கிளாரா லூயி மாஸ்

கிளாரா லூயி மாஸ் (Clara Louise Masss , ஜூன் 28, 1876 – ஆகஸ்ட் 24, 1901 ) ஒரு அமெரிக்க செவிலியர். இவர் மஞ்சள் காய்ச்சல் நோய்க் கிருமிக்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பதற்காகத் தன் உயிரையும் தியாகம் செய்த பெண்மணி.[1][2]

கிளாரா லூயி மாஸ்
பிறப்புகிளாரா லூயி மாஸ்
28-06-1876
மேற்கு ஆரஞ்சு, நியூ செர்சி
இறப்பு24-08-1901
கியூபா
அறியப்படுவதுமஞ்சள் காய்ச்சல் மருத்துவ பரிசோதனை ஆய்வுகள்
மருத்துவப் பணிவாழ்வு
தொழில்ஒப்பந்த செவிலியர், ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை

பிறப்பு

தொகு

இவர் 1876ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் நாள் அமெரிக்காவின் கிழக்கு ஆரஞ்சு நகரில் (நியூ ஜெர்சி) பிறந்தார். சிறு வயதிலிருந்தே மக்கள் சேவையைத் தான் பணியாகச் செய்வேன் என்று உறுதிக் கொண்ட லூயி 1895ம் ஆண்டு நோவார்க் ஜெர்மன் மருத்துவமனையில் செவிலியர் பயற்சி பெற்று பட்டம் பெற்றார். பின், 1898ல் நோவார்க் ஜெர்மனிய மருத்துவ மனையின் செவிலியராக நியமிக்கப்பட்டார்.[3]

இராணுவ சேவை

தொகு

1898 ஏப்ரல் மாதம் எசுப்பானிய அமெரிக்கப் போர் நடந்த சமயத்தில் அமெரிக்க இராணுவத்தின் ஒப்பந்தச் செவிலியராக நியமிக்கப்பட்டார். 1898 அக்டோபர் முதல் பிப்ரவரி வரை, புளோரிடா, ஜோர்ஜியா, சான்டிகோ உள்ளிட்ட பல முகாம்களில் பணியாற்றினர். 1899 முதல் 1900 வரை அமெரிக்க ராணுவப் படையில் சிறப்புச் செவிலியராகப் பணியாற்றினர்.[4] இராணுவப் பணியின் போது ஒரு சில இராணுவ வீரர்களே அடிப்பட்டனர். பலர், தொற்றுநோய் பாதிக்கப்பட்டவராகவே இருந்தனர். குறிப்பாக, டைபாய்டு, மலேரியா, டெங்கு, மஞ்சள் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் தாக்கப்பட்டவர்களே அதிகமாக காணப்பட்டனர். நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் போது லூயி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உடனடியாக அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டர்.

மஞ்சள் காய்ச்சல் ஆய்வுகள்

தொகு

லூயி இரண்டு மாதங்களில் குணமடைந்தார். பின்னர் அமெரிக்க இராணுவ மஞ்சள் காய்ச்சல் ஆணையத்தில் பணி புரிந்த வில்லியம் கார்காஸ் என்பவரால் கியூபாவுக்குப் பணியாற்ற அழைக்கப்பட்டார். கியூபாவை அச்சுறுத்திய மஞ்சள் காய்ச்சலைக் கட்டுப்படுத்த போராடினார் ஆணையத்தின் தலைவர் மேஜர் வால்டர் ரிட். மஞ்சள் காய்ச்சலுக்கான ஆய்வுக் கூட சோதனையைச் செய்ய முடியாமல் மருத்துவர்கள் திணறினர். காரணம், மனிதர்களிடம் மட்டுமே பரவிய இந்த நோய், விலங்குகளைப் பாதிக்கவில்லை. எனவே விலங்குகளைப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தாமல், மனிதர்களிடமே பரிசோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அமெரிக்க அரசு பரிசோதனைக்கு உட்படுத்தும் தன்னார்வலர்களுக்கு உதவித் தொகை கொடுக்க முன்வந்தது. மேலும், உடல்நலம் குன்றினால் கூடுதலாக நூறு $ தரப்படும் என்று அறிவித்தது. ஆனால், யாரும் முன்வரவில்லை. மக்களை நோயிலிருந்து காப்பாற்ற அவரே உடன்பட்டார். "நோய்வாய்ப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் தான், அந்த நோயே வராமல் தடுக்க முடியம் என்றால், அதற்காக என் உயிரைத் தியாகம் செய்யவும்" தயார் என்றார். 1901ம் ஆண்டு மார்ச் மாதம் மஞ்சள் காய்ச்சலால் பதிக்கப்பட்டவர்களைக் கியூலெக்ஸ் போசியட்டா (Culex fasciata) கொசுக்கள் லூயியை கடிக்க விடப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வகை கொசுக்கள் கடித்து மஞ்சள் காய்ச்சல் நோய் தொற்றியது. அவரின் உடலில் அதிக நோய் சக்தி காரணமாக விரைவிலேயே குணமடைந்தார்.

இறப்பு

தொகு

லூயி மீண்டும் 1901ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் நாள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இம் முறை ஒரு வாரம் நடந்த சோதனையில் ஆகஸ்ட் 18ம் நாள் அவருக்கு மோசமான காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவர்கள் போராடியும் பலனளிக்கவில்லை. பின், 1901ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் நாள் மஞ்சள் காய்ச்சல் நோய்க்குப் பலியானார். அவர் மறைவுக்குப் பின் 'மனிதர்களை ஆய்வுகளுக்கு உட்படுத்தும் பரிசோதனைகளை' அரசு கைவிட்டது. லூயி ராணுவ மரியாதையுடன் ஹாவானாவில் உள்ள கோலன் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார் [5].

தாக்கம்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. "Yellow Fever Experiments Have Deadly Results. Clara Maass, the Girl Martyr, Buried In Colon Cemetery. She Was the Third to Die Out of Eight Bitten -Hers Was a Pathetic Case, a Trained Nurse, Who Had Served on the Battlefields of Santiago and About Manila, Often Exposed to Fever Infection. Girl Martyr. Clara Maass, Trained Nurse, the Third to Die in the Yellow Fever Experiments in Havana, Order to Turn Over Testimony. Cuban Newspaper Man Killed.". Boston Globe. August 27, 1901. "Of the eight persons bitten by infected mosquitoes in connection with yellow fever board during the last three weeks three have died." 
  2. Stanton E. Cope. 2011. Clara Maass: An American Heroine. Wing Beats 22(2): 16-19.
  3. Russell Roberts (1995). Discover Hidden New Jersey. Rutgers University Press. pp. 49–54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8135-2252-8.
  4. Lynn Wenzel & Carol J. Binkowski (2003). More Than Petticoats: Remarkable New Jersey Women. TwoDot. pp. 84–95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7627-1272-4.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Clara Louise Maass, Find A Grave. Accessed August 23, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாரா_லூயி_மாஸ்&oldid=3673929" இலிருந்து மீள்விக்கப்பட்டது