கிளாய்ரி நோவியன்

பிரான்சு நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

கிளாய்ரி நோவியன் (Claire Nouvian) சுற்றுச்சூழல் ஆர்வலர், பத்திரிகையாளர், தொலைக்காட்சி தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் நிறுவனத் தலைவர் என பன்முகங்கள் கொண்ட ஒரு பிரான்சு நபராவார். இவர் 1974 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19 ஆம் தேதி பிறந்தார்.

கிளாய்ரி நோவியன்
Claire Nouvian
2018 ஆம் ஆண்டில் கிளாய்ரி நோவியன்
பிறப்பு19 மார்ச்சு 1974 (1974-03-19) (அகவை 50)
பொர்தோ, பிரான்சு
தேசியம்பிரெஞ்சு
பணிசுற்றுச்சூழல் ஆர்வலர், பத்திரிகையாளர், தொலைக்காட்சி தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் நிறுவனத் தலைவர்
விருதுகள்

பிரான்சு நாட்டின் துறைமுக நகரங்களில் ஒன்றான பொர்தோ நகரத்தில் நோவியன் பிறந்தார். சில காலம் பத்திரிகையாளராக வாழ்ந்த பின்னர் இவர் கடல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தில் ஈடுபட்டார்.[1] இப்பணிக்காக 2012 ஆம் ஆண்டு சிறந்த பெண்மணி என்பதற்கான கோப்பை வழங்கப்பட்டது.[2] 2018 ஆம் ஆண்டு சூழலியல் அமைப்பின் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதும் நோவியனுக்குக் கிடைத்தது. இவ்விருதைப் பெறும் இரண்டாவது பிரான்சு நபர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.[3][4] முன்னதாக 1992 ஆம் ஆண்டு உயிரியலாளர் கிறிஸ்டியன் இழீன் இவ்விருதைப் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Rencontre avec des femmes remarquables 4/4" (PDF). bloomassociation.org (in French). Archived from the original (PDF) on 7 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 9 February 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  2. "Le palmarès des Femmes en Or 2012". luxsure.fr (in French). 17 December 2012. பார்க்கப்பட்ட நாள் 9 February 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Claire Nouvian, l’écolo-gagnante" (in French). Le Monde. 23 April 2018. https://www.lemonde.fr/planete/article/2018/04/23/claire-nouvian-l-ecolo-gagnante_5289172_3244.html#SqSAt6C6iaIkV5VD.99. பார்த்த நாள்: 9 February 2019. 
  4. "How a vampire squid inspired a Goldman prize-winning marine life champion". The Guardian. 23 April 2018. https://www.theguardian.com/world/2018/apr/23/how-a-vampire-squid-inspired-a-goldman-prize-winning-marine-life-champion. பார்த்த நாள்: 9 February 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாய்ரி_நோவியன்&oldid=3928941" இலிருந்து மீள்விக்கப்பட்டது