கிறிஸ்டினா கிரிம்மி

கிறிஸ்டினா விக்டோரியா கிரிம்மி (Christina Victoria Grimmie, மார்ச் 12, 1994 - சூன் 11, 2016)[1] அமெரிக்க பாடகியும் பாடலாசிரியருமாவார்; என்பிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் பாட்டுப்போட்டியான தி வாய்சு நிகழ்ச்சி மூலமும் தற்கால பரப்பிசைக் கலைஞர்களின் புகழ்பெற்ற பாடல்களை மீள்பதிவாக வெளியிட்டும் பரவலாக அறியப்பட்டிருந்தார். சூன் 2011இல் இவரது அறிமுக இசைத்தட்டான ஃபைன்ட் மீ வெளியானது. அவரது கலைக்கூட இசைத்தொகுப்பு வித் லவ் 2013இல் வெளியிடப்பட்டது. இரண்டாவது இசைத்தட்டு, சைடு ஏ 2016இல் வெளியானது.

கிறிஸ்டினா கிரிம்மி
Christina Grimmie 2014 crop.jpg
2014 நிகழ்ச்சியொன்றில் கிரிம்மி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கிறிஸ்டினா விக்டோரியா கிரிம்மி
பிறப்புமார்ச்சு 12, 1994(1994-03-12)
மார்ல்டன், நியூ செர்சி, ஐ.அ.
இறப்புசூன் 11, 2016(2016-06-11) (அகவை 22)
ஒர்லாண்டோ, ஐ.அ.
இசை வடிவங்கள்
தொழில்(கள்)
  • பாடகி
  • பாடலாசிரியை
  • பியானோ கலைஞர்
இசைக்கருவி(கள்)
இசைத்துறையில்2009 – 16
வெளியீட்டு நிறுவனங்கள்
  • கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட் ஏஜென்சி
  • ஐலாண்டு ரிகார்ட்சு
இணைந்த செயற்பாடுகள்
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

2014இல் கிரிம்மி தி வாய்சு (குரல்) தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஆறாம் பருவத்தில் பங்கேற்றார். இந்தப் போட்டியில் மூன்றாவதாகத் தேர்வானார். அந்த நிகழ்ச்சியில் இவருக்குப் பயிற்றுநராக இருந்த ஆடம் லெவைன் இறுதிப் போட்டியில் முடிவு என்னவாக இருந்தாலும் தாம் தமது நிறுவனத்தில் வாய்ப்பளிக்கப் போவதாக அறிவித்திருந்தார். லில் வெய்ன் தன்னுடைய யங் மணி என்டெர்டெய்ன்மென்ட் நிறுவனத்தில் பாட உடன்பாடு செய்துகொள்வதாகக் கூறினார். ஐலாண்டு ரிகார்ட்சு நிறுவனத்தில் சில காலம் பணியாற்றியுள்ளார்.

சூன் 11, 2016 அன்று ஒர்லாண்டோவில் தனது இசை நிகழ்ச்சிக்குப் பிறகு தனது விசிறிகளுக்கு கையொப்பமிட்டுக் கொண்டிருக்கும் போது துப்பாக்கியால் சுடப்பட்ட கிரிம்மி பின்னர் மருத்துவமனையில் துப்பாக்கிக் காயங்களால் உயிரிழந்தார்.[2]

மேற்சான்றுகள்தொகு

  1. "Christina Grimmie". Fanlala. பார்த்த நாள் January 5, 2014.
  2. Hayes, Christal (June 11, 2016). "Singer Christina Grimmie is dead after being shot at Orlando concert". Orlando Sentinel. http://www.orlandosentinel.com/news/breaking-news/os-orlando-plaza-live-shooting-20160610-story.html. பார்த்த நாள்: June 11, 2016. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்டினா_கிரிம்மி&oldid=3240229" இருந்து மீள்விக்கப்பட்டது