கிளாந்தான் மாநில ஆட்சிக்குழு

மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழு

கிளாந்தான் மாநில ஆட்சிக்குழு (ஆங்கிலம் Kelantan State Executive Council (EXCO); மலாய்: Majlis Mesyuarat Kerajaan Negeri Kelantan (MMKN) என்பது மலேசியா கிளாந்தான் மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழுவாகும். கிளாந்தான் சுல்தான் அவர்களால் நியமிக்கப்பட்ட கிளாந்தான் மந்திரி பெசார் ஆட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். அவர் கிளாந்தான் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். ஆட்சிக்குழுவில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.

கிளாந்தான் மாநில ஆட்சிக்குழு
Kelantan State Executive Council
Majlis Mesyuarat Kerajaan Negeri Kelantan
2023–தற்போது
உருவான நாள்15 ஆகஸ்டு 2023
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்முகமட் நசுருதீன் டாவுட்
பெரிக்காத்தான் (PN) பாஸ் (PAS)
துணை அரசுத் தலைவர்முகமட் பாட்சில் அசான்
(PN–PAS)
நாட்டுத் தலைவர்சுல்தான் ஐந்தாம் முகமது
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை11
உறுப்புமை கட்சி
சட்ட மன்றத்தில் நிலைகூட்டணி அரசு
43 / 45
எதிர் கட்சி
எதிர்க்கட்சித் தலைவர்முகமது சியாபுதீன் ஆசிம்
பாரிசான் நேசனல் (BN)அம்னோ (UMNO)
வரலாறு
Legislature term(s)15-ஆவது கிளாந்தான் மாநிலச் சட்டமன்றத் தொடர்

கிளாந்தான் ஆட்சிக்குழு மலேசிய அமைச்சரவை கட்டமைப்பைப் போன்றதாகும். ஆனாலும் இந்த ஆட்சிக்குழு அளவில் சிறியது. கூட்டாட்சி நடுவண் அரசாங்கத்தின் பொறுப்புகளும், மாநில அரசாங்கத்தின் பொறுப்புகளும் வேறுபடுவதால்; மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலேயும் பல துறைகளும் மாறுபடுகின்றன.

கிளாந்தான் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கிளாந்தான் மந்திரி பெசாரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சுல்தானால் நியமிக்கப்படுகிறார்கள். கிளாந்தான் ஆட்சிக்குழுவிற்கு அமைச்சுகள் இல்லை; மாறாக பல குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் மாநில விவகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பல்வகைத் துறைகளைக் கவனித்துக் கொள்ளும். ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள் வழக்கமாக ஒரு குழுவின் தலைவராக இருப்பார்கள்.

அலுவல் சார்ந்த அரசு உறுப்பினர்கள்

தொகு
அரசாங்கப் பதவி பெயர்
மாநிலச் செயலாளர் நசுரான் முகமது (Nazran Mohammad )
மாநிலச் சட்ட ஆலோசகர் சகிடானி அப்துல் அசீஸ் (Shahidani Abd. Aziz)
மாநில நிதி அதிகாரி நிக் காசிம்நிக் யூசோப் (Nik Kazim Nik Yusoff)

ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பட்டியல்

தொகு

15 ஆகஸ்டு 2023 முதல் கிளாந்தான் ஆட்சிக்குழுவின் உறுப்பினர்கள்:[1]

     பெரிக்காத்தான் (11)
பெயர் துறை கட்சி சட்டமன்றத் தொகுதி பதவி தொடக்கம் பதவி முடிவு
முகமட் நசுருதீன் டாவுட்
கிளாந்தான் மந்திரி பெசார்
(Mohd Nassuruddin Daud)
  • திட்டமிடல்
  • பொது நிர்வாகம்
  • நிதி
  • பொருளாதாரம்
  • நிலம்
பெரிக்காத்தான்
(பாஸ்)
மெராந்தி சட்டமன்றத் தொகுதி 15 ஆகஸ்டு 2023 தற்போது
முகமது பட்சிலி அசன் (துணை மந்திரி பெசார்)
(Mohamed Fadzli Hassan)
  • வட்டார வளர்ச்சி
  • இயற்கை வளங்கள்
  • ஒருங்கமைவு
  • மனித வள மேம்பாடு
  • சட்டம்
தெமாங்கான் சட்டமன்றத் தொகுதி
வான் ரோசுலான் வான் அமாட்
(Wan Roslan Wan Hamat)
  • கல்வி
  • உயர் கல்வி
  • பசுமை தொழில்நுட்பம்
  • இலக்கவியல் மற்றும் புத்தாக்கம்
பெங்காலான் கூபோர் சட்டமன்றத் தொகுதி
ரொகானி இப்ராகிம்
(Rohani Ibrahim)
  • சமூக நலன்
  • மகளிர் மற்றும் குடும்ப வளர்ச்சி
தஞ்சோங் மாஸ் சட்டமன்றத் தொகுதி
முகமட் அசுரி மாட் டாவுட்
(Mohd Asri Mat Daud)
  • இசுலாமிய வளர்ச்சி
  • டக்வா (Dakwah)
  • தகவல்
  • மக்கள் தொடர்பு
சாலோர் சட்டமன்றத் தொகுதி
அனிசாம் ரகுமான்
(Md. Anizam Ab. Rahman)
  • முதலீடு
  • தொழில்
  • மனித வளம்
  • வர்த்தகம்
  • தொழில் முனைவோர் வளர்ச்சி
கெமகாங் சட்டமன்றத் தொகுதி
சமாக்சாரி முகமது
(Zamakhshari Mohamad)
  • இளைஞர்கள் மற்றும் விளையாட்டு
  • அரசு சாரா நிறுவனங்கள்
  • மக்கள் ஒற்றுமை
அப்பாம் புத்ரா சட்டமன்றத் தொகுதி
துவான் சரிபுடின் துவான் இசுமாயில்
(Tuan Saripuddin Tuan Ismail)
  • வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள்
  • பயன்பாட்டுப் பொருட்கள்
செலிசிங் சட்டமன்றத் தொகுதி
இசானி உசேன்
(Izani Husin)
  • பொது பணிகள்
  • உள்கட்டமைப்பு
  • தண்ணீர்
  • கிராமப்புற வளர்ச்சி
கிஜாங் சட்டமன்றத் தொகுதி
இல்மி அப்துல்லா
(Hilmi_Abdullah)
  • உள்ளாட்சி மற்றும் வீட்டுவசதி
  • ஆரோக்கியம்
  • சுற்றுச்சூழல்
குச்சில் சட்டமன்றத் தொகுதி
கமாருடின் நோர்
(Kamarudin Md Nor )
  • கலாசாரம், கலை மற்றும் பாரம்பரியம்
  • சுற்றுலா
பெரிக்காத்தான்
(பெர்சத்து)
ஆயர் லானாஸ் சட்டமன்றத் தொகுதி

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Mohd Nassuruddin is new Kelantan MB". The Star. 15 August 2023. பார்க்கப்பட்ட நாள் 15 August 2023.

வெளி இணைப்புகள்

தொகு