கிறிஸ்டியன் கிறிஸ்டியன்சென்

இசுட்டீஃபான்- போல்ட்சுமான் விதியை

கிறிஸ்டியன் கிறிஸ்டியன்சென்
பிறப்பு(1843-10-09)9 அக்டோபர் 1843
இறப்பு28 நவம்பர் 1917(1917-11-28) (அகவை 74)
தேசியம்டென்மார்க் மக்கள்
செயற்பாட்டுக்
காலம்
1870s-1912
அறியப்படுவதுகிறிஸ்டியன்சன் விளைவு

கிறிஸ்டியன் கிறிஸ்டியன்சென் (Christian Christiansen) (9 அக்டோபர் 1843 லான்போர்க்கு, டென்மார்க் – 28 நவம்பர் 1917 பிரெடெரிக்சுபெர்க்கு) ஒரு டென்மார்க்கிய இயற்பியலாளர் ஆவார்.

இவர் முதலில் ஒரு உள்ளூர் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். 1886 ஆம் ஆண்டில், இவர் கோபனாவன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவர் பதவியில் பணியமர்த்தப்பட்டார்.

இவர் முதன்மையாக வெப்பக் கதிர்வீசல் மற்றும் நிறப்பிரிகை குறித்து ஆய்வு மேற்கொண்டு கிறிஸ்டியன்சன் விளைவைக் கண்டறிந்தார். 1917 ஆம் ஆண்டுவாக்கில், இவர் பியூஸ்சின் (அனிலீன் சிவப்பு) உள்ளிட்ட பல்வேறு சாயங்களின் நிறப்பிரிகை செயல்பாட்டைக் கண்டறிந்தார்.

1884 ஆம் ஆண்டில் இவர் இசுட்டீஃபான்- போல்ட்சுமான் விதியை நிரூபித்தார்.

இவர் 1992 ஆம் ஆண்டில் அரச சுவீடிஷ் அறிவியல் அகாதெமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் நீல்சு போரின் முனைவர் பட்ட ஆய்விற்கான வழிகாட்டியாவார். 1912 ஆம் ஆண்டில், இவர் பணி ஓய்வு பெற்றார். மார்ட்டின் குனுட்சென் இவரைத் தொடர்ந்து பேராசிரியரானார்.

குறிப்புகள்

தொகு
  • C. Christiansen, Lærebog i fysik, Copenhagen, 1892
  • C. Christiansen, Indledning til den mathematiske Fysik, 2 Bde, 1887-1889
  • C. Christiansen, Untersuchungen über die optischen Eigenschaften von fein vertheilten Körpern - Erste Mittheilung, Ann. Phys., Vol. 23, pp. 298–306, 1884
  • C. Christiansen, Untersuchungen über die optischen Eigenschaften von fein vertheilten Körpern - Zweite Mittheilung, Ann. Phys., vol. 24, pp. 439–446, 1885
  • C. Christiansen Elements of Theoretical Physics translated into English by W. F. Magie from the German translation of Johannes Julius Christoph Müller (London, McMillan, 1897)[1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு