கிறித்தோபர் நகர்

கிறித்தோபர் நகர் என்பது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் பார்வதிபுரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்.[2] இது அரபிக்கடலிலிருந்து 7 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமரியிலிருந்து 25 கி.மீ தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து 65 கி.மீ தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து 80 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் பெரும்பகுதி பார்வதிபுரத்தின் விவசாய நிலங்களாக இருந்த பகுதியாகும். பெருவிளையும் கோட்டவிளையும் இதற்கு அருகிலுள்ள கிராமங்களாகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலுள்ள மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இது 1980இற்குப் பின்னர் வளர்ச்சியடைந்த ஒரு பகுதி ஆகும்.

கிறித்தோபர் நகர்
கிராமம்
கிறித்தோபர் நகர் is located in தமிழ் நாடு
கிறித்தோபர் நகர்
கிறித்தோபர் நகர்
கிறித்தோபர் நகர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 8°11′17″N 77°23′28″E / 8.188°N 77.391°E / 8.188; 77.391
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
ஏற்றம்55 m (180 ft)
மொழிகள்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சலக குறியீட்டு எண்629003[1]
தொலைபேசி குறியீடு04652
வாகனப் பதிவுTN 74
அருகில் உள்ள நகரம்நாகர்கோவில்
பார்வதிபுரத்திலிருந்து கிறித்தோபர் நகர் செல்லும் வீதி

இது நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும்.

வழிபாட்டிடங்கள் தொகு

  • சாஸ்தா கோயில்
  • சிஎசுஐ கிறித்தோபர் காலனி தேவாலயம்
  • புனித பாத்திமா மாதா தேவாலயம்
 
கிறித்தோபர் நகரில் ஒரு வீதிக்காட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "அஞ்சல் குறியீட்டுத் தகவல் இணையத்தளம்". பார்க்கப்பட்ட நாள் 02 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "வன்ஃபைவ்நைன் இணையத்தளம்". பார்க்கப்பட்ட நாள் 02 சனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்தோபர்_நகர்&oldid=3928927" இலிருந்து மீள்விக்கப்பட்டது