கிளாட் ஜோசப் ஜெப்ராய்
கிளாட் ஜோசப் ஜெப்ராய் (Claude Joseph Geoffroy) (8 ஆகஸ்ட் 1685, பாரிஸ் – 9 மார்ச் 1752, பாரிஸ்) எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய் சகோதரர் ஆவார். அவரது சகோதரரைப் போலவே, இவர் ஒரு மருந்து மற்றும் வேதியியலாளர் ஆவார். தாவரவியலில் கணிசமான அறிவைப் பெற்ற இவர், குறிப்பாக தாவரங்களில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்களைப் பற்றிய ஆய்வுக்கு தன்னை அர்ப்பணித்தார்.
மாத்தியூ ஃபிராங்கோயிஸ் ஜெஃப்ராய் மற்றும் லூயிஸ் டெவாக்ஸ் ஆகியோருக்கு மகனாக 1685 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி பாரிசில் பிறந்தார். 1703 இல் அவர் ஒரு முதன்மையான மருந்து வியாபாரி ஆவார். மேலும், 1704/05 இல் தெற்கு பிரான்ஸ் முழுவதும் அறிவியல் உல்லாசப் பயணங்களை மேற்கொண்டார். பின்னர் அவர் யோசப் பிட்டன் டி டொர்னபோர்டு (1707) கீழ் தாவரவியல் பயின்றார். 1708 ஆம் ஆண்டில், அவரது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, இவர் குடும்ப மருந்தகத்தின் பொறுப்பேற்றார். 1711 ஆம் ஆண்டு மே மாதத்தில் இவர் அகாடமி ராயல் டெஸ் சயின்சஸ் (தாவரவியல் பிரிவு) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1715 ஆம் ஆண்டில் "வேதியியல் பிரிவுக்கு" மாற்றப்பட்டார். 1718 முதல் 1720 வரை அவர் பாரிஸில் கார்டே டெஸ் மார்ச்சண்ட்ஸ்-அபோதிகேயர்ஸ் ஆக இருந்தார், பின்னர் ஹோட்டல் - டியூவில் மருந்தக ஆய்வாளராக பணியாற்றினார். 1731 ஆம் ஆண்டில் இவர் பாரிஸில் ஆல்டர்மேன் பட்டத்தை அடைந்தார். [1]
1707 முதல் 1751 வரை, இவர் ஹிஸ்டரி எட் மெமரிஸ் டி ஐ அகாதெமி ராயல் டிஸ் சயன்சஸ் இதழில் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார். [1]
1729 ஆம் ஆண்டில் ஜியோஃப்ராய் வில்ஹெல்ம் ஹோம்பெர்க்கின் "சிறிய அளவு பொட்டாசியத்தைச் சேர்ப்பதன் மூலம் வினிகரின் வலிமையைக் கண்டறிய" ஒரு முறையைப் பயன்படுத்தினார், மேலும் இதுவே பதிவு செய்யப்பட்ட முதல் தரம்பார்த்தல் ஆகும்.
இவரது சகோதரரான ஜெஃப்ராய் தி எல்டர் (1672-1731) இலிருந்து அவரை வேறுபடுத்துவதற்காக அவர் ஜெஃப்ராய் தி யங்கர் என்று அழைக்கப்படுகிறார். [2] இருப்பினும், இது அவரது மகன் கிளாட் ஃபிராங்கோயிஸ் ஜெஃப்ராய் (1729-1753) உடன் குழப்பத்தை ஏற்படுத்துகிறது, அவர் "கிளாட் ஜெஃப்ராய் தி யங்கர்" என்று அழைக்கப்படுகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Étienne-Louis Geoffroy, médecin et entomologiste français Biography of Claude Joseph Geoffroy
- ↑ CRC World Dictionary of Medicinal and Poisonous Plants: Common Names by Umberto Quattrocchi