). The Hidden Reality: Parallel Universes and the Deep Laws of the Cosmos. Page 166.
- ↑ Publications. Kris Sigurdson at the University of British Columbia. Retrieved on 2012-03-03.
- ↑ Hylogenesis: A Unified Origin for Baryonic Visible Matter and Antibaryonic Dark Matter. Cornell University Library. Retrieved on 2012-03-03.
- ↑ Baryon destruction by asymmetric dark matter. Physical Review D. Retrieved on 2012-03-03.