யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு
யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு (Joseph Pitton de Tournefort, 5 சூன், 1656 — 28 திசம்பர், 1708) என்ற தாவரவியல் பேரறிஞர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். தாவரவியல் வகைப் பாட்டியல் அலகான பேரினம் என்பதனை விரிவாக எடுத்துரைத்தவர். இவரின் ஆராய்ச்சி வெளியீடுகளில் சிலவற்றின் அடியொற்றியே, லின்னேயசு தனது ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். பேரினம் என்ற அலகானது, லின்னேயசின் ஐந்து அலகுகளில் ஒன்றாகும். Tourn என்ற தாவரவியல் குறுக்கம், இவரின் நினைவாகப் பயன்படுத்தப் படுகிறது.
யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு Joseph Pitton de Tournefort | |
---|---|
யோ.பி.டீ.டொர்னபோர்டு[note 1] தாவரவியலாளன். | |
பிறப்பு | 5 சூன், 1656 Aix-en-Provence |
இறப்பு | 28 திசம்பர், 1708 5ème arrondissement |
குடியுரிமை | பிரஞ்சுக்காரர் |
தேசியம் | பிரான்சு |
துறை | தாவரவியல் |
அறியப்படுவது | பேரினம் (உயிரியல்) |
தாக்கம் செலுத்தியோர் | Charles Plumier |
குறிப்புகள் | |
52.5 வருடங்கள் வாழ்ந்தார். |
வாழ்க்கைச்சுருக்கம்
தொகுஇளமைக்கல்வியை இயேசு சபையில் கற்றார். அதன் பிறகு தேவாலயம் த்தில் இணைய இருந்த போது, அவரது தந்தை இறந்தார். தந்தையின் இறப்பினால், அவருக்கு தாவரவியலில் ஆர்வம் ஏற்பட்டது. இரண்டு வருடம் பல்வேறு தாவரவியல் விவரங்களைச் சேகரித்தார். பின் மருத்துவம் படித்தார். ஆனால், 1683 ஆம் ஆண்டு கல்லூரிப் பேராசிரியராக பாரிசு' நகரிலுள்ள சார்டினில்[note 2] என்பதில் அமர்த்தப்பட்டார். பல்வேறு தாவரவியல் கொள்கைகள் ஆராய்ச்சி செய்தார். பின் அவராக பயணிக்கும் போது விபத்தால், பாரிசு நகர வீதியில் இறந்தார். அவர் இறந்த இடம், அவரது பெயராலே[note 3] இன்றும் அழைக்கப்படுகிறது.
ஆராய்ச்சி
தொகுதாவரவியல் பன்னாட்டு விதிகளின் படி, Joseph Pitton de Tournefort என்பவரை, Tourn. என்ற தாவரவியலாளர் பெயர்சுருக்கத்தால், மேற்கோளாகத் தாவரவியல் பெயருக்குப் பின் குறிப்பிடுவர்.[1]
படைப்புகள்
தொகு- Eléments de botanique, ou Méthode pour reconnaître les Plantes , 1694
- Histoire des plantes qui naissent aux environs de Paris, 1698
- Institutiones rei herbariae, editio altera, 1700 and 1719 (Latin translation of Élémens de botanique)
- Relation d'un voyage du Levant, 1717 (இவர் இறந்தபின், வெளியிடப் பட்ட நூல்)
- Traité de la matière médicale, 1717
உயவுத்துணை
தொகு- - Isely, Duane (1994). 101 botanists, Iowa State University Press. pp. 71–73.
- பிரித்தானிக்கா(1911)பதிவிறக்க இணையத்தளம்
-
பிறப்பிடத் தெரு
-
1656-1708
-
1700
-
நகரின் இயற்கை
இதர இணைய இணைப்புகள்
தொகு- இணைய நூலக நூல் Elemens de botanique ou methode pour connoitre les plantes 1694-1695.
குறிப்புகள்
தொகு- ↑ யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு, = Joseph Pitton de Tournefort
- ↑ சார்டின் டெசு' பிளான்டெசு' = Jardin des Plantes
- ↑ Rue de Tournefort
- ↑ IPNI, Joseph Pitton de Tournefort
{{citation}}
: Invalid|mode=CS1
(help)